Showing posts with label Political. Show all posts
Showing posts with label Political. Show all posts

Sunday, February 15, 2015

விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்! யாழில் பேரணிக்கு ஏற்பாடு

இலங்கைக்கு எதிரான போர்க் குற்ற விசாரணை அறிக்கையினை சமர்ப்பிப்பதனை தடுக்க பலர் முயற்சிப்பதை எதிர்த்தும், அந்த அறிக்கையினை சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தியும் எதிர்வரும் 24ம் திகதி மாபெரும் பேரணி ஒன்று நடத்தப்படவுள்ளது. 

இதனை யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அமிர்தலிங்கம் இராஜகுமாரன் தெரிவித்தார். 

வட மாகாணசபையின் தீர்மானம் மதிக்கப்பட வேண்டும்!

இலங்கையில் உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையின் அறிக்கை ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு அடுத்த மாத இறுதியில் வெளியிடப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி கூறுகின்றது. 

Monday, February 9, 2015

ஊழல்- மோசடிகளை விசாரிக்க சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு

இலங்கையில் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக சிறப்பு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்கவுள்ளதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடமத்திய மாகாணத்தில் அரலகங்வில பிரதேச மக்கள் முன்னிலையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்று நாட்டு மக்கள் காத்திருப்பதாகக் கூறினார்.

மறுபடியும் முஸ்லிம் காங்கிரஸ் துரோகமிழைத்துள்ளது -அரியநேத்திரன்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இரண்டாவது முறையாகவும் துரோகமிழைத்துள்ளது. நாளை மறுதினம் 10 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிர்ப்பந்தத்தில் இருக்கின்றார். முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாதமாக செயற்படுகின்றது என்று மட்டு. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். ப. அரியநேத்திரன் தெரிவித்தார்.

Wednesday, February 4, 2015

இலங்கையில் துப்பாக்கிகள் அமைதியடைந்தாலும் நல்லிணக்கம் இன்னும் ஏற்படவில்லை: சுதந்திரதின உரையில் ஜனாதிபதி

நல்லிணக்கத்தினூடாக தேசிய ஐக்கியத்தை அதன் எல்லா அம்சங்களிலும் அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் 67 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

Tuesday, February 3, 2015

மஹிந்தவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி வியாழக்கிழமை ஆரம்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.
தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுத்நதிர முன்னணி மற்றும் வாசுதெவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய கட்சிகள் இவ்வாறு புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க உள்ளன.