மனித மூளையில் சொற்களின் வடிவங்களுக்கான வழிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மோசமான அங்கவீனம் காரணமாகப் பேச முடியாமல் இருப்பவர்களுக்கு என்றாவது ஒரு நாள் இது உதவக் கூடிய வகையில் இந்தக் கண்டுபிடிப்பு ஒரு திருப்பு முனையாக அமைந்துள்ளது.
மூளையின் மிகவும் ஆழமானதோர் ஒதுக்கிடத்தில் சொற்களின் வடிவங்கள் தோற்றம் பெறுவதற்கான ஒரு வழியை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
ஆங்கில மொழியிலிருந்து 40 அல்லது அதற்கு மேற்பட்ட ஓசைகளை உருவாக்கக் கூடிய மூளையின் ஒரு பகுதியை இலத்திரனியலைப் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் இனம் கண்டுள்ளனர்.
இந்த ஒவ்வொரு ஓசையும் அதற்கே உரிய அறிகுறிகளைக் கொண்டுள்ளன. இந்த வகையில்தான் ஒரு கம்பியூட்டர் மக்கள் தமது சிந்தனையின் அடிப்படையில் என்ன சொல்ல முனைகின்றார்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றது.
வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் நரம்பியல் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புப் பிரிவு மூளை பற்றிய இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. இந்த நிறுவனத்தின் பணிப்பாளர் எரிக் லுதார்ட் இதற்குத் தலைமை தாங்கினார்.
மிக மோசமான ஈர்ப்புவலி நோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேரின் தலைகளில் 64 இலத்திரனியல் கூறுகளைப் பொருத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆய்வுக்கான உண்மையான நோக்கம், அவர்களின் ஈர்ப்புவலிக்கான காரணத்தைக் கண்டறிவதுதான். ஆனால் இந்த ஆய்வின்போது மூளையில் வார்த்தைகள் தோற்றம்பெறும் பகுதியும் கண்டறியப்பட்டுள்ளது.