Showing posts with label Disease. Show all posts
Showing posts with label Disease. Show all posts

Tuesday, October 13, 2015

புற்றுநோய்க்கான மிகச்சிறந்த மருந்து மற்றும் முழுமையான கட்டுரை (கட்டாயம் வாசிக்கவும்)

இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.


புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் உணவுப் பொருட்களில் நமக்குத் தெரிந்தவரை காலிஃப்ளவர், கேரட், தக்காளி, லெமன் கிராஸ், மாதுளம்பழம், மரவள்ளிக்கிழங்கு, பப்பாளிப்பழம், பூண்டு, ப்ரோகோலி, அப்ரிகாட் பழமும் அதன் விதையும் என இயற்கையான உணவுகளிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் வைத்திருக்கிறான். அவற்றில் மிக சக்தி வாய்ந்த கேன்சர் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்"கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (எல்லாப் புகழும் இறைவனுக்கே!)


இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

 இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் "ஆத்தச்சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை. (பலாப்பழத்திற்கு மலையாளத்தில் chakka என்பார்கள். பலாப்பழத்தைப் போன்ற முட்களும், ஆத்தாப்பழத்தைப் பழத்தைப் போன்ற தோற்றமும் கொண்டதாலோ என்னவோ 'பலா ஆத்தா' என்ற அர்த்தம் கொண்ட பெயர் இங்கு அழைக்கப்படுகிற‌து)

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது.


அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில்கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. அதன் இலைகளும், விதைகளும் வெவ்வேறு மருத்துவ உபயோகத்திற்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டுள்ளன. காலை நேரங்களில் பூக்கும் இதன் வெளிர்மஞ்சள் நிறப் பூவானது அருமையான‌ வாசனையுடையதாக இருக்கும்.

மொட்டின் நிலைகளும் அதன் மலரும்:







"காட்டு ஆத்தா"வின் மருத்துவ குணம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது இறைவன் நமக்குத் தந்த மிகப்பெரிய வரமே! அதுமட்டுமில்லாமல் கேன்சர் இல்லாதவர்கள் (அல்லது இருப்பதை அறியாதவர்கள் யாராயினும்) இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் (இறைவன் நாடினால்) அது கேன்சரைத் தடுக்கும் கேடயாமாகவும் அமைகிறதாம்! 

இந்த இயற்கை கீமோ (Chemo)வினால்,

* கடுமையான‌ குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது. இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான 'கீமோதெரபி' போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது.

* சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.

இதன் மற்ற பொதுவான மருத்துவ குணங்கள்:

* உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை (Immune System) பாதுகாக்கிறது. அதனால் மற்ற‌ கொடிய நோய்களையும் எதிர்க்கிறது.

* நம் உடம்பின் ஆற்றலுக்கு பூஸ்ட்டாகவும், கண்பார்வையை மேம்படுத்தக்கூடியதாகவும் அமைந்துள்ளது.

* "பூஞ்சைத் தொற்று" என்று சொல்லப்படும் Fungal Infection களையும், பாக்டீரியா தாக்குதல்களால் ஏற்படும் நோய்களையும் குணப்படுத்துவதாக உள்ளது.

* உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

* மன அழுத்தம், நரம்பு கோளாறுகளை நிவர்த்தி செய்கிறது.

* அனைத்து விதமான கட்டிகளையும் கரைக்கும் தன்மைக் கொண்டது.

* இதய நோய், ஆஸ்துமா மற்றும் நுரையீரல் சார்ந்த பிரச்சனைகளையும் சீர்செய்கிறது.

இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. இதன் தாவர‌வியல் பெயர் Annona muricata. இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப‌தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் தேடியெடுத்து இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. (மற்ற பெயர்களில் உங்களுக்கு தெரிந்தாலும்நன்மையை நாடி பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்)

இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்"அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi" 
மலையாளம்: "Aatha Chakka"
பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
அரபி: "سورسوب"
ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum" 
இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak"
பிரேசில்: "Graviola"
மலேஷியா: "Durian Belanda"
கிழக்கு மலேஷியா: "Lampun"
தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
வட வியட்நாம்: "Quả Na"
கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")
போர்த்துகல்: "Curassol", "Graviola"

இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.



நம் வீடுகளில் போதுமான அளவு தோட்டமிருந்தால் போதும், நாமும் விதைக்கலாம். சிறிய கன்றுகளாக வாங்கியும் நடலாம். அதன் விதைகள்:


இலைகளின் பலன்கள்:

ஜுரம் வந்தவர்கள் தூங்கச் செல்லும்போது படுக்கைக்கு கீழே அதன் இலைகளை வைத்து, அதன்மேல் மெல்லிய காட்டன் துணியை விரித்து படுத்தால் காய்ச்சலின் தீவிரத்தை பெருமளவில் குறைக்கிறது.

தூக்கமின்மையால் சிரமப்படுபவர்களுக்கு அதன் இலைகளை சுத்தப்படுத்தி, நீரில் போட்டு கொதிக்கவைத்து (கஷாயமாக) தொடர்ந்து கொடுத்தால் அமைதியான உறக்கத்தைத் தரவல்லது.

* இலையின் சாறு வயிறு சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கும், வயிற்றுப் புழுக்களை அழிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

தட்டம்மை ஏற்பட்டவர்களுக்கும், குழந்தைகளுக்கு ஏற்படும்மணல் வாரி அம்மை (அல்லது விளையாட்டு அம்மை)க்கும் இதன் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, இதமான சூட்டிற்கு ஆறியவுடன் அந்த இலைகளைக் கொண்டே மெதுவாக உடம்பில் தேய்த்து, உடம்பு முழுவதும் அந்த தண்ணீர் படுமளவுக்கு கொஞ்சம் கொஞ்சமாக‌‌ ஊற்றிக் குளிக்க வைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மிக விரைவில் குணம் ஏற்படும்.


