Thursday, May 5, 2011

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழல்வதனால் பாரிய தீப்பிழம்புகள் ஏற்படும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சூரியனின் இருண்ட பகுதிகள் சுழலுவதனால் பாரிய தீப்பிழம்பு உருவாவதாக ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளுக்கும் காந்தபுலங்களுக்கும் இடையிலான
செயற்பாட்டினால் கடந்த ஐந்து ஆண்டுகளில் சூரியனில் உருவான பாரிய சூரியப் பிழம்பு
உருவானதாக இங்கிலாந்தின் மத்திய பல்கலைக்கழ
க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


நாசா விண்வெளி ஆய்வு மையத்தின் சூரிய இயக்க கண்காணிப்பு கருவியின் மூலம் சூரியப்
பிழம்பு தொடர்பில் ஐந்து நாட்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

சூரியன் சுழலும் போது இருண்ட பகுதிகளின் இயக்கப்பாட்டினால் கடந்த பெப்ரவரி மாதம் பாரிய சூரியப் பிழம்பு உருவானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சன்ஸ்பொர்ட்ஸ் அல்லது சூரியனின் இருண்ட பகுதிகளினால் காந்தப்புல சக்தி உருவாவதாக
ஆய்வாளர் டேனியல் பிறவுண் தெரிவித்தார்.

இலாஸ்டிக் வயர்களை கைகளினால் இழுப்பதன் மூலம் அந்த வயர்களில் விசை
சேகரிக்கப்படுவதாகவும் அவற்றை விடும் போது சக்தியுடன் செயற்படுவதாகவும், இதனையொத்த
செயல்முறையே சூரியனின் இருண்ட பகுதியில் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

சூரியன் சுழலும் போது இருண்ட வலயங்களில் சக்தி சேமிக்கப்பட்டு அவை காந்தப்புல
சக்திகளுடன் மோதும் போது பாரிய ஒளியுடன் தீப்பிழம்பாக உருவெடுப்பதாக அவர்
தெரிவித்தார்.

க்ளாஸ் எக்ஸ் ரக சூரியப் பிழம்புகளே மிகவும் வலுவானவை எனவும் தெரிவித்தார்.