Sunday, February 28, 2016

சிரியாவில் போர் ஓய்வு - அமேரிக்கா , ரஷ்யா முயற்சி



அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சி யால் சிரியாவில் நேற்றுமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு தற்காலிகமாக குண்டு சத்தம் ஓய்ந்திருப்பதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே பகைமை நீடிக்கிறது. அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் ஆசாத், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் போரிட்டு வருகின்றன.
இதில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்., அல்-காய்தாவுக்கு ஆதர வளிக்கும் அல் நஸ்ரா ஆகியவை ஐ.நா. சபையால் தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப் பட்டுள்ளன. சிரியாவின் பெரும் பகுதி தற்போது ஐ.எஸ். கட்டுப் பாட்டில் உள்ளது.
இவை தவிர சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகள், குர்து இனத்தைச் சேர்ந்த குழுக்கள் என 160-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற் றில்குர்து இன குழுக்கள் சில இடங் களில் மட்டும் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா முயற்சி
மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் குர்து குழுக்களுக்கும் ஆரம்பம் முதலே அமெரிக்கா ஆதரவளித்து ஆயுதங்களை வழங்கி வருகிறது.
அதேநேரம் ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டு அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவின் உதவியால் அண்மைக்காலமாக அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி யுள்ளது. மிதவாத எதிர்க்கட்சிகளின் தலைமையிடமாகக் கருதப்படும் அலெப்போ நகரை ஆசாத் படைகள் சுற்றிவளைத்தன.
இதனால் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ரஷ்யாவுடன் சமரசத்தில் ஈடுபட் டார். அதன்பயனாக சிரியாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இரு வல்லரசுகளும் ஒப்புக் கொண்டன.
அதன்படி சிரியாவில் நேற்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. மிதவாத எதிர்க்கட்சி களைச் சேர்ந்த 97 போராட்டக் குழுக்களும் அதிபர் ஆசாத் படைகளும் சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிக்க உறுதியளித் துள்ளன. இதனால் சிரியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று தற்காலிகமாக குண்டு சத்தம் ஓய்ந்தது.
எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அல்-நஸ்ரா தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன. அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பதற்றத்துடனேயே வாழ்கின்றனர் என்று சர்வதேச போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.