Wednesday, February 23, 2011

புகைப்பதால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் இழப்பு: அதிர்ச்சித் தகவல்!

புகைபிடிப்பதால் தனது வாழ்நாளில் 10 ஆண்டுகள் வரை புகைப் பழக்கம் கொண்டவர்கள் இழக்கக் கூடும் என்ற அதிர்ச்சி அளிக்கும் தகவல், அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற ஆய்வு ஒன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. புகைப் பழக்கத்தோடு பிற உடல்நலக்கேடான பழக்கங்களும் இருந்தால் 15 ஆண்டுகள் வரை வாழ்நாள் இழப்பு ஏற்படும் என்றும் அதில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக 35 வயதைத் தாண்டியவர்கள் புகைப் பிடிக்கும் பழக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தால் கேடு பன்மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
புகைப்பழக்கம் இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை விரைவாக்குகிறது என்றும், அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை உட்கொள்வதாலும், சோம்பிய வாழ்க்கைப் பழக்கத்தாலும் மாரடைப்பு ஏற்படுவது விரைவுபடுத்தப்படுவதாகத் தெரிகிறது.
புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள் தமனி அடைப்புகள் நீங்கி வாழ்நாள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது.
இந்த ஆய்வு குறித்த கருத்து தெரிவித்த புகைபிடிப்பவர் ஒருவர் "புகைக்காமல் வாழ்பவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" எனத் தெரிவித்தார்.