Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Saturday, March 5, 2016

சென்னைக்கு மீண்டும் பேய் மழை ஆபத்து: விஞ்ஞானிகள் தகவல்

சென்னையை, கடந்த ஆண்டு இறுதியில் மிரட்டிய பெருமழை மற்றும் வெள்ளம் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வரும்' என, சென்னை, அண்ணா பல்கலையில் நடந்த கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்திய தேசிய அறிவியல் அகாடமி, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி மற்றும் அண்ணா பல்கலையின் புவி அமைப்பியல் துறை இணைந்து, சென்னையில் பெய்த பெருமழை குறித்த, விஞ்ஞானிகளின் இரண்டு நாட்கள் கருத்தரங்கை, அண்ணா பல்கலையில் நடத்தின.
கருத்தரங்கில், விஞ்ஞானிகள் பேசியதாவது:'எல் - நினோ' எனப்படும், பசிபிக் பெருங்கடலின் பருவ நிலை மாற்றத்தால், ஒரு குறிப்பிட்ட பகுதியில், எதிர்பாராத அளவுக்கு அதிக மழை பெய்யும்; புவி வெப்பமயமாதலால் வறட்சியும் நிலவும்.சென்னையில் பெய்த பெருமழைக்கு, எல் - நினோ உட்பட, பல காரணங்கள் உள்ளன. வங்கக் கடலின் மேற்கில், சென்னையை ஒட்டியுள்ள கடலோரம் மற்றும் தரைப்பகுதி அதிக வெப்பமயமாகிறது; இதுவும், அதிக மழை பெய்ய காரணம்.சமீபத்தில் பெய்த பெருமழை போன்று வரும் காலங்களிலும், சென்னைக்கு மழை உண்டு; அது, எப்போது என கணிக்க முடியாது. எனவே, முன்னேற்பாடு அவசியம். தற்போதைய நிலையில், தமிழகத்தில் சராசரி மழை அளவு குறைந்துள்ளது; தென் மேற்கு பருவ மழையின் அளவு குறைந்து, வட கிழக்கு பருவ மழையின் அளவு அதிகரித்துள்ளது. நீரை சேமிக்கத் தேவையான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை பேராசிரியர் ராஜாமணி பேசியதாவது: சென்னையில், 2015 நவம்பர், டிசம்பரில் ஏற்பட்ட பெரு மழை, எதிர்பாராத சம்பவமல்ல. வானிலை ஆய்வு மையத்தினர் தெளிவாக முன் அறிவிப்பு விடுத்தனர்; ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நம் அரசுகள் நகர்ப்புறத்தை கட்டமைப்பதில், போதிய கவனம் செலுத்தவில்லை. அனைத்து விவசாய நிலங்களும் கட்டடங்களாகி விட்டன. குளம், ஏரி போன்ற நீராதாரங்களை பாதுகாக்கவில்லை. நீரை சேமிக்க வழியின்றி, நகருக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து, கடலில் சென்று கலந்து விட்டது. எதிர்காலத்தில், இந்த பிரச்னையை சமாளிக்க சுதந்திரமான விஞ்ஞானிகள் குழுவை, அரசு துறைகளுக்கு உதவ அமைக்க வேண்டும். அதில், விஞ்ஞானிகள், நிபுணர்கள், பேராசிரியர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் மூலம் இயற்கை பேரிடர் வரும் முன், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்திய பெருமழையில், அதிக அளவுக்கு நீர் வீணானதால், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது. அதற்கு தற்போதே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராகவன்,
முன்னாள் துணை பொது இயக்குனர் - இந்திய வானிலை ஆய்வு மையம்

கால்பந்துப் போட்டிகளில் வீடியோ காட்சிகள் மூலம் முடிவுகள் மறுபரிசீலனை

கால்பந்து போட்டிகளில் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதற்கு அதிகாரிகளுக்கு உதவும் வகையில், வீடியோவை ஒப்பிட்டு மறுபரிசீலனை செய்வதற்கு, சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஒப்புதல் அளித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு சில போட்டிகளில் மாத்திரமே இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
கோல் போடப்பட்டுள்ளதா, தண்டனைகள் வழங்கப்பட வேண்டுமா, விளையாட்டு வீரர் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமா போன்றவற்றை நடுவர் தீர்மானிப்பதற்கு, இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
இது கால்பந்து வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் என, ஃபிஃபாவின் தலைவர் கியானி இன்ஃபான்டினோ தெரிவித்தார்.
கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் கருத்துகளையும் தாங்கள் கேட்கிறோம் என்பதையே இது காண்பிக்கிறது என அவர் மேலும் கூறினார்.