இந்த காட்டு ஆத்தாப்பழம் இப்படியும் கிடைக்கிறது. பழமாக கிடைக்காதபோது வாங்கி பயன்படுத்த:




அதிலிருந்தோ, அதன் மரத்தின் மற்ற பாகங்களிலிருந்தோ தயாரிக்கப்பட்ட கேப்ஸ்யூல்ஸ்




மேலதிக  தகவல்கள் 
கேன்சர் என்றால் என்ன ? சிறிய விளக்கம் புற்று என்பது ஒரு அசாதாரமான செல்களின் தொகுப்பு (abnormal mass of cells ). இந்த கேன்சர் செல்களின் வளர்ச்சியில் ஒரு கட்டுப்பாடு இல்லாமலும், சீரற்ற நிலையிலும், பொதுவான நார்மல் செல்களில் ஏற்படும் திட்டமிட்ட செல்களின் இறப்பு ( programmed cell death ) இன்றியும், ஒருதான் தோன்றித்தனமாக வளர்ந்து (உதாரணம் ,சாதாரண செல் வளர்ச்சியில், ஒரு செல் இரண்டாக பின் அது நான்கு ,எட்டு, பதினாறு என்று ஒழுங்காக ஒரே அளவில் செல் பிரிந்து வளரும்.. ஆனால் கான்செர் செல் ஒன்று பத்தாக வேறு வேறு அளவிலும், பத்து பத்தாயிரமாக .ஆக இப்படி கட்டுபாடின்றி செல் பிரிந்து வளரும். cancer-cells1 இப்படி கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் கான்செர் செல்கள், உடலில் ஒரு உறுப்பில் அந்த உறுப்பு தாங்கும் திறனையும் தாண்டி( உதாரணம் 100 சாதரான செல் இருக்க வேண்டிய இடத்தில் 10,000 செல் இருப்பதால் செல் இடபற்றாகுறை ஏற்பட்டு), அந்த உறுப்பு அதன் சாதாரண அளவை விட பெரிதாக வீங்குகிறது. இதற்கு தான் tumour என்றோ உறுப்பில் வீக்கத்தை organomegaly என்றோ அழைப்பர். colon-cancer-cell-diagram பின்னர் படிப்படியாக பக்கத்து உடல் உறுப்புகளையும் நேரடியாக ஆக்கிரமித்து , பின்னர் இரத்தம் (blood ), நிணநீர் (lymphatic fluid ) வழியாக உடலின் மற்ற இடங்களுக்குபரவுகிறது. ஒரு நார்மல் செல் கேன்சர் செல்லாக மாறுவதற்கு , ஒரு தூண்டுகோல் (carcinogen) பொதுவாக இருக்கும்.ஆனால் கேன்சராக வளர்ந்தபின், அந்த carcinogen தனது தூண்டுகோளை நிறுத்தினாலும் , ஏற்கனவே ஏற்பட்ட கேன்சர் மாற்றம் , சற்றும் குறையாமல், புதிய வேகத்தில்வளரும். உதாரணமாக புகைப்பதால் , நுரையீரல் புற்று நோய் ஆரம்பித்து விட்டது என்று வைத்து கொள்வோம்..புகைப்பதை நிறுத்திய பிறகும்,அந்த புற்று தனது இயல்பான வேகத்தில் வளருமே ஒழிய, புகைப்பதை விட்டதால் வேகம் குறைவதோ அல்லது நிற்பதோ கிடையாது. IMPORTANCE OF EARLY DIGNOSIS OF CANCER ஆரம்ப கட்டத்தில் கேன்சரை கண்டுபிடிபத்தின் முக்கியத்துவம் எல்லா வகையான கேன்சர் களையும், ஆரம்பகாலத்தில் கண்டுபிடித்து விட்டால், குணப்படுத்துவது மிக எளிது.ஆரம்பகால கேன்சரின் நோய் அறிகுறி, மிக இலகுவான ஆரம்ப கால சோதனை, மூலம் இதை கண்டு பிடிப்பது எளிது என்றாலும், சில ஆரம்பகால கேன்சரின் அறிகுறி, சாதாரண மற்ற நோய்களின் அறிகுறி மாதிரியாக இருப்பதால், சில கேன்சர் அறிகுறி இருந்தால் பயப்பட தேவை இல்லை. இந்த அறிகுறிகளுடன், கேன்சருக்கான பிரத்தியோக அறிகுறிகளான, எடை குறைந்து போதல், பசி இல்லாமை, இரத்த சோகை, எளிதில் சோர்வு அடைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், டாக்டரை அணுகி தனக்கு கேன்சர் இல்லை என்பதை உறுதி ப்படுத்தி கொள்ளுங்கள். அநேக கேன்சர் அது அட்வான்ஸ் நிலைக்கு போவதற்கு காரணம், ஆரம்பகால அறிகுறிகள் தெரிந்தும் அதை உதாசீனபடுத்தி, கண்டு கொள்ளாமல் இருப்பது, பெண்கள் மார்பில் கட்டி தென்பட்ட உடன் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு அது முற்றிய உடன் பரிசோதனை செய்தல், பிறப்பு உறுப்பில் கேன்சருக்கான மாற்றம் தெரிந்தும் அதை மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்காமல், அட்வான்ஸ் ஆன உடன் பரிசோதிப்பது தான் காரணம். மற்றொரு காரணம், ஆரம்ப நிலையை கண்டுபிடிக்க, பரிசோதனை செய்தால், நமக்கு ஏதாவது நோய் என்று வந்து விடுமோ என்ற பயம் காரணமாக, ஸ்க்ரீனிங் டெஸ்ட் பண்ணாமல் தவிர்த்தல்..ஆரம்ப காலத்தில் கேன்சர் கண்டுபிடிக்கப்பட்டு, முற்றிலும் குணமாகி சராசரி வாழ்க்கை வாழ்பவர்களை அதிகம் நாம் பார்க்கிறோம் 

