Thursday, December 20, 2012

இஞ்சி தரும் இன்பம்

இஞ்சி 

என்றென்றும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம்.
காலையில் எழுந்தவுடன் இஞ்சி டீ குடிப்பது நல்லது. குறிப்பாக கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் இஞ்சி டீ குடிப்பது அவசியம்.
ஏனெனில் காலை வேளையில் ஏற்படும் மசக்கையை தடுக்க இஞ்சி டீ ஒரு மிக சிறந்த இயற்கை வழியாகும்.

நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் சரியாக, இஞ்சியை ஒரு சிறிய துண்டுகளாக மென்று சாப்பிடலாம்.
மூட்டுவலிகள் மற்றும் வீக்கங்களை நீக்கும் பண்புகளை கொண்ட ஒரு சிறந்த இயற்கை வலி கொல்லி இஞ்சி. இது ஆர்த்ரிடிஸ் வலியினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மிகவும் பயன்படுவது.
குளிர், காய்ச்சல், தொண்டை புண், தலைவலி ஆகியவற்றிக்கு இஞ்சி ஒரு சிறந்த இயற்கை தீர்வாகும்.
ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சுடு தண்ணீரில் ஆவி பிடிக்கும் போது, இஞ்சி துண்டு அல்லது இஞ்சியின் சாறு இரண்டு டீஸ்பூன் விட்டு கொதிநிலையை அடைந்ததும் ஆவி பிடித்தால் ஜலதோஷத்தால் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும்.
வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமாவை போக்க ஒரு டீஸ்பூன் இஞ்சி சாறு, பூண்டு சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் மற்றும் ஆஸ்துமா பிரச்னை தீரும்.