Friday, March 4, 2016

ஐ நா தீர்மானத்தின் எதிரொலி வடகொரியா ஏவுகணை வீச்சு

வடகொரியா மீது மிகக்கடுமையான தடைகளை, ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை விதித்து சில மணிநேரங்களில், வடகொரியா, தனது கிழக்குக் கடலோரத்திலிருந்து குறுந்தூர எறிகணைகளைக் கடலுக்குள் ஏவியது. ஐ.நா தீர்மானத்துக்குப் பதிலடி வழங்கும் முகமாகவே இந்த எறிகணைகள் ஏவப்பட்டதாகக் கருதப்படுகிறது. 100 தொடக்கம் 150 கிலோமீற்றர் எறிபரப்புடைய 6 எறிகணைகள், கடலுக்குள் ஏவப்பட்டதாக, தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சுத் தெரிவித்தது. இவை, இலங்கை நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு ஏவப்பட்டன. இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சின் பேச்சாளர், கடலுக்குள் ஏவப்பட்டவை ஏவுகணைகளா றொக்கெட்டுகளா என்பதை, அமைச்சு தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார். அத்தோடு, வடகொரியாவினால் மேற்கொள்ளப்படக்கூடிய ஏனைய நடவடிக்கைகள் குறித்துக் கூர்மையான அவதானித்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியா மீதோ அல்லது சர்வதேச சமூகத்தின் மீதோ எதிர்ப்புகளை வெளியிடுவதற்கு, ஏவுகணைகளையோ அல்லது றொக்கெட்களையோ ஏவுவது, வடகொரியாவின் பழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.  


Wednesday, March 2, 2016

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது இன்று பிற்பகல் தற்கொலைப்படை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த எட்டு கார்கள் வெடித்து சிதறின. அதே பகுதியில் மறைந்திருந்த மேலும் சில தீவிரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

அப்போது, இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் ஆப்கான் தேசிய போலீஸ் படை வீரர்கள் இணைந்து தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். 

இந்த துப்பாக்கி சண்டையில் 4 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆப்கான் தேசிய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மற்றும் பொதுமக்கள் 8 பேர் பலியாகினர். 

இந்த தாக்குதலில் இந்திய தூதரகம் கடுமையாக சேதம் அடைந்ததாகவும், அதில் பணியாற்றும் அதிகாரிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வெளியுறவுத்துறை செயலாளர் விகாஸ் ஸ்வரூப், “ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது தாக்குதல் நடத்திய 6 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். 

ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி தூதரகம் முன்பு வந்து தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். மற்றொருவன் கார்கள் நிறுத்துமிடத்தில் தாக்குதல் நடத்தினான். மற்ற 4 தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டையின்போது கொல்லப்பட்டனர்” என்றார்.

சவுதி இராணுவ முகாம் மீது யேமன் இராணுவத்தினர் ஏவுகணைத் தாக்குதல்.

யேமனின் மரிப் மாகாணத்தில் அமைக்கப்பட்டிருந்த சவுதி இராணுவ முகாம் மீது யேமனிய இராணுவத்தினர் இன்று கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் யேமனின் அரபு மொழி அல்- மசீரா இணைய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், மரிப் மாகாணத்தில் அமைந்துள்ள அல்-ரடாவீன் சவுதி இராணுவ முகாமை இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்டளவு சவுதி படையினர் கொல்லப்பட்டுள்ளதோடு, பலர் வீரர்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இந்த ஏவுகணைத் தாக்குதலின்போது கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த சவுதி படையினரின் எண்ணிக்கை தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், யேமனின் தென்மேற்கு மாகாணமான தைஸின் ஜபல் அல் -முஷாரஃப் பகுதியில் நிலைகொண்டுள்ள சவுதி துருப்புக்கள் மற்றும் அவர்களின் இராணுவ உபகரணங்களை இலக்கு வைத்தும் இன்று யேமனியப் படையினர் மற்றுமொரு தாக்குதலை முன்னெடுத்திருந்தனர்.
இதேவேளை, கடந்த வார இறுதியில் மரிப் மாகாணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சவுதி துருப்புக்களை யேமனிய படையினர் கைதுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ: உலகின் மிகவும் ரகசியமான பாதுகாக்கப்படும் இடங்கள்

