Saturday, February 5, 2011

ஓசோன் தேய்விற்கான காரணங்கள்

ஓசோன் தேய்விற்கு ஓசோனை தேய்வடைய செய்யக்கூடிய பொருட்களை வெளியிடுதலே (Ozone Depleting Substances) காரணங்களாக உள்ளன. இப்பொருட்கள் பிரதானமாக மனித உருவாக்கங்களாகவே உள்ளதுடன் இதற்கு காரணமாக குறிப்பிட்டு காட்டக்கூடிய இயற்கை மூலகங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
 இவ்வாறான ஊறுவிளைவிக்கும் பொருட்கள் கைத்தொழில் விவசாய நடவடிக்கைகள் மூலம் உருவாக்கப்படுகின்றது அல்லது பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக குளோரோ புளோரோ காபன் (CFC, Chloro floro Carban), கார்பன் தெட்ராகுளோரைட் (Carban Thetrachlorite), ஐதரோ குளோரோ புளோரோ கார்பன் (HCFC) மற்றும் மெதில் புரோமைட் (Methil Bromite) போன்றவை பிரதானமாக ஓசோன் தேய்விற்குக் காரணமாக உள்ளன. இவ்வூறு விளைவிக்கும் காரணிகள் மேல் வளிமண்டலத்தினை அண்மித்தவுடன் சக்தி வாய்ந்த அவற்றின் அணுக்களினை பகுதி பகுதியாக பிரித்துவிடுகின்றது. அப்பொருட்களை உருவாக்கியுள்ள அணுக்கள் அனைத்தும் விடுவிக்கப்படுகின்றன. உதாரணமாக குளோரீன் மற்றும் புரோமின் அணுக்களை குறிப்பிடலாம். இவ்வாறு விடுவிக்கப்பட்ட அணுக்கள் தமக்கு சேதம் விளைவிக்காது பிற பொருட்களை சேதமடைய செய்யும் செயற்பாட்டினூடாக ஓசோன் படை தேய்வினை துரிதப்படுத்துகின்றது. ஒவ்வொரு அணுவும் வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்பதாக ஆயிரக்கணக்கான ஓசோன் மூலகங்களை அழிக்கக்கூடிய திறன்வாய்ந்தனவாக காணப்படுகின்றன. குளோரின் மற்றும் புரோமின் அணுக்களின் ஒன்றுகூடலானது மேல்வளிமண்டலத்தில் ஓசோன் அழிவு செயற்பாட்டினை துரிதப்படுத்தியதன் விளைவாக சிறப்பாக முனைவுப்பகுதிகளில் ஓசோனின் அளவினை தாழ்நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. 1980 இல் பாரதூரமாக ஓசோனின் அழிவிற்கு ஹலோகனின் அழிக்கக்கூடிய நடவடிக்கைகள் காரணமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதனையே ஓசோன் துவாரம் (Ozone hole) எனவும் அடையாளப்படுத்தியுள்ளனர். 'தடித்த எழுத்துக்கள்சாய்ந்த எழுத்துக்கள்