Sunday, July 3, 2011

சீறி வந்தது விண் துகள் குறுகிய இடைவெளியில் தப்பியது சர்வதேச விண்வெளி மையம்

விண்வெளியில் மணிக்கு 29 ஆயிரம் மைல் வேகத்தில் வந்த விண்துகள், சர்வதேச விண்வெளி மையத்துக்கு மிக அருகே கடந்து சென்றது. இதில் அதிர்ஷ்டவசமாக விண்வெளி மையத்துக்கும் அதில் தங்கியிருந்த 6 வீரர்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.
விண்வெளி ஆய்வுக்காக அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் விண்ணில் சர்வதேச விண்வெளி மையத்தை உருவாக்கி வந்தது. கடந்த 1998ம் ஆண்டு தொடங்கப்பட்ட பணி சமீபத்தில்தான் முடிவடைந்தது. 2028ம் ஆண்டு வரை இது செயல்பாட்டில் இருக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
2028ம் ஆண்டு வரை இது செயல்பாட்டில் இருக்கும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 6 வீரர்கள் எப்போதும் தங்கியிருந்து ஆய்வு பணியில் ஈடுபடுவர். விண்வெளிக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வது, வீரர்களை மாற்றுவது போன்ற செயலில் அமெரிக்காவின் நாசா விண்கலங்கள் மற்றும் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலங்கள் ஈடுபட்டு வருகின்றன. விண்வெளியில் எந்த இடையூறும் இல்லை என்றாலும் விண்துகள்கள், செயல் இழந்து விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் ஏராளமான செயற்கை கோள்களால் சர்வதேச விண்வெளி மையத்துக்கு ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. பழைய செயற்கைகோளின் மோட்டார் ஒன்று, விண்வெளி மையத்துக்கு மிக அருகே கடந்த 2009ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி கடந்து சென்று, விண்வெளி வீரர்களை பீதியில் ஆழ்த்தியது. இதே போன்ற சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமையும் நடந்தது.  விண்துகள் ஒன்று மணிக்கு 29 ஆயிரம் மைல் வேகத்தில் விண்வெளி மையத்தை நெருங்கியது. இது பற்றிய எச்சரிக்கையை 15 மணி நேரத்துக்கு முன்னதாகத்தான் நாசா கட்டுப்பாட்டு மையத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். விண்வெளி மையத்தின் மீது விண்துகள் மோதும், ஆபத்து ஏற்பட்டால், Ôலைப் போட்Õ போல் இரு கேப்சூல் வகை விண்கலங்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் எப்போதும் தயார் நிலையில் இருக்கும்.  அதன்மூலம் விஞ்ஞானிகள் தப்பித்து பூமி திரும்பும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விண்வெளி மையத்தில் தற்போது தங்கியிருக்கும் 6 வீரர்கள் கேப்சூல் விண்கலத்தில் பதுங்கி தயார் நிலையில் இருந்தனர். ஆனால் 1,100 அடி இடைவெளியில் விண்துகள் கடந்து சென்றது. அதன்பின் விண்வெளி வீரர்கள் தங்களின் இயல்பான பணிக்கு திரும்பினர். இத்தகவலை நாசா மையத்தின் கட்டுப்பாட்டு அதிகாரி லார்க் ஹோவர்த் தெரிவித்தார்.