கேன்சர் குடும்பத்தில் இரத்த சொந்தங்களில் வருமா? என்றால், ஒரு சில கேன்சர் மட்டும் சில குறைவான சதவிகிதத்தில், (மார்பகம்,இரத்தம்,சினைப்பை ) குடும்பத்துக்குள் வரும் வாய்ப்பு உண்டு. எனவே ஏற்கனவே, குடும்பத்தில் கேன்சர் நோயாளி இருந்தால், அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், கேன்சர் வரும் முன் கண்டுபிடிக்கும் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.. genes-cancer கேன்சர்க்கு என்று பிரத்தியோக மரபணு ஜீன் உள்ளது.. அதற்க்கு ஆன்கோஜீன்(ONCOGENE ) என்று பேர். இந்த கேன்சர் மரபணு இருக்கும் எல்லோருக்கும் கேன்சர் வருமா என்றால், அது கிடையாது.இந்த கேன்சர் மரபணு இருந்தும , கூட மற்ற கேன்சர் உண்டு பண்ணும் காரணிகள் என்று அழைக்கப்படும் CARCINOGEN , இந்த மனிதர் மீது ஆதிக்கம் செலுத்தா விட்டால், கேன்சர் வரும் வாய்ப்பு இல்லை. உதாரனர்த்திற்கு நுரையீரல் புற்று நோய் உண்டு பண்ணு காரணிகளான (CARCINOGEN ), புகை பிடித்தல், மற்றும் சுற்று புற சூழல் மாசு..ஒரு மனிதற்கு நுரையீரல் கேன்சர் வரும் ONCOGENE இருந்தும், அந்த மனிதர் புகை பிடிக்காமல், சுற்று புற மாசுக்கு தன்னை ஆதிக்கம் செலுத்தவிடாமல் இருந்தால், அந்த மனிதர்க்கு நுரையீரல் புற்று நோய் வராது. அதுபோல் ONCOGENE என்னும் கேன்சர் மரபணு இல்லாமல் இருந்தால், புற்று நோய் அறவே வராது என்றால், அதற்க்கு கண்டிப்பாக வராது என்று அடித்து சொல்ல முடியாது. இந்த மரபணு இல்லாமல் இருந்து, அம்மனிதர் எல்லா CARCINOGEN என்னும் புற்றுவை உண்டு பண்ணும் காரணிகளுக்கு உட்பட்டால்,அவருக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு உண்டு. carcinogen உதாரணமாக,ஒரு மனிதர்க்கு ONCOGENE இல்லாமல், அவருக்கு கூர்மையான பல் இருந்து அவர் தாடை உள்புறத்தை குத்திக்கொண்டு பல ஆண்டுகள் இருந்தால், அதன் உடன் அவர் பாண் , புகையிலை பழக்கம் இருந்து அந்த நச்சு பொருள்களை , அந்த பல் குத்திய இடத்தில் அதிக நேரம் சேர்த்து வைத்து, தொடர்ந்து அந்த புண் பட்ட இடத்தை IRRITATION கொடுத்தால், அவருக்கும் வாய் புற்று நோய் வரும். எனவே புற்று நோய்க்கு சுற்று புற சூழழ் மற்றும் மனிதனின் பழக்க வழக்கங்களும் ஒரு ஊக்குவிப்பு காரணமாக இருக்கிறது. oncogenes இந்த ONCOGENE என்னும் புற்று மரபணு ஒரு மனிதர்க்கு இருக்கிறதா என்று அறியும் சோதனை இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை (ஆய்வு நிலையில் உள்ளது 
. ஆக்கம்: டாக்டர் D.முஹம்மது கிஸார் குழந்தை நல மருத்துவர் சென்னை

கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியவை. Part -1 நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்திலுருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்‌கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்: 1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். 2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது. 3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது. 4) ஒருவருக்கு கேன்சர் இருக்கிறது என்றால் அவருக்கு பலவிதமான சத்து குறைபாடு (nutritional deficiencies) உள்ளதாக அர்த்தமாகிறது. இதற்கு மரபு, சுற்றுச்சூழல், உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளாகிறது. 5) சிறப்பான உணவு கட்டுப்பாட்டின் மூலம் நாம் இந்த ஊட்ட சத்து குறைப்பாட்டை நீக்கலாம். தேவையான சத்துள்ள உணவின் மூலமாக நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ளலாம். 6) கீமொதெரபீ சிகிச்சை வேகமாக வளர்ந்து வரும் கேன்சர் செல்களை மட்டுமல்லாமல், எலும்பு, இரைப்பை போன்றவற்றில் வளரும் ஆரோக்கியமான செல்களையும் அழித்து விடுகிறது. மேலும் குடல், கிட்னி, இதயம், மூச்சுக்குழல் போன்ற பல உறுப்புகளையும் பாதிக்கிறது. 7) கேன்சர் செல்லை அழிக்கும் கதிர் வீச்சானது (Radiation), ஆரோக்கியமான செல்கள், உறுப்புகள், திசுக்கள் போன்றவற்றை எரித்தும், வடுக்கள் ஏற்படுத்தியும் அழிக்கிறது. 8) ஆரம்பகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியின் (tumor) அளவைக் குறைக்க செய்கிறது. எனினும் நீண்டகால கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சை கேன்சர் கட்டியினை அழிக்க பெரும்பாலும் உதவுவதில்லை. 9) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் உடம்பில் வளரும் நச்சு மூலம் நோய் எதிர்ப்பு சக்தியானது அதற்க்கு ஏற்றார் போல் சமரசம் செய்து கொள்ளும் அல்லது அழிக்கப் பட்துவிடும். இதனால் மனிதனுக்கு பலவிதமான பிரச்சனைகளும், நோய்களும் ஏற்படும். 10) கீமொதெரபீ மற்றும் கதிர் வீச்சு சிகிச்சையினால் கேன்சர் செல்கள் எதிர்ப்பு சக்திப் பெற்று நாளடைவில் அழிக்க முடியாமல் போய்விடுகிறது. அறுவை சிகிச்சையும் கேன்சர் செல்கள் மற்ற இடங்களில் பரவ ஒரு காரணமாகி விடுகிறது. 11) கேன்சரை எதிர்த்துப் போராட சிறந்த வழியானது, கேன்சர் செல்கள் பெருக்கம் ஆகக்கூடிய உணவுகளை நாம் உண்ணாமல் தவிர்ப்பதே ஆகும். 12) இறைச்சியில் உள்ள புரதமானது ஜீரணிக்க கடினமாகவும், ஜீரணமாக அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. மேலும் ஜீரணமாக அதிக செரிமான நொதித் தேவைப்படுகிறது. ஜீரணமாகாத இறைச்சியானது குடலில் தங்கி அழுகி, மெதுவாக நஞ்சாகிவிடுகிறது. 13) கேன்சர் செல்லின் சுவரானது கடினமான புரதத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே இறைச்சி சாப்பிடுவதை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதால், நொதியானது (enzymes) தனது சக்தியை கேன்சர் செல்லின் கடினமான சுவரை தாக்கி, உடலின் அழிக்கும் செல்லானது (body's own killer cells) கேன்சர் செல்லை அழிக்க உதவியாகிறது. 14) IP6, Flor-ssence, Essiac, anti-oxidants, vitamins, minerals, EFAs etc, போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்தி, உடலின் அழிக்கும் செல்கள் (body's own killer cells) மூலம் கேன்சர் செல்களை அழிக்க உதவி செய்கிறது. வைட்டமின் E போன்றவை உடலில் உள்ள பாதிக்கப்பட்ட, தேவையற்ற செல்களை நீக்கும் முறையை ஊக்குவிக்கிறது. (Other supplements like vitamin E are known டு cause apoptosis, or programmed cell death, the body's normal method of டிச்போசிங் of damaged, unwanted, or unneeded cells) 15) கேன்சர் என்பது மனம் (mind), உடல் (body) மற்றும் ஆன்மாவின் (Spirit) நோயே! நேர்மறையான, ஆரோக்கியமான எண்ணங்கள் கேன்சரை எதிர்த்துப் போராடும் வல்லமையை அளிக்கிறது. கோபம், மன்னிக்கும் மனமின்மை, எதிர்மறையான எண்ணங்கள் போன்றவை மன அழுத்தத்தையும், உடலின் அமிலத்தன்மையையும் அதிகரிக்கிறது எனவே மன்னிக்கும் குணத்தையும், அன்பு செலுத்தவும், ஆசுவாசப்படுத்தி கொள்ளவும், வாழ்க்கையை அனுபவிக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!

