Thursday, July 28, 2011

உலகின் 2 ஆவது உயர்ந்த கட்டிடமாக அமையவுள்ள அரிசோனா சூரிய சக்திக் கோபுரம்

 உலகின் 2 ஆவது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரமொன்று அரிசோனா பாலைவனத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கி (chimney) உடன் கூடியதாக அமையவுள்ளது.

இதன் மூலம் சுமார் 200 மெகாவோற் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியுமெனவும் சுமார் 150,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை இதனூடாக உருவாக்கமுடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இத்திட்டமானது EnviroMission என்ற நிறுவனத்தினாலேயே அமைக்கப்படவுள்ளது.



இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையென கணக்கிடப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 1500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. சூரிய சக்தி, விசையாழிகள் (turbines) மற்றும் உயரமான புகைபோக்கி மூலமே இதன் போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.









இத்திட்டமானது சூழலை பாதிக்காத, செயற்திறன் வாய்ந்த சக்தி மூலகமென இதனை உருவாக்கவுள்ள நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.