Sunday, May 29, 2011

மின்சார மனிதன் - வீடியோக்கள் இணைப்பு

இந்த உலகத்திலேயே உயிருள்ள பற்றறியாக செயல்படக் கூடிய ஒரே ஒரு நபர் சேர்வியா நாட்டைச் சேர்ந்த சிலவிசா பச்கிக். இவரது உடலுக்கு மின்சாரத்தை தாங்குகின்ற அபூர்வ சக்தி உள்ளது.


இதனால் இவரால் மின்சாரமாக செயல்படுகின்றமைக்கும் முடிகின்றது. மின்சாரத்தை பொறுத்த வரை வேறு எவருக்கும் இல்லாத சிறப்பியல்புகளைக் கொண்டிருக்கின்றமையாலேயே இவர் மின்சாரத்தின் நண்பன் என்று அழைக்கப்படுகின்றார்.


இவர் இச்சிறப்பு இயல்புகளை 17 ஆவது வயதில் முதன்முதல் அறிந்து கொண்டார். இவருக்கும் மின்சாரத்துக்கும் இடையிலான தொடர்பு கின்னஸ் சாதனைகளாக மலர்ந்து உள்ளது.


இவர் 20,000 வோல்ற் மின்சாரத்தை கின்னஸ் சாதனைக்காக 1983 ஆம் ஆண்டு ஏற்றிக் கொண்டார். உடலில் ஏற்றிக் கொண்ட மின்சாரத்தில் மின் கருவிகளை இயக்கச் செய்தமை மூலம் 2003 களில் இன்னொரு கின்னஸ் சாதனையை மேற்கொண்டார்.