Wednesday, February 23, 2011

அப்பிள் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு ஐ பேட்


  அப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் கணனிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

அப்பிள் நிறுவனத்தின் தகவல்களுமைய சுமார் 15 மில்லியன் ஐ பேட்கள் உலகம் முழுவதும்ம் விற்பனையாகியுள்ளன.


அதனை முன்மாதிரியாகக் கொண்டு பல முன்னணி நிறுவனங்களும் ஐபேட் போன்ற டெப்லட் ரக கணனிகளை வெளியிட்டுள்ளன.

இருந்த போதிலும் இவை ஐ பேட் அளவிற்கு வரவேற்பைப் பெற முடியவில்லை.

இந்நிலையில் அப்பிள் இரண்டாவது ஐ பேட் இனை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி சென் பிரான்சிஸ்கோவில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஐ பேட் 1 ஐ விட இதில் பல புதிய வசதிகள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் உருவத்தில் முன்னையதினை விட மெல்லியதாகவும் பாரம் குறைந்ததாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.