உலகில் மிகவும் ரகசியமான பாதுகாக்கபடும் இடங்கள் 10 உள்ள அதில் முக்கியமானவை


ஸ்வால்பார்ட் க்ளோபல் சீட் வால்ட், நோர்வே


பூமியில் மிகப் பெரிய இயற்கை பேரழிவு ஏற்படுகிறது என்று நினைத்துக்கொள்ளுங்கள். அடுத்தது என்னவாகும்? மக்களின் வாழ்க்கை சூழல் சூறையாடப்படும்.
பூமியின் உள்கட்டமைப்பு மிகப்பெரிய அழிவை சந்திக்கும். உணவுக்காக மக்கள் என்ன செய்வார்கள்?

அத்தகைய சூழலில் உதவியாக இருக்கும் ஒரே இடம் இந்த ஸ்வால்பார்ட் க்ளோபல் சீட் வால்ட் தான்.

நார்வேயின் எல்லைக்குட்பட்ட ஸ்பிட்பெர்கன் தீவில் அமைந்துள்ள இந்த வாலட்டில் 250 மில்லியன் அளவில் 300 வகையான தானியங்களின் விதைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
எனவே இயற்கை சீற்றங்களாலோ அல்லது வேறு அழிவுகளாலோ தானியங்கள் அழிந்து போனால் இங்கிருந்து விதைகளை பயன்படுத்தி கொள்ளலாம்.

எத்தகைய சூழல்களிலும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் இது கட்டப்பட்டுள்ளது. அதன் காரணமாக இப்பகுதியில் முக்கியமானவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

நீஹாவ், ஹவாய்

ஹவாயில் உள்ள இந்த நிஹாவ் தீவு பூர்வக்குடி மக்கள் வாழும் சிறிய தீவு ஆகும். மேலும் அரிய தாவரங்கள், அழிவு நிலையில் உள்ள விலங்கினங்கள் ஆகியவை இந்த தீவில் உள்ளன. இந்த தீவில் 130 நிரந்தர பூர்வக்குடி மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் நூறு ஆண்டுகளாக இந்த தீவில் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

வெளியாட்கள் வருவதை தடுப்பதற்காகவே 24 மணி நேரமும் கடலோர படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த தீவில் வசிப்பவர்களின் அனுமதி இருந்தால் மட்டுமே தீவிற்குள் அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் விமானப்படை மென்வித் ஹில், இங்கிலாந்து


இங்கிலாந்தில் வடக்கு யோர்க்‌ஷயர் பகுதியில் அமைந்துள்ள இந்த விமானப்படை தளம் உலகில் உள்ள மிகப்பெரிய கண்காணிப்பு மையமாகும்.அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் புலானாய்வு துறைகளின் கூட்டு முயற்சியுடன் இம்மையம் செயல்பட்டு வருகிறது.எந்தவகையான ஏவுகணை தாக்குதல் நடக்கிறது என்பதை கண்டறியக்கூடிய இடமாகும்

பனிப்போர் காலத்தில் ரஷ்யாவின்  செயல்பாடுகளை கண்டுபிடிப்பதற்காக இம்மையம் கட்டப்பட்டது. தற்போது சர்வதேச தீவிரவாத செயல்பாடுகள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக புலானாய்வில் ஈடுபட்டு உள்ளன.

மேலும் ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த (ஈச்லோன்) ECHELON அமைப்புடன் கூட்டு வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இதன் உள்ளே என்ன நடக்கிறது என்ற ரகசியம் வெளி உலகிற்கு தெரியாமலேயே உள்ளது.

