Showing posts with label Mobile. Show all posts
Showing posts with label Mobile. Show all posts

Tuesday, June 23, 2015

வை பை சார்ஜ் விரைவில்


'வை-பை' இணையதளம் வழியாக செல்போனை 'சார்ஜ்' செய்யும் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி 'வை-பை' இணையதளம் மூலம் செல்போன்களை 'சார்ஜ்' செய்யும்   ‘power over WiFi’  என்ற நவீன தொழில்நுட்பத்தை இவர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

இந்த தொழில்நுட்பமானது வழக்கமாக வை-பை ரூட்டர்களில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ அலைவரிசை சக்தியை, பயன்பாட்டுக்கான நேரடி மின்சாரமாக மாற்றுவதன் மூலம் செல்போனுக்கு சார்ஜை ஏற்றுகிறது.

ஆனால், தற்போதுள்ள வை-பை தொழில்நுட்பத்தைக் காட்டிலும் இதற்கு சற்று மேம்படுத்தப்பட்ட ஹார்டுவேர் தேவை.

ஒரு ரூட்டரிலிருந்து எவ்வளவு மின்சாரத்தை 'அவுட் புட்' ஆக எடுக்க முடியும் என்பதைக் கண்டறிய புதிய மென்பொருள் ஒன்றும் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தை ஏற்கனவே காமிராவில் 17 அடி தூரத்தில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்து பார்த்துள்ளனர். இதில், அதிகபட்சமாக 28 அடி தூரத்தில் டெம்பரேச்சர் சென்சார்கள் பேட்டரியை சார்ஜ் செய்வது உறுதியாகியுள்ளது.

அதேநேரத்தில், சார்ஜ் ஏறும்போது வை-பை இணையதள வேகத்திலும் எவ்விதத் தடங்கலும் ஏற்படவில்லை. இதையடுத்து, ஆராய்ச்சியாளர்கள் வெகு விரைவில் இந்தத் தொழில்நுட்பத்தை அன்றாடப் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்துவருகிறார்கள்.

Monday, June 8, 2015

றேடியோ கதிர்களிலிருந்து குறிப்பிட்ட அளவு மின்சக்தியை தாமாகவே பெற்றுக்கொள்வற்கான புதிய தொழில்நுட்பம்

ஸ்மார்ட் கைப்பேசிகளிலிருந்து வெளியேறும் றேடியோ கதிர்களிலிருந்து (Radio Waves) அவை குறிப்பிட்ட அளவு மின்சக்தியை தாமாகவே பெற்றுக்கொள்வற்கான புதிய தொழில்நுட்பமொன்றை அமெரிக்காவின் ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தினை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

Sunday, June 7, 2015

புதிய அப்பிளிகேஷன் அறிமுகம் : ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்தலாம்

ஒரே நேரத்தில் 200 பேருக்கு அழைப்பினை ஏற்படுத்தக் கூடிய அப்பிளிகேசன் ஒன்றினை லைன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
மொபைல் சாதனங்களுக்கான தொடர்பாடல் அப்பிளிகேஷனை உருவாக்கும் லைன் நிறுவனம் முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் Popcorn Buzz எனும் இந்த அப்பிளிக்கேஷனை உருவாக்கியுள்ளது.

Monday, February 9, 2015

நீங்கள் யோகா செய்பவரா?... அப்போ இது உங்களுக்குத் தான்!.

உடலை திடகாத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு யோகாசனம் இன்றியமையாததாக காணப்படுகின்றது.
பண்டைய காலக் கலையான இதனை புதிய தொழில்நுட்பத்துடன் இன்றைய காலத்திற்கு ஏற்றாற்போல் செய்வதற்கு SmartMat எனும் நில விரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Wednesday, February 4, 2015

கிரெடிட் கார்டு அளவிலான போன்!

