Tuesday, July 3, 2012

குரோமின் வளர்ச்சிப்படியைக் காட்டும் கூகுளின் சுவாரஸ்ய காணொளி -தொழினுட்பத்தின் தெளிவு வீடியோ

இண்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பொக்ஸ் உலாவிகள் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருந்த காலத்தில் கூகுளும் குரோமினை அறிமுகப்படுத்தியது.
கூகுள் கடந்த 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குரோமினை வெளியிட்டது. 
குரோமின் எளிய தோற்றமும் செயல்படும் வேகமும் சிறப்பாக இருப்பதனால் நான்கே வருடங்களில் சுமார் 310 மில்லியன் பாவனையளர்களைப் பெற்று அபார வளர்ச்சி அடைந்துள்ளது. 
இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் ஆதிக்கத்தினைக் குரோம் வெகுவாக குறைத்துள்ளதுடன் பயர்பொக்ஸினையும் பின் தள்ளியது. 

குரோமின் படிப்படியான வளர்ச்சியை விளக்கும் காணொளியொன்றினை கூகுள் வெளியிட்டுள்ளது. 
 
அதுமட்டுமன்றி மேலும் சில மேம்படுத்தல்களை கூகுள் மேற்கொண்டுள்ளது. 
Chrome for Android moves Stable 
குரோம் உலாவி சில வாரங்களுக்கு முன்னர் அண்ட்ரோய்ட் மொபைல்களில் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டது. அண்ட்ரோய்ட் 4.0 மூலம் இயங்கும் மொபைல்களில் மட்டுமே பயன்படுத்தவென வெளியிடப்பட்ட குரோம் மென்பொருள் இதுநாள் வரை பீட்டா நிலையிலேயே இருந்தது. தற்போது சோதனைக் கட்டங்களைத் தாண்டி Stable வெர்சனாக வெளியிடப்பட்டு உள்ளது. 
Chrome for iOS 
அண்ட்ரோய்ட்டைத் தொடர்ந்து குரோம் பிரவுசரை iOS மூலம் இயங்கும் iPhone, iPad, iPod touch ஆகியவற்றிலும் உபயோகிக்க புதிய மென்பொருளை வெளியிட்டு உள்ளனர். டெஸ்க்டொப் கணனிகளில் உள்ளது போன்றே இதிலும் signed in வசதி உள்ளதால் புக்மார்க்ஸ், ஹிஸ்டரி, பாஸ்வேர்ட்ஸ் போன்றவைகளை சுலபமாக கையாளலாம். ___