உடலை திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு யோகாசனம் இன்றியமையாததாக காணப்படுகின்றது.
பண்டைய காலக் கலையான இதனை புதிய தொழில்நுட்பத்துடன் இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் செய்வதற்கு SmartMat எனும் நில விரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்சார்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்நில விரிப்பானது விஷேட அப்பிளிக்கேஷன் மூலம் ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாகக் கணப்படுகின்றது.
இதன் பிரதான பணி உடலுக்கு சிறந்த சமநிலையை வழங்குதலாகும். மேலும் இது கூடவே சுருட்டி எடுத்துச்செல்லக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.