எதிர்கால பிலிப்ஸ் போன்
எதிர்கால ஸ்மார்ட்போன் வகைகள்தான் எத்தனை வகை. பிலிப்ஸ் நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்போன் வடிவமைப்பை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டிருந்தது. மிக மெலிதாக கிரெடிட் கார்டு அளவில் இருக்கிறது இந்த போன். இதை வழக்கமான போன் பயன்படுத்துவது போல பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைக்கேற்ப கைகளில் சுற்றிக்கொள்ளவும் செய்யலாம்.

Sunday, February 1, 2015

உங்கள் கணினியில் 'வாட்ஸ் ஆப்' பயன்படுத்துவது எப்படி?

வாட்ஸ் ஆப் செயலியை மொபைல்களில் மட்டுமல்லாது இனி கணினியிலும் பயன்படுத்தலாம்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ் ஆப் செயலி அனைத்து விதமான மொபைல் ஃபோன்களிலும் செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறுந்தகவல்களோடு, புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், குரல் பதிவுகள் என பலவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பகிரமுடியும்.

Tuesday, December 18, 2012

ஐபோன்களுக்கென கூகுள் அறிமுகப்படுத்தும் புதிய மென்பொரு

இணையத்தளங்களினூடு வீடியோ கோப்புக்களை பகிருவதில் முன்னணியில் திகழும் YouTube தளத்தினை கைப்பேசிகளிலும் பயன்படுத்தும் வசதிகள் காணப்படுகின்றமை அறிந்ததே. 
இவ்வாறு iPhone - களில் YouTube வீடியோக்களை பார்க்கும் அதேவேளை அவற்றினை பதிவு (Capture) செய்வதற்கான வசதியினை தரும் பிரயோக மென்பொருள் ஒன்றினை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Saturday, May 5, 2012

LG நிறுவனத்தின் Optimus LTE2 கைப்பேசிகள் வெளியீடு (வீடியோ இணைப்பு)

LG நிறுவனமானது முதன் முறையாக 2GB RAM கொண்ட Optimus LTE2 கைப்பேசிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.
இக்கைப்பேசியானது முன்னைய தயாரிப்புக்களை விடவும் தொழிற்பாடு வேகம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, April 23, 2012

ஐ போன் 5 புதுவகை உலோகத்தால் தயாராகின்றது!

உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அப்பிளின் ஐ போன் 5 புதிய வகை கலப்பு உலோகத்தினால் உருவாக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. 

தொழில்நுட்ப உலகத்தில் பெரிதும் அறியப்படாத கலப்பு உலோகம் 'liquid metal' ஆகும்.


Tuesday, December 6, 2011

ஐ போனுக்குத் தடை!

சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி அசாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் 'ஐ போனை' அந்நாட்டு அரசு தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Sunday, December 4, 2011

ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக கூகுள்

ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுக்கென ஆப்பிள் ஐ ட்யூன்ஸ் என்ற இணையத்தளத்தை ஆப்பிள் நிறுவனம் அமைத்து பல்லாயிரக்கணக்கான மியூசிக் கோப்புகளை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் தரவிறக்கம் செய்திடும் வகையில் இயக்கி வருகிறது.

Friday, December 2, 2011

ஐபோனுக்கு ஆபத்தா அல்லது ஐபோனால் ஆபத்தா!-புதிய சர்ச்சையில் ஆப்பிள் நிறுவனம்.

தொழில்நுட்பத்தில் அப்பிளின் ஐ போன்கள் முன்னணி வகிக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

அதன் ஐ பொட், ஐ போன், ஐ பேட் என அனைத்தும் உயர் தொழிநுட்பம் கொண்டவை.

Monday, November 28, 2011

'Jew Or Not Jew' ?புதிய சர்ச்சையில் யூதர்கள் - அப்பிளின் மென்பொருள்

அப்பிளின் புதிய மென்பொருள் படுத்தும் பாடு யூதர்களை காயப்படுத்தியதாக சொல்லப்படுகின்றது   மென்பொருள்  துறை என்பது பல பில்லியன்கள் புரளும் தொழிற்துறையாக மாறிவிட்டது.

