சிரியஸ் B என்பது வெறுமனே 11,100 கிலோ மீட்டர்கள் விட்டம் கொண்ட ஒரு சிறிய விண்மீன். இது நம் பூமியின் விட்டத்தை விடவும் குறைவாகும். இதன் நிறை நம் சூரியனின் நிறை அளவு உள்ளது. சூரியன் அளவு கனமான ஒரு உருவம் பூமி போன்ற ஒரு வடிவத்தில் அடங்கியிருந்தால் அதன் அடர்த்தியும் அதன் ஈர்ப்பு விசையும் எவ்வளவு இருக்கும் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.ஆனால் வெள்ளைக் குள்ளன் வகை விண்மீன் முழுவதுமே சிதைந்த பருப்பொருட்களால் ஆனவையாக உள்ளன. (சூரியனின் மையக்கருவின் வெப்பநிலை சுமார் 16 மில்லியன் டிகிரி கெல்வின்கள் ஆகும்). சிவப்பு ராட்சதன்கள் இவ்வாறு வெள்ளைக் குள்ளன்களாக சுருங்கும் போது, அவற்றின் வெளி அடுக்குகளில் இருக்கும் வாயுக்கள் சில நேரம், சுருங்கும் போது ஏற்படும் அழுத்தத்தின் விளைவாக வெளியேற்றப்படுகின்றன. இவ்வாறு வெளியேறும் வாயுக்கள் வெள்ளைக் குள்ளன்களைச் சுற்றிலும் ஒரு புகை வளையம் போலக் காட்சியளிக்கின்றன. இது ஒரு கிரகத்தின் அல்லது கோளின் சுற்றுப்பாதை போல இருப்பதால், இதனை 'கிரக நெபுலா’ (Planetary Nebula) என்று அழைக்கின்றனர்.