Part - 2 16) ஆக்சிஜென் மிகுந்த சூழ்நிலையில் கேன்சர் செல்லானது வளர வாய்ப்பில்லை. தினமும் உடற்பயிற்சி, ஆழ்ந்த சுவாசம் போன்றவை உடலின் செல்களுக்கு நிறைய ஆக்சிஜென் கிடைக்க உதவுகிறது. மூச்சுப் பயிற்சியானது(Oxygen therapy) உடலில் உள்ள கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது. உடலில் கேன்சர் செல் வளர காரணிகள்:- 1) கேன்சர் செல்லுக்கு சர்க்கரை ஒரு நல்ல உணவு. எனவே சர்க்கரையை தவிர்ப்பது கேன்சர் செல்லுக்கு தேவையான ஒரு முக்கிய உணவை நிறுத்துவது போன்றது. சர்க்கரைக்கு மாற்றாக உள்ள NutraSweet, Equal,Spoonful, etc போன்றவையும் Aspartame எனும் அமிலத்தால் தயாரிக்கப்படுவதால் இவையும் பாதிப்பானாதே! எனவே குறைந்த அளவில் தேன், மொலஸஸ், Manuka போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். Table Salt-ல் வெள்ளை நிறத்திற்க்காக கெமிக்கல் சேர்ப்பதால் இதற்கு மாற்றாக Bragg's amino or sea salt போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். 2) பால் உடலில் சளியை உற்பத்தி செய்கிறது, குறிப்பாக இரைப்பை-குடல் (gastro- intestinal)பகுதியில் சளியால் கேன்சர் செல் நன்கு வளரும். எனவே பாலுக்கு மாற்றாக இனிப்பில்லாத சோயாப் பாலை எடுத்துக் கொள்வதன் மூலம், கேன்சர் செல் பெருக்கத்தைக் குறைக்கலாம். 3) அமிலத் தன்மையில் கேன்சர் செல் நன்கு வளரும். இறைச்சி சம்பந்தமான உணவுகள் அமிலத் தன்மை வாய்ந்தது. எனவே மாட்டிறைச்சி, பன்றி இறைச்சிக்குப் பதிலாக மீன், குறைந்த அளவு சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் இறைச்சியானது பிராணிகளின் ஹோர்மோன், ஒட்டுண்ணிகள், ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை கொண்டுள்ளது, இது மிகவும் ஆபத்தானது.. 4) ஒரு சிறந்த உணவு (Diet) என்பது 80% ஃப்ரெஷ் காய்கறிகள், ஜூஸ், முழு தானியங்கள், விதைகள், பருப்புகள் மேலும் சிறிதளவு பழங்கள் உடலை நல்ல காரத் தன்மையில் வைத்திருக்கிறது. 20% சமைத்த உணவாக இருக்கலாம், பீன்சயும் சேர்த்து. ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் உயிரோட்டமுள்ள நொதிகளை அளிக்கிறது, இவை 15 நிமிடங்களில் நன்கு உறிஞ்சப்பட்டு, ஊட்ட சத்து அளித்து நல்ல செல்கள் வளர உதவுகிறது. ஆரோக்கியமான செல்கள் வளர உதவும் உயிரோட்டமுள்ள நொதிகளை பெற . ஃப்ரெஷ் காய்கறிகள் ஜூஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை பச்சை காய்கறிகள் எடுத்துக் கொள்ளவும்! நொதிகள் (enzymes) 104 degrees F (40 degrees C) வெப்பத்தில் அழிந்து போய் விடுகிறது. 5) டீ, காஃபீ, சாக்லெட் போன்றவற்றில் அதிககளவு காஃபீன் உள்ளதால் இவைகளை தவிர்த்து விடவும். இதற்கு மாற்றாக க்ரீன் டீ (Green Tea) எடுத்துக் கொள்ளவும்! இதில் கேன்சர் செல்களை எதிர்க்க கூடிய ஆற்றல் உள்ளது. சுத்திகரீக்கப்பட்ட நீரை மட்டுமே அருந்தவும். நச்சு மற்றும் உலோக கலவை அதிகமுள்ள குழாய் நீரை தவிர்த்து விடவும். Distilled water is acidic, avoid it. கண்டிப்பாக இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறோம். 

நன்றி ​​- payanikkumpaathai,haiderghouse ​ 

Monday, August 3, 2015

சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

ஒரு­வ­ருக்கு சிறு­நீ­ர­கத்தில் கல் ஏற்­பட்­டு­விட்டால், கீழ் வயிற்றில் அதீ­த­மான வயிற்­று­வலி ஏற்­படும். முதுகுப் பகு­தியில், சிறு­நீ­ரக மண்­ட­லத்தில் வலி அதி­க­மாக இருக்கும். சிறுநீர் கழிக்­கும்­போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சி­னைகள் இருக்கும். சிறு­நீ­ரகக் கல் இருப்­பதைக் கண்­ட­றிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரி­சோ­த­னைகள் போது­மா­னவை.

