Friday, July 15, 2011

உலகின் முதலாவது 3D Smartphone LGயினால் அறிமுகம் (காணொளி இணைப்பு)

                                            உலகமெங்கும் 3D காய்ச்சல் அடித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் LG தனது பங்கிற்க்கு உலகின் முதலாவது 3D Smartphone ஆன LG Optimus 3D யினை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இந்த வருடம் வெளியாகி சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் Nintendo 3Dsயினைப்போலவே கண்ணாடியின் உதவியின்றி 3D அனுபவத்தினை இதில் அனுபவிக்கலாமென்பது இதன்சிறப்பம்சமாகும்.

இதன்மூலமாக உலகில் ஒரு புதிய புரட்ச்சியினை ஆரம்பித்து வைத்தது மட்டுமின்றி இரண்டு லென்சுகளையுடைய Dual 5MP கமராவினையும் இந்தத் தொலைபேசியினுள் வடிவமைத்துள்ளது LG. இதன்மூலம் நீங்கள் 3D வீடியோக்களை சொந்தமாக தயாரித்து இணையத்தில் உலாவிடலாம்.



அத்துடன் மேம்படுத்தப்பட்ட 4.3″ touchscreen வசதியுடன் கணனிகளில் இதுவரை பயன்படுத்தப்பட்ட Dual-Core Memory யினை தன்னகத்தே கொண்டுள்ள உலகின் முதலாவது கைத்தொலைபேசி என்ற சாதனையையும் இது படைத்துள்ளது.