Friday, November 25, 2011

HTC நிறுவனத்துடன் சேர்ந்து கைத்தொலைபேசி ஒன்றினை வெளியிடவுள்ளது Facebook


Facebook தொலைபேசி வரப்போகின்றதென்ற வதந்திகள் மீண்டும் கிளம்பியுள்ளன. ஒரு கைத்தொலைபேசி உற்பத்தியாளர்களுடன் Facebook பேச்சு நடத்துகின்றதென்றும் தெரியவருகின்றது.
ஒரு வருடத்தின் முன்னரும் இதுபோன்று Facebook  தொலைபேசி தனது முழு அம்சங்களுடனும் வெளிவரப்போகின்றதென்ற செய்தி வெளிவந்திருந்தது.

Monday, November 21, 2011

சாதாரண Dongle இல் Call Option ஐ கொண்டுவருவது எப்படி?

பல இணைய சேவை வழங்குனர்கள் (ISP உதாரணமாக Airtel , Dialog , Mobitel, Etisalat ,Hutch) போட்டி போட்டுக்கொண்டு Prepaid & Postpaid SIM அனைத்திற்கும்  இணையத்தை பயன்படுத்துவதற்கான டேட்டாக்களை வழங்கி வருகிறார்கள்.அந்த SIM ஐ Dongle மற்றும் ஸ்மார்ட் போன்களிலும் போட்டு நாம் பயன்படுத்தி கொள்ள கூடியதாக இருக்கும். 

Thursday, November 17, 2011

SMS வழியாக பேஸ்புக்கை உபயோகிப்பதற்கு

மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி:
முதலில் உங்களின் பேஸ்புக் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். அதில் Account Settings பகுதிக்கு செல்லுங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Mobile என்பதை கிளிக் செய்யுங்கள்.
பிறகு வரும் விண்டோவில் Add a Phone என்ற பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து ஒரு விண்டோ ஓபன் ஆகும்.

Tuesday, November 15, 2011

நோக்கியா லுமியா - 800 அறிமுகம் i-Phone 4sஇக்கு சவாலாக அமையுமா !

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைத் தன் மொபைல் போன்களில் அமைத்துத் தன் எதிர்கால வர்த்தகத்தினை மீண்டும் முன்னுக்குக் கொண்டு செல்ல நோக்கியா முயற்சி செய்கிறது. அந்த வகையில், ஒக்டோபர் இறுதியில் தன் விண்டோஸ் மொபைல் போனாக லூமியா 800 என்ற மாடலை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. மீகோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் நோக்கியா என்9 போல இது வடிவமைக்கப் பட்டுள்ளது.

Saturday, November 12, 2011

பிளக்பெரியின் எதிர்கால தொழினுட்பம்

பிளக்பெரியின் எதிர்கால தொழினுட்பம் வாழ்க்கையின் வேகத்தின்  நேரத்தை அதே அளவு இலகுவானதாக மாற்றுகிறது சிறப்பானதாக இருக்கிறது காநோளியைப் பார்க்கவும்.

Friday, November 11, 2011

நோக்கியா வின் புதிய பரிமாணம் - Nokia (HumanForm)

(காணொளி)நொக்கியாவினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அடுத்த தலைமுறையினருக்கான கையடக்கதொலைபேசி தொடர்பானதே இக் காணொளி.

நெனோ தொழில்நுட்பத்தை ( Nano Technology) பயன்படுத்தி உருவாக்கப்படும் கையடக்கத்தொலைபேசி இதுவாக இருக்குமென நொக்கியா தெரிவித்துள்ளது.

உங்களுடைய iPhone இல் இன்டர்நெட் இணைப்பை எவ்வாறு பாதுகாப்பானதாக மாற்றுவது எனப் பார்க்கலாம் .

தற்போது பரவலாக உலகெங்கிலும் கைத்தொலைபேசி உடாக
 இணையம் பயன்படுத்தப் படுகின்றது  . ஆனால் அதன் பாதுகாப்பு தன்மையை நாம் பலசிக்கல்களுக்கு தீர்வு காண அதன் கீழுள்ள  முறையை வாசித்தறியவும்.