இதற்கு என்­னதான் சிகிச்சை?
சிறு­நீ­ர­கத்தில், சிறுநீர்ப் பையில், சிறு­நீ­ரகக் குழாயில் எங்கே கல் உள்­ளது என்று கண்­ட­றிந்­து­விட்டால், என்ன மாதி­ரி­யான சிகிச்சை அளிக்­கலாம் என்­பதை முடிவு செய்­து­வி­டலாம். சுமார் 5 மி.மீ. வரை அள­வுள்ள கற்­களை, மருந்து, மாத்­தி­ரைகள் மூல­மா­கவே கரைத்­து­வி­டலாம். பெரிய கற்­க­ளுக்கு வேறு மாதி­ரி­யான சிகிச்­சைகள் உள்­ளன.
வெளியில் இருந்து ஒலி அலைகள் மூலம் கல் உடைக்கும் முறை: (Extracorporeal shock wave lithotripsy) 
இந்த முறையில் வெளியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் செலுத்­தப்­பட்டு கல் உடைக்­கப்­படும். 1 முதல் 1.5 செ.மீ. வரை அள­வுள்ள கற்­களை இந்த முறையில் அகற்­றலாம். ஆனால், கல் உடைக்­கப்­ப­டும்­போது அதன் சித­றல்கள் வேறு எங்­கேனும் சிக்­கிக்­கொள்ளும் ஆபத்து இதில் உண்டு.
துளை மூலம் சிறு­நீ­ர­கத்தில் கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை: (Percutaneous Nephro Lithotripsy)
ஒரு­கா­லத்தில் பெரிய சிறு­நீ­ரகக் கற்­களை அகற்ற திறந்த அறுவைச் சிகிச்சை செய்­யப்­பட்­டது. இதற்கு மாற்­றாக வந்­தது தான் இந்த முறை. முதுகில் சிறிய துளை போட்டு, 1.2 செ.மீ. அள­வுக்கு மேல் உள்ள கற்­களை வெளியே எடுக்கும் முறை இது.
பிறப்பு உறுப்பு வழியே கற்­களை அகற்றும் முறை (Retrograde intrarenal surgery):
எந்த அறுவைச் சிகிச்­சையும் இன்றி, பிறப்பு உறுப்பு வழி­யாக குழாய் போன்ற கரு­வியைச் செலுத்தி லேசர் கற்­றைகள் மூலம் கற்­களை உடைத்து வெளியே எடுக்கும் முறை இது. மெல்­லிய டெலஸ்கோப் துணை­யுடன் சிறு­நீ­ர­கத்தின் உள் அமைப்பைக் கணி­னியில் பார்த்­துக்­கொண்டே செய்­யப்­படும் சிகிச்சை இது என்­பதால், துல்­லி­ய­மான சிகிச்சை உத்­த­ர­வாதம். நோயா­ளிக்குத் துளி ரத்தச் சேதம்­கூட இந்த முறையில் ஏற்­ப­டாது என்­பது கூடுதல் நன்மை.
சிறு­நீ­ரகக் கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தினமும் குறைந்­தது இரண்­டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்­கறி, பழங்­களைச் சாப்­பிட வேண்டும். கல்­சியம் ஆக்­சலேட், கல்­சியம் பாஸ்பேட் ஆகிய உப்­புக்­கள்தான் சிறு­நீ­ரகக் கற்கள் உரு­வாக முக்­கியக் கார­ணங்கள். எனவே, இவை உரு­வாக அதிக வாய்ப்­புள்ள மாட்­டி­றைச்சி மற்றும் ஆட்­டி­றைச்­சியைக் கூடு­மா­ன­வரை தவிர்க்­கலாம்.
சிறு­நீ­ரகக் கல் வந்­து­விட்டால், என்ன செய்ய வேண்டும்?
உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்­சாறு, இளநீர், வாழைத்­தண்டு சாறு அதிகம் சேர்த்­துக்­கொள்ள வேண்டும். வாழைத்­தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக அளவில் உட­லுக்குத் தேவை­யான தாது உப்­புக்­களும் உள்­ளன. இவை சிறுநீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்­ளப்­படும். எலு­மிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்­களின் ஜூஸ் குடிப்­பதன் மூலம், அது சிறு­நீரில் அமிலத் தன்­மையைக் குறைத்து கல் உரு­வா­வதைத் தடுக்கும். ஒரு­வ­ருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்!

சிறுநீரக கற்கள் உள்ளவர்களுக்கான பொதுவான உணவு முறைகள்

அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்
இளநீர்
இதில் பொட்டாசியமும், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்க வல்லவை.

காரட், பாகற்காய்
இவற்றில் சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பல வித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

பழங்கள், பழச் சாறுகள்
வாழைப்பழம், எலுமிச்சை,
இவற்றில் விட்டமின் B6 சத்தும், சிட்ரேட்(Citrate) சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறுநீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட்(Oxalate) என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

பைனாப்பிள் சாறு
இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் (Fibrin) எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் (Enzymes) உள்ளன.

கொள்
இதில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை.

நார்ச்சத்து உள்ள உணவுகள்
பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்றவற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு
உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.

தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்.
காய்கறிகள்
தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக் கொள்ளலாம்) பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது.
கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக் அமிலம்(Uric Acid) அதிகம் உள்ளது. பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளான ப்யூரின்களும் (Purines) அதிகம் உள்ளன. இந்தக் காய்கறிகளைத் தவிர்க்கவும்
.
பழங்கள்
சப்போட்டா, திராட்சை இவற்றில் ஆக்சலேட் அதிகம்.

எள்
இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. அதிக எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

அசைவ உணவுகள்
ஆட்டிறைச்சி(Mutton), மாட்டிறைச்சி (Beef), கோழிக் கறி (Chicken), முட்டை (Egg), மீன் (Fish) இவை அனைத்திலும் ப்யூரின்களும், யூரிக் அமிலமும் அதிகம். யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

முந்திரிப்பருப்பு
இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்தவை ஆகும். தவிர்க்கவும்.

சாக்லேட், சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீ ஆகியவற்றிலும் ஆக்சலேட் உள்ளது.
தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். கடினத் தன்மை உள்ள நீராய் இருந்தால் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.
ஒவ்வொரு வகை கற்களுக்கும் சில சிறப்பு உணவு முறைகள்
கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்த வகை கற்கள்
தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். அதிக கால்சியம் உள்ள பால், பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை, ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட், கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்ற உணவுகளை குறைத்துக் கொள்ளவும். வயிறு அல்சருக்கு சில சமயம் எடுத்துக் கொள்ளும் ஜெலுசில் போன்ற கால்சியம் கலந்த ஆன்டாசிட் மருந்துகளைத் தவிர்க்கவும். உணவில் உப்பையும் குறைத்துக் கொள்ளவும்.

