Showing posts with label Discover. Show all posts
Showing posts with label Discover. Show all posts

Wednesday, March 9, 2016

" E MAIL "ஐ கண்டுபிடித்த தமிழர் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963, தமிழ் நாடு, இந்தியா) இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.

Wednesday, March 2, 2016

புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான செயலி அறிமுகம்.



புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிய, மருத்துவர்களுக்கு உதவும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து குறிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும், அறிகுறிகள் மற்றும் தடயங்களை சுகாதார அதிகாரிகள் இனம் கண்டு கொள்ளவும், இந்த செயலி வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளது.
இந்த செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள தொழில்நுட்பத்திற்கான ஸ்காட்டிஷ் மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக நோயாளியை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், புற்றுநோயினால் ஏற்படும் அகால மரணங்களை குறைக்கவும் முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இவற்றை கருத்தில் கொண்டு, இந்த செயலியை அனைத்து சுகாதார அதிகாரிகளும் தரவிறக்கம் செய்து பாவிக்குமாறு, ஸ்காட்லாந்தின் சுகாதார அமைசசர் ஷோனா ராபின்சான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tuesday, March 1, 2016

இயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி!

அதிகரிக்கும் கொசு உற்பத்தியை தடுத்து ஒழிக்க, உணவுக்கு பயன்படும் இயற்கை பொருள்களை மருந்தாக மாற்றி, புதிய கொசு ஒழிப்புக்கருவியை கண்டுபிடித்துள்ளார் கோவை பேராசிரியர் நாகேந்திரன்....

ஆர்.ஓ வாட்டருக்கு (R.O Water) மாற்றாக இயற்கை வாட்டர் ஃபில்டரை பயன்படுத்தலாம்!

தங்கம் விற்கக் கூட லோக்கல் நடிகைதான் வருகிறார்... ஆனால் தண்ணீர் விற்க டெண்டுல்கரும் ஹேமமாலினியும் வருகிறார்கள். நீர் அத்தனை பெரிய வணிகமாகிவிட்டது. எளிய மக்களுக்குக்கூட ஆர்.ஓ என்றால் என்னவென்று தெரிகிறதோ இல்லையோ... அதன் மூலம் சுத்திகரிக்கப்பட்டால்தான் அது நல்ல தண்ணீர் என நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹோட்டலில் கூட ‘ஆர்.ஓ வாட்டரில் சமைத்தது’ என அறிவித்தால்தான் கூட்டம் வருகிறது. ஆனால், ‘‘ஆர்.ஓ., யு.வி என எல்லா சுத்திகரிப்பு முறையும் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டுதான் இருக்கிறது’’ என்கிறார் சந்திரசேகரன்.
நவீன நானோ டெக்னாலஜியையும் நமது பாரம்பரிய மண்பாண்டக்கலையையும் இணைத்து இயற்கையான குடிநீர் சுத்திகரிப்பு கருவி ஒன்றை உருவாக்கியிருப்பவர் இவர்.

Friday, July 10, 2015

கடலுக்கடியில் மிக அதிக வெப்பம் - நாசா விஞ்ஞானிகள்

கடலுக்கடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிக அதிக வெப்பம் மறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெப்பத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகம் என அவர்கள் கருதுகின்றனர்.

கடலின் வெப்ப நிலை தற்போதுள்ளதை விட மிக அதிக அளவில் உயர்ந்திருக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

உண்மையில், இந்த வெப்பத்தையும், பூமி வெப்பமயமாதலையும், பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வீசும் சக்தி வாய்ந்த காற்று தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அளவிடப்பட்டுள்ள உலக வெப்பமயமாதலின் வேகமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் பூமியின் தரைப்பரப்பு வெப்பநிலையானது 0.05 டிகிரி சென்டிகிரேட் ஆக உயர்ந்துள்ளது.

கடலுக்கும், பூமிக்கும் இடையிலான வெப்பநிலை மாற்றத்திற்கான காரணம் குறித்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Wednesday, July 8, 2015

ஆண்களின் எந்த வயது விந்தணு கருத்தரித்தலுக்கு உகந்தது!

