Saturday, February 26, 2011

ஒரு நோயாளிக்கு இரு இதயங்கள்! : மருத்துவ உலகின் புதிய சாதனை! (காணொளி இணைப்பு)

மருத்துவ வரலாற்றில் மிக அரிதான சத்திரசிகிச்சை ஒன்றை அமெரிக்க வைத்தியர்கள்
அண்மையில் வெற்றிகரமாக முடித்தனர்.

நோயாளி ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு
இதயத்தினைப் பொருத்தியே அவர்கள் இச்சாதனையைப் புரிந்தனர்.

சென் டியாகோ
தோர்டன் வைத்தியசாலையிலேயே இச்சத்திரசிகிச்சை இடம்பெற்றது.

டைசன் ஸ்மித்
என்ற 36 வயதான நபருக்குச் சாதாரண இதயத்தின் அருகில் வலது பக்கத்தில் இன்னொரு இதயம்
இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது.

இதயத்தின் இடது இதயவறை, புது இதயத்துடன்
சத்திரசிகிச்சையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒக்சிஜன் ஏற்றம் பெற்ற
குருதி, பழைய இதயத்திலிருந்து புதிய இதயத்திற்குப் பாய்ச்சப்படும்.


இதன்பிறகு புதிய இடது இதயக்கீழறையிலிருந்து குருதியானது பெருநாடியின் மூலம்
உடலின் பாகங்களுக்கும் பாய்ச்சப்படும். ஓர் இதயம் செய்யும் வேலையை இரு இதயங்களும்
பகிர்ந்துகொள்ளும்.


குறித்த நபரின் இதயம் பலவீனமடைந்திருந்தமையினாலேயே
அவருக்கு இன்னுமொரு இதயம் பொருந்தப்பட்டது. இச்சத்திர சிகிச்சையானது 'ஹெடரோடொபிக்
ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேசன்' என அழைக்கப்படுகின்றது. மிகவும் அரியதொரு
சத்திரசிகிச்சையாக இது கருதப்படுகின்றது.

இது நோயாளின் வாழ்நாளை 10
வருடங்களால் அதிகரிக்கும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள்
தெரிவித்துள்ளனர்.

இரு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கும் காட்சியையே
இங்கு காண்கிறீர்கள்.
_