யூரிக் அமில வகை கற்கள்
தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். ப்யூரின்கள் அதிகம் உள்ள மட்டன், சிக்கன், முட்டை, மீன், பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

ஸ்ட்ரூவைட் வகை கற்கள்
இந்த வகை கற்கள் சிறுநீரகங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன. மருத்துவர் பரிந்துரைக்கும் கிருமிக் கொல்லி மருந்துகள் (ஆன்டிபையாடிக்ஸ் - Antibiotics) மருந்துகளை தவராமல் எடுத்துக் கொள்ளவும் தினம் குறைந்தது 12 டம்ளர் நீர் அருந்தவும்.

சிஸ்டின் வகைக் கற்கள்
இவை மிக அபூர்வமானவை. மீன் உணவை தவிர்க்கவும். தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும்.

சிறுநீரக கல்லையும் கரைக்கும் ஹோமியோபதி மருத்துவம்

மனிதனை அச்சுறுத்தும் நோய்களில் மிகப் பழமையானவைகளில் ஒன்று சிறுநீரகக்கல், கி.மு. 600 லேயே இந்நோய் கண்டறியப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சிறுநீரக கல்லுக்கு இந்திய மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி வெற்றி பெற்றிருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். தொழில் வளர்ச்சியில் தன்னிறைவு கண்ட நாடுகளில் சிறுநீரக கல் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஏராளம், மக்கள் தொகை எண்ணிக்கையில் 12 % பேர்களுக்கு சிறுநீரகக்கல் பெரும் பிரச்சனையாக உள்ளது. பொதுவாக ஆண்டுக்கு 30 லட்சம் நபர்கள் பாதிப்புக்குள்ளாவதில் 5 லட்சம் பேர்களுக்கு கல் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளிகள் முதல் சின்னக் குழந்தைகளையும் சிறுநீரகக்கல் விட்டு வைப்பதில்லை. பெண்களை விட ஆண்கள் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதால் சிறுநீரகம் செயலிழந்து போகும் என்றும், தங்கள் வாழ்க்கையை முடிந்து விட்டதாகவும் மன முடைந்து விடுகின்றனர்.

சிறுநீரகக்கல் (Calculus)

போக்குவரத்து வாகனம் சாலை வசதி இல்லாத காலத்தில் தூரப் பயணம் மேற்கொள்பவர்கள். பை நிறைய கற்களை கொண்டு சென்று குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்றாக போட்டுக் கொண்டே செல்வார்கள். திரும்பி வரும்போது கற்களை எடுத்துக் கொண்டு வருவார்கள். எத்தனை கல் செலவானது என்பதை பொறுத்து பயண தூரத்தை கணக்கிட்டுக் கொள்வார்கள். இம்முறைக்கு Calculus என்று பெயர். சிறுநீரகத்தில் கல்லுக்கும் Calculus என்று பெயர் வைத்து விட்டார்கள்.

காரணம் இயந்திரமயமாகிப் போன வாழ்க்கை முறையில் தவறான உணவுப்பழக்கமும், பிறவியிலேயே மரபணுக்களில் காணப்படும் சில குறைபாடுகளாலும், உடலுக்கு சத்து தேவை என்று தாமாகவே சத்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதாலும், எல்லா வகையான மதுபானங்களையும், அருந்துவதாலும், இறைச்சி மற்றும் முட்டைக்கோசு, தக்காளி, காலிஃப்ளவர், வெள்ளரி, சப்போட்டா, போன்ற காய்கறி பழங்களை அதிகளவு உண்பதாலும் தாகத்தின் போதும் கடுமையான உடற்பயிற்சிக்கு பின்பும் நீர் அருந்தாமையாலும், சிறுநீரகப் பையில் அடிக்கடி தொற்று ஏற்படுவதாலும் சிறுநீரிலும், இரத்தத்திலும், சுண்ணாம்புச்சத்து அதிகமிருக்க கூடிய நிலையிலும், சிறுநீர் கழிக்க வேண்டுமென்ற உணர்வு ஏற்பட்டவுடன் சிறுநீரை அடக்கி வைப்பதாலும் கற்கள் தோன்றுகின்றன.

மீண்டும் மீண்டும் கல் உருவாவதற்கான காரணங்கள்

வளர்சிதை மாற்றக் கோளாறுகள் காரணமாகவும், தைராய்டு சுரப்பிக்கு அருகில் உள்ள அனியச் சுரப்பிகள், பாரார்த்தார் மோன் என்ற சுரப்பினை அதிகமாக சுரப்பதால் இரத்தத்தில் சுண்ணாம்புச்சத்து அதிகரிப்பதாலும் சிறுநீரகத்தில் கல் மீண்டும் மீண்டும் உருவாகின்றது.

சிறுநீரகங்களின் அமைவிடம்

முதுகுப்புறம் விலா எலும்புக்கு சற்று கீழே பக்கத்திற்கு ஒன்றாக அவரை விதை வடிவில் வலது, இடது, என இரண்டு சிறுநீரகங்கள் இருக்கும். ஒரு சிறுநீரகத்தின் சராசரி அளவு 4 1/2 அங்குலம் நீளமும் 2 1/4 அங்குலம் சுற்றளவும் இருக்கும். (தோராயமாக ஒரு மனிதனின் மூடிய கையளவு) கிட்டத்தட்ட இருதயமும் இதே அளவில் தான் இருக்கும்) இரண்டு சிறுநீரகங்களும் நேர்கோட்டில் அமைந்திருப்பதில்லை. இடது புறத்தை விட வலதுபுறம் சற்று கீழிறங்கி இருக்கும். இரண்டு சிறுநீரகங்களிலிருந்தும் பக்கத்திற்கு ஒன்றாக சிறுநீர் இறங்கும் குழாய் (Ureter) சிறுநீர் பையோடு (Urinary Bladder) இணைகிறது சிறுநீர்பையில் வந்து சேரும் சிறுநீர் புறவழிப்பாதை (Urethra) மூலம் வெளியேறுகிறது.

சிறுநீரகக்கற்களின் உற்பத்தி

நாம் உட்கொள்ளும் உணவிலுள்ள கற்களே சிறுநீரகத்தில் தங்கி விடுகிறது என்று பலர் தவறாக கருதிக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மை என்ன வென்றால் நாம் உணவு மூலம் உட்கொள்ளுகிற கற்கள் இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், ஆகியபகுதிகளை கடந்து மலத்துடன் சேர்ந்து வெளியேறுகிறது. பின் எவ்வாறு சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுகிறது என்றால் நமது உடலிலுள்ள இரத்தத்தை நாள் தோறும் ஒவ்வொரு நிமிடமும் சுத்தம் செய்து வடிகட்டி உடலுக்கு வேண்டாத பொருட்களை கழிவாக, சிறுநீராக பிரிக்கும் போது சிறுநீரில் கரைந்திருக்கும் தாதுப் பொருட்கள் படிந்து படிகங்களாக வளர்ந்து கற்களாக உருமாறுகின்றன.

