Sunday, February 13, 2011

கைவிரலால் கணக்குப் பார்த்துவிடலாமே

ஐயாயிரம் பத்தாயிரம் என்றால் எப்படியாவது எண்ணி முடித்துவிடலாம். ஆனால் லட்சக் கணக்கில், கோடிக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை சில நிமிடங்களில் கச்சிதமாக எண்ணி முடிக்க என்ன வழி..? வங்கிகள் என்றால் இதற்கென கவுன்ட்டிங் மெஷின்கள் இருக்கும். வங்கிகளுக்கோ, பெரிய நிறுவனங்களுக்கோ அதை வாங்கி வைப்பதில் பெரிய பிரச்னை எதுவுமில்லை.ஆனால், தனி நபர்களுக்கு அது சாத்தியமில்லாத விஷயம்.
 உங்களின் இந்தக் கவலையைப் போக்கத்தான் வந்திருக்கிறது பணத்தை எண்ணும் மோதிரமான 'கவுன்ட்டிங் ரிங்’.
.
இந்த கவுன்ட்டிங் ரிங்கை உங்கள் கட்டை விரலில் மோதிரம் போல மாட்டிக் கொள்ள வேண்டும்.
 மோதிரத்தில் உள்ள பவர் சுவிட்சை ஆன் செய்து கொண்டால், அதன் டிஸ்பிளேயில் ஜீரோவைக் காட்டும். அடுத்து நீங்கள் பணத்தை வேகமாக மேலிருந்து கீழே அதன்மீது படுமாறு விட்டாலே போதும், மோதிரத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் ரப்பரானது இன்ஃப்ரா ரெட் தொழில்நுட்பத்தின் மூலம் எத்தனை நோட்டுக்கள் மேலிருந்து கீழே போயிருக்கிறது என்பதை அரை நொடியில் கச்சிதமாகக் கணக்கிட்டுச் சொல்லிவிடும். ஒன்றுக்கு இரண்டு முறை எண்ணிப் பார்த்து குறித்துக் கொண்ட பிறகு, டிஸ்பிளேயை மீண்டும் 'ரீசெட்’ செய்து கொள்ளலாம்
இதில் சிறிய அளவிலான பேட்டரி ஒன்று இருக்கிறது. உங்கள் வேலை முடிந்த பிறகு பேட்டரியை ஆஃப் செய்து கொள்ளலாம் என்பதும் விசேஷமான அம்சம். பல ஊர்களுக்குச் சென்று பணம் வசூல் செய்து வருபவர்களுக்கு கவுன்ட்டிங் ரிங் நிச்சயம் உதவிகரமாக இருக்கும்.