உலகில் ரோபோட் என்றழைக்கப்படும் முதல் இயந்திர மனிதன் கலிபோர்னியாவிலுள்ள ஸ்டாண்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 1968-இல் பிறந்தான்.வீட்டு வேலை செய்யும் சிறிய ரோபோ என்னும் இயந்திர மனிதனின் உயரம் மூன்றடி. எடை – இருபத்தி இரண்டரை கிலோ ஆகும்.போலீஸ் ரோபோ என்ற ஒன்று உண்டு. அதன் எடை 87 கிலோ. உயரம் ஒன்றரை மீட்டர். பெயர் ஞடஈ-2.மனிதனுக்கு உள்ள அத்தனை உறுப்புக்களையும் கொண்ட ரோபோவுக்கு “லெனின் கிரேடு’ என்று பெயர். இது ரோபோ இயல் மற்றும் பொறியியல் சைபர்னடிக்ஸ் கழகத்தில் உள்ளது.அயர்லாந்து அருகே அட்லாண்டிக் கடலில் ஏர்இந்தியா ஜெட் விமானம் வெடித்துச் சிதறியபோது கடலில் மூழ்கிய பொருள்களைக் கண்டெடுத்த ரோபோவின் பெயர் “ஸ்கார்ப்’.2050,ம் ஆண்டுக்குள் சிவப்பு விளக்கு ஏரியாக்களில் பெண்களுக்கு பதிலாக ரோபோக்கள் இடம்பெறும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.