கற்களின் வகைகள்

கால்சியம் ஆக்சாலேட் 75 % பேர்களுக்கு ஏற்படுகிறது. கால்சியம் பாஸ்பேட் 15 % பேர்களுக்கு ஏற்படுகிறது. யூர்க் அசிட் 8 % பேர்களுக்கு ஏற்படுகிறது

கால்சியம் வகை கல்

இரத்தத்தில் கால்சியம் வகை அதிகரிப்பதாலும் ஹைபர் பாரா தைராய்டு அதிக செயல்பாடு காரணமாகவும், உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் கோளாறுகள் காரணமாகவும், சிறுகுடலில் அதிகப்படியான கோளாறுகள் அடிக்கடி ஏற்பட்டால் அல்லது சிறுநீரகத்தில் கோளாறு ஏற்பட்டாலும் சிறுநீரில் கால்சியம் வெளியேறும் வாய்ப்பு உள்ளது. இவைகளினால் தான் கால்சியம் வகை கற்கள் உருவாகிறது. இவ்வகை கற்கள் சொரசொரப்பாக, கரடு முரடாக கடினத் தன்மையுடையதாக கருநிறத்தில் இருக்கும். உணவில் விலங்கு புரதம், பால் பொருள்கள், பாலிலிருந்து தயாரித்த பொருட்கள் உணவில் தவிர்க்க வேண்டும். இயற்கையான உணவு, பழங்கள், காய்கறிகள் மூலம் கிடைக்கும் புரதம் தேவை. அவற்றை ஒதுக்க வேண்டியதில்லை

கால்சியம் பாஸ்பேட் வகை கற்கள்

இது பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெண்களிடம் உருவாகும், அடிக்கடி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படுகிறவர்களுக்கு இக்கல் உருவாகும், பெரிய வடிவத்தில் கல் வளரும் வாய்ப்பு உள்ளது. எனவே இக்கல் மொத்த சிறுநீர் பாதையையும் அடைக்கும் வாய்ப்பு உள்ளது. சாம்பல் கலரில் அழுக்கு படிந்த வெள்ளைநிறம் கொண்ட இக்கல்லை அழுத்தினால் மென்மையாக இருக்கும்.

யூரிக் ஆசிட் வகை கற்கள்

சிறுநீரில் அதிகளவு யூரிக் ஆசிட் வெளியேறுவதால் மூட்டுவாத வலிகள், கால் பெருவிரல் வாதம் வலி ஏற்படும். இந்நோயாளிக்கு கல் மஞ்சள் நிறமாக இருக்கும். கல்லை அழுத்தினால் ஓரளவு கடினத் தன்மையுடன் கூடிய மென்மையுடன் காணப்படும். கடுமையான நோய்வாய்ப்பட்ட காலத்தில், கடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு நீர் தேவையான அளவு அருந்தாததால் இவ்வகையான கல் உருவாகும். இவர்களுக்கு சிறுநீர் அடர்த்தியாக மாறும். பலகற்கள் ஒரேநேரத்தில் உருவாகும். இவர்கள் உணவில் இறைச்சி, தக்காளி, ஆப்பிள், காலிஃ ப்ளவர், உருளைக்கிழங்கு, ஆரஞ்சு, எலுமிச்சை தவிர்க்க வேண்டும். கால்சியம் வகைகற்கள் உள்ளவர்கள் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கல் தோன்றும் இடமும் அறிகுறியும்

சிறுநீரகம் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர் இறங்கி வரும் குழாய்கள் சிறுநீர்ப்பை இந்த மூன்று இடங்களில் எங்கு வேண்டுமானாலும் கல் உருவாகலாம். சிறுநீரகத்தின் அடிபாகத்தில் கல் இருந்தால் பொதுவாக வலி தோன்றாது. சிறுநீர் இறங்கும் குழாய் நுழைவாயிலில் கல் வந்து நிற்கும் போது கடும் வலியையும் ஆழமான முதுகு வலியையும் ஏற்படுத்தும், கல் நகரத்துவங்கும்போது கல் வடிவத்தை பொறுத்தும் நகரும் வேகத்தை பொறுத்தும் வலி அதிகரிக்கும். சிறுநீர் இறங்கும் குழாயின் மேல் பாகத்தில்கல் சிக்கிக் கொண்டு மீண்டும் நகர்ந்து கல் கீழிறங்கி வர முடியாத நிலையில் இருக்கும்போது வலி முதுகிலிருந்து முன்பக்கமும் சேர்ந்து வரும் அப்போது வயிற்றுப்புண்ணோ, (அல்சரோ) என்று தவறுதலாக நோயை அனுமானிக்க நேரிடும்.

வலதுபுற சிறுநீர் இறங்கு குழாயின் நடுபாகத்தில் கல் மாட்டிக் கொண்டு கீழிறங்கி வரமுடியாத, நிலையில் வயிறுவலி, பிறப்புறுப்பின் மேட்டுப்பாகம் வரை பரவும். இப்போது குடல் வால் அழற்சியாக இருக்குமோ என நோயை தவறாக கருத நேரிடும். இத்தகைய சந்தேகங்களுக்கு X-Ray, Scan பரிசோதனைகள் மூலம் விடை காண முடியும். சிறுநீர் இறங்கும் குழாயின் கீழ்பாகத்தில் கல் சிக்கிக் கொண்டால் அப்போது வலி தொடையிடுக்கு, விதைப்பகுதி, பெண்களுக்கு பிறப்புறுப்பில் கூட வலி ஏற்படும்.

சிறுநீர் இறங்கும் குழாயில் கல் சிக்கிக் கொள்ளும் நேரங்களில் கடுமையான கிருமித் தொற்று ஏற்படும். இதனால் நீர்கடுப்பு நீர் சொட்டு சொட்டாக போதல் எரிச்சல் போன்றவை ஏற்படும். கல் சிறுநீர் பையில் வந்து விழுந்து விட்டால் கல் இங்குமங்கும் உருண்டு வட்ட வடிவமாக அல்லது முட்டை உருவில் மாறும். இங்கிருந்து சிறுநீர் புறவழியாக கல் அதிகாலை வெளியேறும் போது வலிக்கும் இந்நிலையில் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.

