Thursday, February 5, 2015

தைவான் விமான விபத்து ; ஹீரோ ஆன விமானி (வீடியோவைப் பாருங்கள்)

தைவானில் நேற்று பயணிகள் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
விபத்துக்குள்ளான விமானம், ஓடு பாதையில் இருந்து புறப்பட்ட சிலி நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆற்றில்
விழுந்தது. இந்த விமானத்தில் இருந்த விமானி, மிக சாதுர்யமாக செயல்பட்டதாலேயே, விமானம் எந்த கட்டடத்தின் மீதும் மோதாமல் ஆற்றில் விழுந்ததாகவும், இல்லையென்றால் மிக மோசமான விபத்து நேரிட்டிருக்கும் என்றும் தையே மேயர் கோ வென் ஜி கூறினார்.
விமானத்தில்  கோளாறு ஏற்பட்டதை தெரிந்து கொண்ட விமானி, உடனடியாக அதனை எந்த கட்டடத்தின் மீதும் இடிக்காமல் வெகு சிரமப்பட்டு ஆற்றில் வீழ்த்தியுள்ளார்.
இதற்கு விபத்து நிகழ்ந்த சில நொடிகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவே உதாரணம் என்று கூறப்படுகிறது.