Tuesday, June 21, 2011

மனிதக் கழிவிலிருந்து உணவுப் பண்டம்: ஜப்பானிய விஞ்ஞானி தயாரிப்பு (காணொளி இணைப்பு)

மனிதக் கழிவிலிருந்து 'பேர்கர் பன்' எனப்படும் உணவுப் பண்டத்திற்கான செயற்கை இறைச்சியினைத் தயாரித்து ஜப்பானிய விஞ்ஞானி ஒருவர் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஜப்பானின் ஒகயாமாவில் அமைந்துள்ள சூழல் ஆராய்ச்சி நிலையத்தினைச் சேர்ந்த மிட்சுயுகி இகேடா என்ற விஞ்ஞானியே இச்சுவை மிகு உணவினை தயாரித்துள்ளார்.

மனித கழிவிலிருந்து பெறப்பட்ட புரதத்தினையும் சோயா ஆகியவற்றினையும் உபயோகித்து பல்வேறு இரசாயன மாற்றங்களின் பின்னரே இது தயாரிக்கப்பட்டுள்ளது.



குறித்த செயற்கை இறைச்சியில் 60% புரதமும் 25% காபோஹைதரேட்டும், 9 % இயற்கை கனியுப்புகளும் அடங்கியுள்ளதாக மிட்சுயுகி தெரிவிக்கின்றார். மனிதக் கழிவினை மீள் சுழற்சி செய்யும் நோக்கத்துடனேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது.

மக்களிடையே ஆராய்ச்சிகளுக்காக குறித்த உணவுப் பண்டம் வழங்கப்பட்டபோது பலர் இதனை இரசித்து உண்டதாகவும் இதன் சுவை மாட்டிறைச்சியை ஒத்திருப்பதாக அவர்கள் தெரிவித்ததாகவும் இதன் ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகின்றார்.

ஆராய்ச்சி செலவீனம் காரணமாக மாட்டிறைச்சி பேர்கரை விட இதன் விலை பன்மடங்கு அதிகமெனவும் எதிர்காலத்தில் விலை குறைவடையலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது