Monday, July 18, 2011

பக்கவாத நோயைத் தடுக்கும் வாழைப்பழம்.

மூளைக்கு செல்லும் இரத்தம் தடைப்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. தினமும்3வாழைப்பழங்களை சாப்பிட்டால், பக்கவாத நோயை தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காலையில் ஒன்று, மதியம் ஒன்று, இரவு ஒன்று என்றுதினம் 3 வாழைப்பழங்கள் சாப்பிட்டால், போதிய அளவு பொட்டாசியம் கிடைக்கிறது.
இந்த பொட்டாசிய சத்துக்கள் மூலமாக மூளையில் ஏற்படும் இரத்த உறைவை தடுக்கமுடியும். பிரித்தானியா மற்றும் இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்துள்ளனர். தினமும்1600 மில்லி கிராம் பொட்டாசியத்தை நாம் எடுத்துக் கொள்ளும் போது பக்கவாத வாய்ப்புகள் 5ல்ஒரு பங்கு குறைகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு வாழைப்பழத்தில் சராசரியாக 500 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. இந்த பொட்டாசிய அளவு இரத்த அழுத்த அளவை குறைப்பதற்கும் உடலில் உள்ள திரவ சம நிலைக்கும் உதவுகிறது. இதேவேளை, வாயில் 24ற்கும் குறைவாக பற்கள் உள்ளவரை பக்கவாத நோய் தாக்குவதற்கு 60 சதவீத வாய்ப்பு அதிகம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு பல் ஈறில் ஏற்படும் நோய் தான் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் உள்ள ஹ்ரோஷிமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 358 நோயாளிகளை ஆய்வு செய்து இதை கண்டறிந்தனர். 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் உள்ள பக்கவாத நோயாளிகளுக்கு பற்கள் குறைவாக இருப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியவந்தது.