Saturday, May 5, 2012

இன்று இரவு 11.35 மணிக்கு தென்பட இருக்கும் இவ்வருடத்தின் பெரிய நிலவு! ( வீடியோ)

இன்று வெசாக் பண்டிகை தினம். புத்த சமயிகளுக்கு மிகவும் முக்கியமான நாள். அத்துடன் இன்று சித்திரா பௌர்ணமியும்கூட. தமிழ் இந்துக்களுக்கும் மிக முக்கிய நாள்.
ஆனால் இவ்வருடத்தின் முக்கியமான நாள்களில் ஒன்றாக உலகத்தவர் அனைவருமே இன்றைய நாளை குறிப்பிடலாம்.
ஏனெனில் இவ்வருடத்தில் மிகப் பெரிய முழு நிலவு இன்றுதான் தென்பட இருக்கின்றது. இரவு 11.35 மணிக்கு இந்நிலவை காண முடியும்.

இன்றைய பௌர்ணமி 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீத ஒளி அதிகரிப்பு நிறைந்ததாகவும் இருக்கும். பூமிக்கு மிக அணித்தாக சந்திரன் வருவதாலேயே இவ்வதிசயம் நிகழ உள்ளது.