ஆண்களின் இளம்வயது விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் 18 வயதில் விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதன்மூலம் பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனையால் மருத்துவ உலகில் சர்ச்சை

ஆண்களின் இளம்பருவ விந்தணுக்களில் மரபுவழி நோய்க்கூறுகள் பெருமளவு இருக்காது என்பதால் ஆண்களின் இளவயது விந்தணுக்களை சேமித்து உறைநிலையில் பாதுகாத்து, அதைப் பயன்படுத்தி பிற்காலத்தில் ஆரோக்கியமான பிள்ளைகள் பெறலாம் என்கிற யோசனை ஒன்று பிரிட்டனில் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் இருக்கும் 18 வயது ஆண்கள் அனைவரின் விந்தணுக்களும் உறைநிலையில் பாதுகாக்கப்பட்டு, அந்த விந்தணுக்கணைப்பயன்படுத்தி அவர்கள் பிற்காலத்தில் குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று டண்டீயில் அபெர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித் பரிந்துரை செய்திருக்கிறார்.

வயதான ஆண்களின் விந்தணுக்களில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில வகை நோய்கள் உருவாகும் சாத்தியங்கள் கூடுதலாக இருப்பதால், இளவயது விந்தணுக்களை சேமித்து வைத்து அதைப்பயன்படுத்தி பிள்ளைகளை பெற்றுக்கொள்வதன் மூலம், குழந்தைகளின் எதிர்கால நோய்களை தடுக்க முடியும் என்கிறார் அவர்.

"வயதான ஆண்களில் பெரும்பான்மையானவர்கள் நல்ல ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அதில் சில ஆபத்துக்கள் இருக்கவே செய்கின்றன. ஆண்களுக்கு வயதாக, ஆக, அவர்களின் விந்தணுக்களில் மரபணுமாற்றக்கோளாறுகள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மரபணு மாற்றங்களால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே ஆண்களுக்கு வயதாக ஆக, அவர்களின் விந்தணுக்களின் மரபணு மாற்றத்தால் ஏற்படக்கூடிய குறிப்பிட்ட சில வகையான பாதிப்புகளும் அதிகரிக்கும். இத்தகைய மரபணு பாதிப்புகள் பலவகைப்பட்டன. குறிப்பாக நரம்பு மண்டலம் மற்றும் உளவியல் பாதிப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்று தெரிகிறது. ஆடிசம் என்கிற மனவளர்ச்சி குன்றிய நிலை, ஸ்கிட்சோப்ரீனியா என்கிற மனப்பிறழ்வு நோய் மற்றும் அறிவுத்திறன் குறைபாடு உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்கள் உருவாக்கும் வகையில் வயதான ஆண்களின் விந்தணுக்களில் மாற்றம் ஏற்படுகிறது," என்று பிபிசியிடம் விளக்கினார் அபெர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் கெவின் ஸ்மித்.

இந்த பிரச்சனையை தவிர்க்கும் வகையில் பிரிட்டனில் இருக்கும் 18 வயதான ஆண்கள் அனைவரின் விந்தணுக்களையும் தேசிய சுகாதாரச் சேவையின் மருத்துவமனைகளில் சேகரித்து உறைநிலையில் பாதுகாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்திருக்கிறார் அவர்.

பிரிட்டன் உள்ளிட்ட பல வளர்ச்சியடைந்த மேற்குலக நாடுகளில் வயதான ஆண்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் போக்கு அதிகரித்தபடி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பொதுவாகவே ஆண்கள் தந்தையாகும் சராசரி வயதின் அளவும் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. உதாரணமாக 1990களில் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் ஆண்கள் தந்தையாகும் சராசரி வயது 31 ஆக இருந்தது. அது தற்போது 33 வயதாக அதிகரித்திருக்கிறது.

அறுபது வயதுக்கு மேலும் ஆண்கள் எளிதில் தந்தையாகலாம் என்கிற சாத்தியம் இருந்தாலும் அதற்கான பலாபலன்களும் இருக்கவே செய்கின்றன.

மருத்துவ தார்மீக அற நெறிகளுக்கான ஆய்வு சஞ்சிகையில் தனது பரிந்துரையை முன்வைத்திருந்த மருத்துவர் ஸ்மித், வயதான ஆண்களின் விந்தணுக்களில் ஏற்படும் பாதிப்புக்களின் சதவீத அளவு தனிப்பட்ட ரீதியில் மிகவும் குறைவாகத் தோன்றினாலும், ஒட்டுமொத்த நாட்டின் மக்கள் தொகையை கணக்கிட்டுப் பார்த்தால் பாதிப்பின் அளவு மிகப்பெரிதாக இருக்கும் என்கிறார் அவர்.

எனவே இளவயது விந்தணுக்களை பாதுகாப்பது விதியாக்கப்பட வேண்டும் என்கிறார் அவர். சமூகத்தின் நன்மையை கணக்கில் எடுத்துக்கொண்டால், தற்போதைய தலைமுறையின் தந்தையாகும் ஆண்களின் வயது தான் அடுத்த தலைமுறையின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கும் என்பது குறித்து நாம் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் பிபிசியிடம் வலியுறுத்தினார்.

