இத்தாலியின் தலைநகரமான ரோமில் இன்று 11 ஆம் திகதி மே மாதம் 2011 இல் பாரிய நிலநடுக்கம் ஏற்படுமெனவும் இதனால் அந்நகரம் முற்றாக அழிந்துவிடுமெனவும் பூகம்பவியல் அறிஞர் ஒருவர் 1915 ஆம் ஆண்டு எதிர்வு கூறியிருந்தார்.
ஆனால் தற்போது இவரது எதிர்வு கூறல் ரோம் நகரில் இருந்து மக்களை பீதியில் வெளியேற வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது வதந்தியா? அல்லது உண்மையாக பேரழிவு ஏற்படப்போகின்றதே என்ற விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை இது தொடர்பான பல செய்திகள் ஊடகங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது.
இந்த எதிர்வு கூறலை மேற்கொண்டவர் யார்? இது ஏன் மக்களை இவ்வளவு தூரத்திற்கு பாதித்துள்ளது?
இதனை எதிர்வு கூறியரெபேல் பெண்டாண்டியின் என்ற இத்தாலிய விஞ்ஞானியான இவர் அக் காலத்தில் பூகம்பவியல் துறையிலும் நிபுணராக திகழ்ந்தார்.
1893 இல் பிறந்த இவர் தனது 86 ஆவது வயதில் 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி உயிரிழந்தார்.
இவர் வாழ்ந்த காலப் பகுதியில் இவர் பல பூகம்பங்களை சரியாக எதிர்வு கூறியுள்ளார்.
இதன் காரணமாக இவரின் எதிர்வு கூறல் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்தது.
1915 ஆண்டு ஜனவரி 13 ஆம் திகதி ஏற்படுமென இவர் எதிர்வு கூறிய பூகம்பமும், 1976 மே மாதம் 6 ஆம் திகதி பிரியுலி நகரத்தில் ஏற்படுமென இவர் எதிர்வு கூறிய பூகம்பமும் சரியாக ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கன.
இவர் கோள்களின் அசைவுகளின் மூலமே இவர் பூகம்பங்களை எதிர்வு கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு மாத்திரமன்றி 2012 ஆம் ஆண்டில் பாரிய பூகம்பங்கள் ஏற்படுமென அவரது குறிப்பில் எழுதியுள்ளார்.
எனினும் இவர் எந்த இடங்களில் ஏற்படுமென அதில் குறித்துவைக்கவில்லை.
அதில் ஒன்று தான் ஜப்பானில் ஏற்பட்டதென தெரிவிக்கப்படுகின்றது. மற்றையவை பற்றி குறிப்புக்கள் இல்லாத போதிலும் ரோமில் ஏற்படலாம் என்ற அச்சம் அந்நாட்டு மக்களிடையே வேகமாக பரவிவிட்டது.
இதற்கு சமூக வலைத்தளங்களின் பங்கும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களில் இச்செய்தி காட்டுத் தீ போல பரவியுள்ளது.
குறித்த செய்தினானது விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தியெனவும் பெண்டாண்டியின் குறிப்புக்களில் ரோமில் பூகம்பம் ஏற்படுமென எவ்வித குறிப்புக்களும் இல்லையென பெண்டாண்டி சங்கத் தலைவர் பஹாலோ லகோரியோ தெரிவித்துள்ளார்.