Tuesday, February 3, 2015

சம்சுங் நிறுவனத்தின் வயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்

சம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலம் சார்ஜ் செய்யக்கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.
இது தொடர்பாக சம்சுங் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி இக்கடிகாரமானது Orbis  எனும் பெயருடன் வட்ட வடிவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் Tizen  இயங்குதளம் நிறுவப்படவுள்ளதாகவும், பார்சிலோனாவில் இடம்பெறவுள்ள  Mobile World Congress நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.