ஹோமியோபதி சிகிச்சை

கல் வடிவம் கல் உருவாகியுள்ள இடம் ஆகிய நிலைகளுக்கு தகுந்தாற்போல சிகிச்சை அமைகிறது. ஹோமியோபதி மருந்து தேர்வு நபருக்கு நபர் மாறுபடும் கல் உருவாகியுள்ள இடத்தை பொறுத்தும், வலியின் தன்மையை பொறுத்தும் நோயுள்ள போது நோயாளியின் மனநிலையை பொருத்தும் மருந்து தேர்வு செய்து சிகிச்சையளிக்கப்படுவதால் கல் கரைந்து வெளியேறுகிறது. குறிப்பாக ஹோமியோபதி மருத்துவ முறையில் கல் மீண்டும் மீண்டும் உருவாகாமல் தடுக்க பெருமளவு வாய்ப்புள்ளது.

சிறுநீரகக் கல்லை கரைக்கவும், வெளியேற்றவும் உதவும் சில முக்கிய ஹோமியோபதி மருந்துகள்

பெர்பெரிஸ் வல்காரிஸ் Q : சிறுநீரகம், சிறுநீர் இறங்கும் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் உள்ள கல்லை கரைக்கும், வலியை குறைக்கும், குத்தும் வலி, சிறுநீரகப் பகுதியில் தோன்றும் வலி உடலில் பல பாகங்களுக்கு பரவும், குறிப்பாக கால் கெண்டை சதை வரை பரவும். முதுகுப்புறம் தோன்றும் வலி அழுத்தினால், குனிந்தால், நிமிர்ந்தால் அதிகரிக்கும் (இம்மருந்து பித்தப்பையில் உள்ள கல்லையும் கரைக்கும் என்பது நினைவில் கொள்ளத்தக்கது)

ஹைட்ரேன்ஜியா Q : இருசிறு நீரகங்களில் தோன்றும் கற்களை கரைக்கவும் வெளியேற்றவும் பயன்படும்.

சரசபரில்லா Q : கல்கரைய உதவும் மருந்துகளில் முக்கியமானது. சிறுநீர் இறங்கி வரும் குழாயில் கல் சிக்கிக் கொண்ட நிலையில் உதவும்

ஓசிமம் கானம் Q : வலது புற சிறுநீரக கற்களுக்கு நல்ல மருந்து சிறுநீர் இறங்கும் குழாயில் கல் சிக்கிக் கொண்ட நிலையில் வலி, பிறப்புறப்பு வரை, விதைப்பகுதி வரை பரவி நோயாளி வலி தாங்க முடியாமல் புரளுவார். புலம்புவார். (இதே குறிக்கு பாகம் 6, 30 என்ற மருந்தும் பயன்படும்)

கோக்கஸ் காக்டி Q : இது ஒரு நல்ல வலி நிவாரணி, இடது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்பை வரை வலி பரவுதல், சிறுநீரில் ரத்தம், யூரிக் அசிட் செங்கல் தூசி போன்ற படிகம், சிறுநீரக பகுதியிலும், அடி முதுகு, தொடையிடுக்குகளில் வலி, அதனால் சிறுநீர் கழிக்க சிரமம்.

கல்கேரியா கார் 30 : சிறுநீரகம், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இருக்கும் கல்லை எளிதாக வெளியேற்ற உதவும்.

டயஸ்கோரியா Q : சிறுநீர்ப்பையில் உள்ள கல்லை கரைக்கும், வலிகள், கை, கால், விரல்கள் வரை பரவும்.

காந்தாரீஸ் 30 : சிறுநீர் கழிக்கும் முன்பு, கழிக்கும் போதும், கழித்தபிறகும் கடுமையான எரிச்சல்.

மெக்பாஸ் 30 , 200 : அஜீரணத்திற்காக அடிக்கடி உட்கொள்ளும் ஆங்கில மாத்திரைகளால் தோன்றும் சிறுநீரககல், சிகிச்சையின் போது தாய்த்திரவம்) தந்து வலி குறைந்தவுடன் அதே மருந்தின் வீரியப்படுத்திய மருந்து கொடுத்தால் விரைவில் குணப்படுத்தலாம்.

த்லாப்சி Q : பெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகளுடன் தோன்றும் யூரிக் அசிட் வகைக்கல்லை கரைக்க பயன்படும்.

கல்கேரியா ரெனாலிஸ் 200 : மீண்டும், மீண்டும் கல் உருவாதைத் தவிர்ப்பதற்கு இம் மருந்து பயன்படும்.

தைராய்டினம் 1 M : மீண்டும், மீண்டும், கல் உருவாவதற்கு (வாரம் 1 டோஸ்வீதம் தைராய்டு பிரச்சனைதான் காரணம் என்று பரிசோதனையில் தெரிந்தால். இரண்டு மாதங்கள்)

லைகோபோடியம் Q, 6 : முதுகுவலி, சிறுநீரில் சிவந்த மணல்கள், வலதுபுறம் வலி, சிறுநீர் கழிக்கும் முன்பு முதுகுவலி அதிகமிருக்கும். கழித்தால் வலி குறையும். 6 வது வீரியத்தில் ஒரு மணிக்கொரு டோஸ் வீதம் ஆறு டோஸ் நிவாரணமில்லை என்றால் 200 வது வீரியத்தில் 2 மணி நேரத்திற்கு ஒரு டோஸ் வீதம் 3 டோஸ் இடையில் பெர்பெரீஸ் வல்காரிஸ் தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் நல்ல பலன் காணலாம்.

சிறுநீரகக் கல் 7 M.M. க்கு கீழ் இருந்தால் லைகோபோடியம் 1 M. (அ) 10 M கொடுத்தால் சில மணி நேரங்களில் கல் வெளியேறி அதிசயம் நிகழ்த்தும், இம்மருந்தே அம்மனிதருக்கு 100 % பொருந்தும் மருந்து (உடல்வாகு மருந்து) என்றால் லைகோபோடியம், இங வீரியம் கல் மீண்டும் உருவாகுவதை தடுக்கும். சிறுநீரக கல் 10 M.M. இருந்தால் லைகோபோடியம் Q,30 ஆகிய வீரியம் பயன்படும். 
(நன்றி : மாற்று மருத்துவம் ஜனவரி 2009)