இந்த வருடத்தின் மே மாதம் தான் உலக வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவாகிய மாதமாக கணிப்பிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இந்த மே மாதம் தான் அதிக சூடாக இருந்ததாம்.1880 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக வெப்பம் இந்த வருட மே யில் தான் பதிவாகியுள்ளது.இதனை அமெரிக்காவின் (NCDC) தேசிய காலநிலை தரவு மையம் (National Climatic Data Centre) உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது.
புவி வெப்பமயமாதலும் இதற்கு ஒரு காரணம் எனத் தெரிவித்துள்ள அமெரிக்காவின் தேசிய காலநிலை தரவு மையம் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை, விவசாயம் போன்றன கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.உலகளாவிய ரீதியில் இந்த மே மாதம் தான் அதிக சூடாக இருந்ததாம்.1880 ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிக வெப்பம் இந்த வருட மே யில் தான் பதிவாகியுள்ளது.இதனை அமெரிக்காவின் (NCDC) தேசிய காலநிலை தரவு மையம் (National Climatic Data Centre) உறுதிப்படுத்தி தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை இந்தியா உட்பட தென்னாசிய நாடுகளையும் இந்த வெயில் கொடுமை விட்டு வைக்கவில்லை என அது மேலும் தெரிவித்துள்ளது.