சிவப்பு ராட்சதன்கள் என்பவை உண்மையில் ஒரு விண்மீனின் இறுதி கட்ட நிலை ஆகும். மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் எப்படி பிறப்பு, வாழக்கை மற்றும் இறப்பு என்று ஒரு பரிணாமம் உள்ளதோ, அதே போல விண்மீன்களுக்கும் கூட ஒரு பரிணாம வளர்ச்சி உள்ளது. இதை 'விண்மீனின் பரிணாம வளர்ச்சி’ (Stellar Evolution) என்கின்றனர். இந்த பரிணாம வளர்ச்சியின் இறுதி கட்டங்களில் தான் ஒரு விண்மீன் சிவப்பு ராட்சதனாக மாறுகிறது.
ஒரு விண்மீனின் மையப் பகுதியில் நடைபெறும் அணுக்கரு வினைகள் (Nuclear Reactions) என்பவை தான் விண்மீனின் ஆற்றலுக்குக் காரணம் என்று முன்பே சொல்லியிருந்தேன். அதாவது ஹைட்ரஜனின் அணுக்கருக்கள் இணைந்து ஹீலியமாக மாறுகின்றன. இந்த ஹீலியம் மெதுவாக விண்மீனின் மையப்பகுதியில் அப்படியே கேரமாகி, ஒரு ஹீலியம் மையப்பகுதியை (Helium Core) உருவாக்குகிறது.
ஹீலியம் மையப்பகுதியில் சேகரமாகும் போது அதனைச் சுற்றியுள்ள வெளி சுற்றுப் பரப்பில் ஹைட்ரஜன் இணைவு வினைகள் நடக்கின்றன. காலப்போக்கில் இந்த மையப்பகுதி மிகவும் கனமானதாகவும், மிகவும் அழுத்தமானதாகவும் மாறுகிறது. (ஹீலியம் என்பது ஹைட்ரஜனை விடவும் கனமானதாகும்) மையப் பகுதியின் அழுத்தமும் கனமும் அதன் வெப்ப நிலையை முன்பு இருந்ததை விடவும் அதிகமாக மாற்றுகின்றன.
காலப்போக்கில் ஹீலியம் அணுக்கருவே இணைந்து மற்ற கணமான தனிம அணுக்களை உருவாக்குமளவுக்கு விண்மீனின் மையப்பகுதியில் வெப்பநிலையும் அழுத்தமும் அதிகமாகிறது. ஹீலியம் அணுக்கருக்கள் கார்பன் மற்றும் ஆக்ஸிஜன் போன்ற கனமான அணுக்களாக இணையும் போது அபரிமிதமான வெப்ப ஆற்றல் விண்மீனினி மையப்பகுதியில் உருவாக்குகிறது.
இந்த ஹீலிய இணைவு (Helium Fusion) வினைகளால் வெளிப்படும் வெப்ப ஆற்றல் விண்மீனின் சுயஈர்ப்பு விசையை சமநிலைப்படுத்தத் தேவையான ஆற்றலை விட மிகவும் அதிகமாக உள்ளதால், விண்மீன் மெதுவாக விரிவடையத் தொடங்குகிறது.