Saturday, February 26, 2011

விண் வீழ்கற்கள் அல்லது மெட்டியோரைட்டுகள்

'விண்வெளியில் ஹாயாக படு பயங்கரளமான வேகத்தில் ஒரு பேஸ்பால் அளவு உள்ள கற்கள் பறந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் சில ஒரு சிறு தானியம் அளவுக்கு சிறியதாகவும் இருக்கின்றன. இவ்வாறு விண்வெளியில் சுற்றித் திரியும் சிறிய பொருட்களை 'விண்வீழ் உடல்கள்’ என்று அழைக்கின்றனர்.

ஆங்கிலத்தில் இதை 'மெட்டீரோயராயிட்ஸ்’ (Meteoriods) என்கின்றனர். இந்த சிறு துகல் ஒன்று பூமியின் வளிமண்டலத்தினுள் நுழைந்த உடனே, நம் வளிமண்டலத்தில் உள்ள மூலக்கூறுகளுடன், உராய்கின்றன. இந்த உராய்வால் அவற்றின் வெப்பநிலை 3000 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு உயர்கிறது.


இந்த அதிக வெப்பநிலையால் அந்த துகல் ஆவியாகிறது. பி
ன் ஒளிர்கிறது., இவ்வாறு ஒளிரும் துகள்கள் அழகான ஒரு காட்சியை நமக்கு முன் வைக்கின்றன. இந்த நிகழ்வை 'ஷூட்டிங் ஸ்டார்ஸ்’ (Shooting Stars) என்று அழைக்கின்றனர். இருட்டான இரவு நேர வானத்தில் சில சமயங்களில் இவ்வாறு 'விண்வீழ்’ (Meteors)  அழகான காட்சியை நாம் காண முடியும். வானத்தில் இருந்து விண்மீன்கள் சில வழுக்கி விழுந்தது போல இக்காட்சி அழகாக இருக்கிறது. விண் வீழ் உடல் ஒன்று பூமியின் வளிமண்டல எல்லையை அடைந்த உடனே அது 'விண் வீழ் கொள்ளி’ என (Meteors) என அழைக்கப்படுகிறது.


சில சமயங்களில் இந்த விண் வீழ் உடல்களில் பெரிய அளவானவை பூமியின் வளி மண்டலத்தில் தப்பிப் பிழைத்து மேற்பரப்பை நோக்கி மோதுகின்றன. இவ்வாறு பூமியின் மேற்பரப்பில் வந்து மோதும் பெரிய அளவான மெட்டியோர்களை 'விண் வீழ் கற்கள்’ (Meterorites) என அ
ழைக்கின்றனர்.

இந்த விண் வீழ்கற்கள் எல்லாமே ஆஸ்டெராய்டுகளின் உடைந்த பாகங்களாகவோ அல்லது கிரகங்களின் உடைந்த பாகங்களாகவோ உள்ளன. இவற்றில் சிறிய துகள்கள் போல உள்ளவை காமெட்டுகளால் வெளியே விடப்பட்டவை ஆகும். விண்வீழ் உடல்களில் சில மணிக்கு 48300 கிலோமீட்டர் என்கிற அசுர வேகத்தில் பயணிக்கின்றன. இந்த விண்கற்கள் பெரும்பாலும் இரண்டு வகைகளாக உள்ளன. ஒரு வகை பெருமளவு பாறைகளால் ஆனதாக உள்ளது, இன்னொரு வகை இரும்பு மற்றும் நிக்கல் என்கிற உலோகங்களால் ஆனதாக உள்ளது.


சில பெரிய கற்கள் வளி மண்டலத்தில் பெரிய அளவில் வெடித்து சிதறுகின்றன. இதனால் தீப்பந்து போல பிரகாசமாக வானில் தோற்றம் உண்டாகிறது. 1903 ஆம் ஆண்டு ஜூன் 30ம் நாள் சைபீ
ரியாவில் உள்ள துங்கஸ்கா எனும் நதிகரையோரம் இப்படி ஒரு பெரிய விண் கல் ஒன்று வானத்திலேயே வெடித்துச் சிதறியதாக நம்பப்படுகிறது. இதனால் பல நூறு சதுர கிலோமீட்டர்களில் காடானது தரை மட்டமாகி விட்டது. இந்த வெடியால் ஏற்பட்ட தீப்பந்து பல நூறு கிலோமீட்டர்கள் வானில் பரவியது. இந்த வெடியின் சத்தமும், இதனால் உண்டான தீயும் பக்கத்து கிராமங்களில் கேட்டது. நல்லவேளையாக அந்த பகுதி காட்டுப்பகுதி என்பதால் உயிர் சேதம் எ
துவும் அதிகம் ஏற்படவில்லை.

அமெரிக்காவில் அரிசோனா என்னும் இடத்தில் ஒரு விண்வீழ் கல் ஒன்று 25,000 வருடங்களுக்கு முன் மோதியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட பள்ளம் 600 அடி ஆழமாக உள்ளது. அதே அளவு விண்கல் ஒன்று இன்றைய உலகின் ஒரு நகரின் மேல் விழுந்தால், அந்த முழு நகரமும் முழுவதுமாக அழிந்து போயிருக்கும். அதன் உயிர்கள் மொத்தமாக அழிந்து போயிருக்கும்.

விண் கற்கள் பூமி தோன்றின ஆரம்ப நாட்களில் தொடர்ச்சியாக அதனை மோதிக் கொண்டே இருந்தன என்றும், இதனால் பூமியின் மேல் நிறைய 'கிரேடர்கள்’ எனும் பள்ளங்கள் உண்டானது என்றும் கருதப்படுகிறது. நாளடைவில் பூமியின் காற்று, நிரோட்டம், உயிர் வாழ்க்கை போன்றவற்றால் அவை மறைந்து விட்டன. ஆனால் நிலவு போன்ற காற்று, நீர், உயிர்கள் எதுவும் இல்லாத உடல்களில் இந்த பள்ளங்கள் மறையாமல் அப்படியே பல கோடி வருடங்களுக்கு இருக்கும். இதனால் தான் நிலவில் நிறைய பள்ளங்கள் உள்ளன. விண்வீழ் கற்கள் என்பவை பூமியைப் போலவே 4.6 பில்லி
யன் வருடங்களுக்கு முன்னால் தோன்றியவையாகும்.

'மெட்டியோர் ஷவர்’ (Meteor Shower) என்று ஒன்று உள்ளது. அதாவது காமெட்டுகள் சூரியனை நெருங்கி வரும்போது, சூரிய வெப்பத்தால் அதன் தூசுக்கள் வெளியே ஆவியாகி அதனைச் சூழ்கின்றன. இந்த தூசு
க்கள் காமெட்டை விட்டு வெளியேறி சூரியனை தன் சுற்றுப்பாதையில் சுற்றுகின்றன. பூமி சூரியனைச் சுற்றின தன் சுற்றுப்பாதையில் சில சமயம் இந்த துகள்களைக் கடந்து செல்கிறது. இந்த துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் எரிந்து ஒளிர்கிறது. இவ்வாறு நிறைய துகள்கள் ஒளிர்வதை 'மெட்டியோர் டிவர்’ என்கின்றனர்.

ஆதி கால மனிதர்கள் இப்படி வானில் ஒளிரும் பொருட்களை கடவுளோடும் மதத்தோடும் தொடர்புபடுத்தினர். பூமியில் விழும் விண்கற்கள் இறைவனின் தூதுவர்களிடமிருந்து வந்த அன்பளிப்புகள் என கருதினர். சிலர் இவற்றை கடவுளின் கோபம் என்று கூட கருதினர்.