கடந்த 60 வருடங்களுக்கு மேலாக தொழிற்சாலைகளில் ரோபோக்களின் பங்களிப்பானது தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றது.
எனினும் இந்த ரோபோக்களை இயக்குவதற்கு மனித மூளை மற்றும் வலு என்பன அவசியமாகக் காணப்பட்டன.
இதன் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது Universal Robots எனும் ரோபோக்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தினால் விபத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது ரோபோக்களை இயக்குவதற்கான விசேட செய்நிரல்களை தயாரித்து, அவற்றினை Tablet கணனிகளை பயன்படுத்தி செயற்படுத்துவதன் மூலம் விபத்துக்களுக்கு பரிகாரம் தேடும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளது.





