Tuesday, February 3, 2015

கடினமான சவால்களை இன்னமும் இலங்கை சந்திக்க வேண்டியேற்படும் : அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் நிஷா

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்­கவும் குறு­கிய காலத்தில் பல செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­துள்­ளனர். ஆனால் இலங்கை இன்னும் செய்­ய­வேண்­டிய பல கடி­ன­ மான நட­வ­டிக்­கைகள் உள்­ளன. மீண்டு வரு­வ­தற்கு பல கடி­ன­மான சவால்கள் இன்னும் காணப்­ப­டு­கின்­றன என்­ப­தனை நாம் அறிந்­துள்ளோம் என்று மத்­திய மற்றும் ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்கச் செய­லாளர் நிஷா பிஷ்வால் தெரி­வித்தார்.

பொரு­ளா­தா­ரத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்­புதல், ஊழலை தடுத்தல் மற்றும் நல்­லாட்­சியை முன்­னி­றுத்தல், அனைத்துப் பிர­ஜை­க­ளி­னதும் மனித உரி­மைகள் மற்றும் ஜன­நா­யக பங்­கேற்­பினை உறுதி செய்தல் என்­ப­வற்றில் பங்­கா­ள­ரா­கவும் நண்­ப­ரா ­கவும் இருக்கும் அமெ­ரிக்­காவை நம்­பலாம். இலங்­கை­யுடன் அமெ­ரிக்கா உள்­ளது என்றும் அவர் குறிப்­பிட்டார்.
இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ள மத்­திய மற்றும் ஆசிய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்கச் செய­லாளர் நிஷா பிஷ்வால் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிதன் பின்னர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.
கொழும்பில் அமைந்­துள்ள வெளி­வி­வ­கார அமைச்சு அலு­வ­ல­க­ததில் நேற்­றுக்­காலை இந்த சந்­திப்பு நடை­பெற்­றது. வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் நிஷா பிஷ்­வாலும் இதன்­போது சுமார் ஒரு மணி­நேரம் இரு­த­ரப்பு கலந்­து­ரை­யா­டலை நடத்­தினர்.
நேற்று முன்­தினம் இலங்கை வந்­த­டைந்த நிஷா பிஷ்வால் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினார்.
அத்­துடன் இன்­று­காலை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ள நிஷா பிஷ்வால் இன்று யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­ய­வுள்­ள­துடன் வட மாகாண முதல்வர் சி.வி. விக்­னேஷ்­வ­ர­னையும் சந்­தித்துப் பேச்சு நடத்­த­வுள்ளார்.
இந்­நி­லையில் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரு­ட­னான சந்­திப்பின் பின்னர் அமெ­ரிக்­காவின் இரா­ஜாங்க செய­லாளர் நிஷா பிஷ்வால் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கையில்
இலங்­கையின் ஜன­நா­யகம் தொடர்பில் உலகை பேச வைத்த சக்­தியை கண்­கூ­டாக காண்­ப­தற்கு இலங்­கைக்கு வருகை தந்­தி­ருப்­பது மிகுந்த மகிழ்ச்­சி­யாக உள்­ளது.
இலங்­கையில் நடை­பெற்ற வர­லாற்றுச் சிறப்­பு­டைய தேர்தல் மற்றும் அது திறந்­து­விட்­டுள்ள புதிய சந்­தர்ப்­பங்­க­ளுக்­காக இலங்கை வாக்­கா­ளர்­க­ளுக்கு அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மாவும் செய­லாளர் கெர்­ரியும் விடுத்த வாழ்த்துச் செய்­தி­களை மீண்டும் நினை­வுப்­ப­டுத்­து­கின்றேன்.
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் தமது 100 நாள் இலட்­சிய நிகழ்ச்சி நிரல் ஒன்றை முன்­வைத்­துள்­ள­துடன்இ மிகவும் குறு­கிய காலப்­ப­கு­தியில் அவற்றில் பல­வற்றை நிறை­வேற்­றி­யு­முள்­ளனர்.
ஆனால்இ இன்னும் புரிய வேண்­டிய விட­யங்கள் நிறை­யவே உள்­ளன. அத்­துடன் எதிர்­கொள்ள வேண்­டிய சிக்­க­லான சவால்கள் பலதும் உள்­ளதை நாம் அறிந்­துள்ளோம்.
பொரு­ளா­தா­ரத்தை மீளக்­கட்­டி­யெ­ழுப்­புதல். ஊழலை தடுத்தல் மற்றும் நல்­லாட்­சியை முன்­னி­றுத்தல். அனைத்துப் பிர­ஜை­க­ளி­னதும் மனித உரி­மைகள் மற்றும் ஜன­நா­யக பங்­கேற்­பினை உறுதி செய்தல் என்­ப­வற்றில் எம்மை பங்­கா­ள­ரா­கவும்இ நண்­ப­ரா­கவும் இலங்­கை­யா­னது அமெ­ரிக்­காவை நம்­பலாம். இலங்­கை­யுடன் அமெ­ரிக்கா உள்­ளது.
எமது நட்பு பல தலை­மு­றை­களைக் கொண்­டது. இலங்கை சுதந்­திரம் அடைந்­தது முதல் அமெ­ரிக்­கா­வா­னது. 2 பில்­லியன் டொலர்­க­ளுக்கும் மேற்­பட்ட உத­வி­களை இலங்­கைக்கு வழங்­கி­யுள்­ளது.
அமெ­ரிக்­காவைப் போன்று வேறு எந்த நாடு­களும் அதி­க­ளவில் இலங்கை உற்­பத்­தி­களை கொள்­வ­னவு செய்­வ­தில்லை. வர்த்­தகம் மற்றும் முத­லீட்­டினை மேம்­ப­டுத்­து­வதில் எமது பங்­கா­ளித்­து­வத்தை வளர்ப்­ப­தற்கும். வலுப்­ப­டுத்­து­வ­தற்கும். எமது மக்கள். அர­சாங்­கங்கள் மற்றும் சிவில் சமூ­கங்கள் வர்த்­த­கங்கள் ஆகி­ய­வற்­றுக்கு இடையில் உறவை வளர்ப்­ப­தற்கும் நாம் எதிர்­பார்த்­துள்ளோம்.
வெளி­நாட்டு விவ­கார அமைச்­ச­ரு­ட­னான சந்­திப்பின் போது. எனது அர­சாங்­கத்தின் சார்பில் இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் ஆர்வம் சார்ந்த அனைத்துப் பிரிவுகளிலும் ஆக்கப்பூர்வமான வழிவகைகளை கண்டறிவதில் அவருடனும். அரசாங்கத்துடனும் பணியாற்றுவதற்கான எமது ஆர்வத்தை தெரிவித்தேன்.
அத்துடன், அடுத்த வாரம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் வாஷிங்டனுக்கு விஜயம் செய்யும் போது உங்களை சந்திப்பதிலும். எமது இரண்டு நாடுகளுக்கும் இடையில் தொடர்பை மேம்படுத்துவதிலும்இ ஆழமாக்குவதிலும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஆர்வமாக உள்ளார் என்றார்.