அப்படியானால் ஆண்கள் எந்த வயது வரை இயல்பாக தந்தையாகலாம்? எந்த வயதுக்குப் பிறகு ஏற்கனவே சேமித்து வைத்திருக்கும் தங்களின் இளவயது விந்தணுக்களை பயன்படுத்தி தந்தையாக வேண்டும்? என்கிற கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இதற்கு குறிப்பிட்ட வயது என்று ஒன்றை வரையறுப்பது கடினம் என்றாலும், நாற்பது வயது கடந்த ஆண்கள் தமது இளவயது விந்தணுக்களை பயன்படுத்தும்படி பரிந்துரைக்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.

பிரிட்டனில் தனியார் விந்தணு வங்கிகளில் விந்தணுக்களை சேமித்துவைக்க ஒரு ஆணுக்கு ஆண்டுக்கு 150 முதல் 200 பிரிட்டிஷ் ஸ்டெர்லிங் பவுண்ட்கள் கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால் தேசிய சுகாதார சேவை மையத்தில் இந்த விந்தணு சேமிப்பு செய்யும்போது இதற்கான கட்டணத்தை பெருமளவு குறைக்க முடியும் என்கிறார் அவர்.

ஆனால் இந்த ஒட்டுமொத்த யோசனையுமே முட்டாள்தனமானது என்கிறார் ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தின் ஆண் இனப்பெருக்கவியல் துறையின் பேராசிரியர் ஆலன் பேசி.

வயதான ஆண்களின் விந்தணுக்களில் இருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு நோய் உருவாகும் சாத்தியம் மிக மிகக் குறைவு என்கிறார் அவர்.

அதுவும் தவிர பல ஆண்களின் விந்தணுக்களை உறை நிலையில் பாதுகாப்பது கடினம் என்கிறார் அவர். ஏனென்றால் பல ஆண்களின் விந்தணுக்கள் சரியாக உறையாது என்று சுட்டிக்காட்டும் ஆலன் பேசி, அதனால் தான் பல ஆண்களால் விரும்பினாலும் தமது விந்தணுக்களை தானமாக வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.

எனவே இளவயதில் விந்தணுக்களை சேமித்துவைத்து முதிய வயதில் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என்கிற வழிமுறையின் கீழ், அந்த ஆண்களின் மனைவிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை செயற்கை கருத்தரிக்கும் சிகிச்சைக்கு உள்ளாக வேண்டி வரும் என்றும் அவர் கூறினார்.

இவரைப்போலவே, பிரிட்டிஷ் மகப்பேறு சங்கத்தின் பேராசிரியர் ஆடம் பேலனும் விந்தணுக்களை இளவயதில் சேமிக்கும் பழக்கத்தை விமர்சிக்கிறார்.

ஒட்டுமொத்த இனப்பெருக்க செயற்பாட்டையுமே செயற்கையானதாக மாற்றும் இந்த நடைமுறையில், உறுதியாக குழந்தை பிறக்கும் என்பதற்கோ, அப்படி பிறக்கும் குழந்தை கண்டிப்பாக எந்த நோயும் இல்லாமல் பிறக்கும் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை என்கிறார் அவர். இது ஒருவித பொய்யான பாதுகாப்புணர்வைத் தருவதாக கூறுகிறார் ஆடம் பேலன்.

அதுமட்டுமல்ல, உறைநிலையில் சேமித்துவைக்கப்பட்ட விந்தணுக்கள் முட்டையை கருவாக்கும் திறனில் இயல்பான விந்தணுக்களைவிட வீரியம் குறைவாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஆண்களையும் பெண்களையும் தங்களின் விந்தணுக்களையும், கருமுட்டைகளையும் உறைநிலையில் சேமித்து வைக்கச் சொல்வதற்கு பதிலாக, இளவயது தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதையும், வேலைக்குச்செல்வதையும் ஊக்குவிக்கும் வகையிலான கட்டமைப்புகளை ஏற்படுத்துவதே இந்த பிரச்சனைக்கு ஏற்கத்தக்க நிரந்தர தீர்வாக இருக்கும் என்கிறார் அவர். ஸ்கேண்டிநேவிய நாடுகளில் இத்தகைய அணுகுமுறையும், அதற்குத்தேவையான கட்டமைப்பும் சிறப்பாக செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேசமயம், ஆண்களும்கூட தங்களின் எதிர்கால குடும்ப அமைப்பு குறித்து இளவயதிலேயே சிந்தித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம் என்கிறார் பிரிட்டனின் ஆண் இனப்பெருக்கச் சங்கத்தின் தலைவி ஷீனா லுவிஸ்.

ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி தங்களின் இருபது அல்லது முப்பது(வயது)களில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே சிறந்தது என்கிற செய்தியை இளம் தலைமுறைக்கு வலுவாக புரியவைக்க வேண்டும் என்கிறார் ஷீனா லுவிஸ்.

Tuesday, June 9, 2015

மின்சாரம் இல்லாமல் பயன்படுத்தும் சலவை இயந்திரம் கண்டுபிடிப்பு.(வீடியோ இணைப்பு )


நம்மில் பலருக்கு துணி துவைப்பதென்பது உலக மகாயுத்தம் நடத்துவதற்க்கு சமம். குவியல் குவியலாய் கிடக்கும் அழுக்கு துணிகளை துவைக்கும் ஒவ்வொருவரும், இனிமே சேர்த்து வைக்காம தினம் கொஞ்சம் கொஞ்சமா எல்லா துணியையும் துவைச்சிடனும் என்று வாராவாரம் சபதம் போடுவதும், அதை நிறைவேற்ற முடியாமல் போவதும் வழக்கமாகிவிட்ட ஒன்று.

Monday, June 8, 2015

பேட்டரி வாழ்நாளை 800% அதிகமாக்கும் புதிய கருவி

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கழற்ற கூடிய மின்கல வகைகளின் வாழ் நாளை 800% அதிகரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
0.1 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவிக்கு பேட்டிரைஸர் என பெயர் வைத்துள்ளனர்.

Sunday, June 7, 2015

தாவரபசையினைப் பயன்படுத்திஅதிநவீன மின்கலம் உருவாக்கம்

தாவரங்களில் உள்ள குளிர்மை தன்மையான பசையினைப் பயன்படுத்தி அதிநவீன மின்கலத்தினை ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
இம் மின்கலமானது கூடியஅளவு மின்சக்தியினை சேமித்து வைக்கக்கூடியதாக இருப்பதுடன் மென்மையானதாகவும், பாரம் குறைந்ததாகவும் காணப்படுகின்றது.
இது தவிர மீள்தன்மை (Elastic), வலிமை மிகுந்ததாகவும் இருக்கின்றது.

Monday, June 1, 2015

விண்வெளி மாபெரும் வெடிப்பு பற்றிய ஆய்வு

நாம் வாழ்கின்ற விண்வெளி, ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பால் உருவானது. இப்போது மிகவும் புகழ்பெற்று பரவி வரும் The Bid Bang Theory எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் பாடலில் இதை தெரிவிக்கின்றது. இந்த மாபெரும் வெடிப்பு நிகழ்வதற்கு முன், விண் வெளி ஒரு தனித்தன்மையான வடிவத்தில் நிலவியது. அந்த மாபெரும் வெடிப்பு பின்பு, விண்வெளி மிக விரைவாகநம்ப முடியாத வேகத்தில் அதிகரித்த வளர்ந்து, தற்போதைய வடிவமாக மாறியது.

ஒரு லிட்டர் நீரில் தயாரிக்கப்படும் விளக்குகள்

8வது உலகின் எதிர்கால எரியாற்றல் உச்சி மாநாடு( World Future Energy Summit)ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. ஒன்று லிட்டர் (liter) ஒளி எனும் அறிவியல் தொழில் நுட்பச் சாதனை காரணமாக, பிலிப்பைன்ஸ் சேர்ந்த டியாஸ் என்பவர், இந்த உச்சி மாநாட்டில் அபுதாபி எதிர்கால எரியாற்றல் விருதைப் பெற்றுள்ளார். 

5ஜி தொழில் நுட்பத்தின் எதிர்காலம்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலகச் செல்லிட செய்தித்தொடர்பு மாநாட்டில் பல கண்காட்சி திடல்களில் 5ஜி என்ற மிகப் பெரிய வாசகம் காணப்பட்டது. 5ஆவது தலைமுறை இணையக் காலம் இன்னும் வரவில்லை என்றபோதிலும், இது தொடர்பாக தொழில் நுட்பத்தின் ஆராய்ச்சியும் வரையறையின் உருவாக்கமும், வரலாற்றில் தவிர்க்க முடியாத போக்காக மாறியுள்ளது. 
தற்போது, 4ஜி என அழைக்கப்படும் 4ஆவது தலைமுறை இணையம், உலகில் முழுமையாக பரவல் செய்யப்படாமல் உள்ளது.

ரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை (watch video)

பாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்கள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.பலவிதமான ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன இந்த நிலையில் அமெரிக்காவின் மகா சூலுட்ஸ் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த நிபுணர்கள் பாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை தயாரித்துள்ளனர்.

எளிதான முறையில் நமது உடலின் நச்சுகளை வெளியேற்றும் சித்தர்களின் மருத்துவமுறை(சீன மருத்துவம்)


நமது பாதங்கள் சக்திவாய்ந்தவை. உடல் உள்ளுறுப்புகளின் நரம்புகள் நமது பாதத்தில் முடிகின்றது. சீன மருத்துவத்தில் இதை மெரிடியன் என்று சொல்லுவார்கள். இந்த மெரிடியன்கள் நமது உள்ளுறுப்புகளின் பாதையாக செயல்படுகிறது. சிலர் இதை மறுப்பதுண்டு. ஆனால் சீன மருத்துவத்தை கற்றவர்களும், அறிந்தவர்களும் மெரிடியனும் நமது நரம்பு மண்டலங்களும் ஓன்றோடு ஒன்று சம்பந்தபட்டவை என்பதை அறிவார்கள்.

Saturday, May 30, 2015

இரண்டு லட்சம் கடல்வாழ் நுண்ணுயிரி வகைகள் கண்டுபிடிப்பு

கடலில் மிதந்து கொண்டிருக்கும், மிகவும் சிறிய நுண்ணுயிரியான, பிளாங்டான் பற்றி இதுவரை இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய ஆய்வில் இரண்டு லட்சம் வகையான, வித்தியாசமான உயிரியினங்களை இனங்கண்டுள்ளதாகவும் அவற்றில் ஏராளமானவை அறிவியல் துறைக்கு புதிதானவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Thursday, April 16, 2015

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ! புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !? புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு.

Friday, February 6, 2015

கடலுக்கு அடியில் மர்ம உயிரினம்

நியூசிலாந்தில் மிகவும் வசீகரமான கடலொன்றான டர்க்கைஸ் கடலுக்கடியில் உலாவிய மாபெரும் மர்ம கடல் உயிரினம் ஒன்றின் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

Sunday, June 15, 2014

சிறுநீரில் இருந்து சக்தியை உருவாக்கி பல தேவைகளுக்கு பயன்படுத்தலாம் : தென் கொரியாவின் புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு

வாகனங்கள் மற்றும் வீடுகளுக்கு தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் சிறுநீரால் சக்தியூட்டப்பட்ட எரிபொருள் கலன்களை கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
மனித சிறுநீரில் காணப்படும் காபன் அணுக்களைப் பயன்படுத்தி மிகவும் மலிவான மின்சக்தியைப் பிறப்பிக்க முடியும் என தென் கொரிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Sunday, June 1, 2014

மனிதனுக்கு முன்பே செவ்வாய் கிரகத்தில் குடியேறும் கிருமிகள்

மனிதனுக்கு முன்பே நுண்ணுயிர் கிருமிகள் செவ்வாய் கிரகத்தை  சென்றடையும் வாய்ப்புகள் உள்ளதாக  'நாசா' எச்சரிக்கை விடுத்துள்ளது.

மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் குடியேற்றுவது தொடர்பில் அமெரிக்காவிலுள்ள 'நாசா' ஆய்வு நிலையம் 'கியூரியாசிட்டி' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

Tuesday, December 18, 2012

உள்ளிருக்கும் அற்புதத்தை உணர்ந்து கொள்ளுங்கள்

“உண்மையான ஆனந்தம் சாதனைகளைப் பற்றியதல்ல, உங்கள் உள்ளேயே அமைதியைக் கண்டுகொள்வதைப் பற்றியது. கண்டுகொள்வதற்காக உள்நோக்கிச் செல்லும் இந்தப் பயணம்தான் எல்லா பயணங்களையும் விட மிக சிறந்த பயணம்.”
மகராஜி அவர்கள் தன் சிறுபிராயத்திலிருந்தே மக்களிடம் உள் அமைதியைப் பற்றி உரையாற்றி வருவதுடன் தனது பதிமூன்றாவது வயதில் அவர் சர்வதேச ரீதியில் பிரயாணம் செய்ய தொடங்கினார். அன்றுதொட்டு அவர் உலகெங்குமுள்ள ஆறரைகோடிக்கும் மேற்பட்ட மக்களிடம் உரையாற்றியுள்ளார். அவரின் உரைகளை பல்வேறு சாதனங்களின் வாயிலாக மலேசியா உட்பட 88-ற்கும் மேற்பட்ட நாடுகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.