Sunday, February 28, 2016

ஜப்பான் மக்களின் பிறப்பு விகிதம்.

ஜப்பானில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் அளவுக்கு மக்கள் தொகை குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பில் எப்போது சீனாவைப் பின்னுக்குத் தள்ளப்போகிறோமோ என்று இந்தியா கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜப்பானோ, மக்கள் தொகை சரிவை நினைத்துக் கலங்கியுள்ளது.
மக்கள் தொகை குறைந்திருப்பதற்கு, ஜப்பான் மக்களின் பிறப்பு விகிதம் குறைந்ததும், பல்வேறு காரணங்களால் அந்நாட்டுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கைக் குறைந்ததுமே என்று கருதப்படுகிறது.
அதோடு, இன்னும் 30 ஆண்டுகளில் ஜப்பானில் வயதானவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள் என்றும், இன்னும் மக்கள் தொகை குறைய வாய்ப்பிருப்பதாகவும் அந்நாட்டின் மக்கள் தொ கணக்கெடுப்பு ஆய்வாளர்கள் கவலையை அதிகரிக்க வைத்துள்ளனர்.