Wednesday, July 27, 2011

ஆபத்தை தெரியப்படுத்தும் விஷேச பந்து(வீடியோ இணைப்பு)

ஆபத்தான இடங்களில் மாட்டிக்கொண்டு இருப்பவர்களை எப்படி காப்பாற்றுவது என கையை பசைந்து கொண்டிருக்க வேண்டாம். புது வளைய பந்து கருவி வந்துவிட்டது.


அது பறக்கும் வண்டைப்போல சத்தம் போடாமல் நினைத்த இடத்திற்கு பறந்து, இடிபாடுகள் மாதிரியான எந்த இடத்திலும் உட்கார்ந்து கொள்கிறது. ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டவுடன் அது வேலை முடித்துவிடுவது இல்லை.


எலும்புக்கூடு மாதிரி இருக்கிற தனது உடலில் பொருத்தி இருக்கின்ற கொமராவின் மூலம் விபரீத இடங்களை படம்பிடித்து அனுப்பிவிடுகிறது.
அது தரும் தகவல் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை மிகவும் எளிதாக காப்பாற்றி விடலாம். இந்த பந்து வளைய கருவி ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.



ஜப்பானிய பாதுகாப்பு துறை ஆராய்ச்சி நிபுணர் தான் இதனை கண்டுபிடித்து உள்ளார். ஜப்பானுக்கு நிலநடுக்கமும், சுனாமியும் பழக்காமான ஒன்றுதான். கடந்த மார்ச் மாதம் புகுஷிமா நிலநடுக்க சுனாமியில் 23 ஆயிரம் பேரை காணவில்லை. அவர்கள் மாயமாகி போனவர்கள் அல்லது இறந்து போனவர்கள் என அரசு அறிவித்துவிட்டது.
நிலநடுக்கம் போன்ற இடங்களுக்கு பறக்கும் பந்தை அனுப்பலாம்.

ஒரு மைல் வேகத்தில் இந்த கருவி பறக்கும் சக்திக்கொண்டது. தீ விபத்து, சுனாமி, நிலநடுக்கம் என எந்த ஆபத்து பகுதியிலும் இந்த வளையத்தை பறக்கவிட்டு, பாதிப்பு உள்ள இடத்தில் தவிக்கும் நபர்களை கண்டறியலாம். அதன்மூலம் அவர்களை மீட்க முடியும், தேடுதல் பணிக்காக ரேடியோ அலைகள் மூலம், கட்டுப்படுத்தப்படும் வகையில் இந்த கருவி உருவாகி உள்ளது.





பந்து வளையம் கறுப்பு வடிவத்தில் எலும்புக்கூடு வளையம் போன்று இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. 8 நிமிடம் வரை இந்த கருவி, அந்த இடத்தில் தொங்கிக் கொண்டே இருக்கும். பந்து வளையக் கருவியை ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சக தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவன நிபுணர் புமியுகி சடோ உருவாக்கி உள்ளார்.







இந்தக்கருவி 1390 டொலர் மதிப்பு உள்ளது. எடை குறைந்த கார்பன் பைரால் உருவாக்கப்பட்டுள்ளது. உருண்டையாக இருப்பதால் இதை எங்கு வேண்டமானாலும் தரையிரக்கலாம்.