வாடிகன் ரகசிய காப்பகம், வாடிகன்

வாடிகனில் அமைந்துள்ள இந்த நூலகம் உலகின் மிக முக்கிய பாதுகாப்பு நூலகமாகும். கடந்த 8 ஆம் நூற்றாண்டில் இருந்து போப் தொடர்பான ரகசியங்கள் இந்த நூலகத்தில் உள்ளன.இதன் காரணமாக வெளியாட்களுக்கு இந்த நூலகத்தில் அனுமதி அளிப்படுவதில்லை. தகுதி நிறைந்த அறிஞர்களுக்கு மட்டுமே நூலகத்தின் உள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

அதுவும் அவர்கள் எந்த காரணத்திற்காக செல்கின்றனர், அவரது தனிப்பட்ட விபரங்கள் ஆகியவை அறிந்த பின்னரே அனுமதி அளிக்கப்படுகிறது.

 பகுதி 51, நிவேடா

அமெரிக்காவின் நிவோடா பகுதியில் அமைந்துள்ள இந்த ராணுவ தளம் பற்றிய தகவல்கள் வியட்னாம் போரின் போதுதான் வெளியெ தெரிய வந்தது.அமெரிக்க புலானாய்வு அமைபின் ராணுவ தளமாக செயல்படும் இதில் அமெரிக்கா தொடர்பான மிகவும் முக்கிய ரகசிய தகவல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இங்கு என்ன உள்ளது, எந்த காரணத்துக்காக இந்த இடம் செயல்படுகிறது போன்ற தகவல்கள் யாரும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்காவில் செயல்பாடுகளை நிறுத்துகிறது பார்க்லேஸ் வங்கி.

பிரிட்டிஷ் வங்கியான பார்க்லேஸ், ஆப்பிரிக்காவில் தனது நடவடிக்கைகளை விற்றுவிட முடிவுசெய்திருக்கிறது.
கடந்த ஒரு ஆண்டில் அந்த வங்கியின் பங்குகளின் விலை பாதிக்கும் கீழ் குறைந்திருக்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீர்திருத்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவை பார்க்லேஸ் எடுத்திருக்கிறது.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பார்க்லேஸ் ஆஃப்ரிக்கா வங்கியில் தனக்கு இருக்கும் 62 சதவீத பங்கை படிப்படியாக குறைத்துக்கொள்ளப் போவதாக பார்க்லேஸ் தெரிவித்திருக்கிறது.
தென்னாப்பிரிக்காவின் பொருளாதாரம் பலவீனமடைந்திருப்பதும் அந்நாட்டு நாணயத்தின் மதிப்பு குறைந்திருப்பதும் பார்க்லேஸின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
பங்குகள் கைமாறுவதால் தன் நடவடிக்கைகள் மாறாது என பார்க்லேஸ் ஆஃப்ரிக்கா தெரிவித்திருக்கிறது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள 12 நாடுகளில் சுமார் ஒரு கோடியே இருபது லட்சம் வாடிக்கையாளர்களை இந்த வங்கி வைத்திருக்கிறது.

புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கான செயலி அறிமுகம்.



புற்றுநோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிய, மருத்துவர்களுக்கு உதவும் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் உள்ளதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகளிடமிருந்து குறிப்புக்களை பெற்றுக் கொள்வதற்கும், அறிகுறிகள் மற்றும் தடயங்களை சுகாதார அதிகாரிகள் இனம் கண்டு கொள்ளவும், இந்த செயலி வழி ஏற்படுத்திக் கொடுப்பதாக உள்ளது.
இந்த செயலியை, ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுனிவர்சிட்டி ஆஃப் வெஸ்ட் ஸ்காட்லாந்தில் அமைந்துள்ள தொழில்நுட்பத்திற்கான ஸ்காட்டிஷ் மையத்தினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி, ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சை வழங்கப்படுகிறதோ, அவ்வளவு விரைவாக நோயாளியை காப்பாற்ற முடியும் என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், புற்றுநோயினால் ஏற்படும் அகால மரணங்களை குறைக்கவும் முடியும் எனத் தெரிவித்துள்ளனர்.
இவற்றை கருத்தில் கொண்டு, இந்த செயலியை அனைத்து சுகாதார அதிகாரிகளும் தரவிறக்கம் செய்து பாவிக்குமாறு, ஸ்காட்லாந்தின் சுகாதார அமைசசர் ஷோனா ராபின்சான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tuesday, March 1, 2016

பிளாஸ்டிக் குப்பைகளை குறைக்கும் இந்தோனேஷிய முயற்சி பலன் தருமா?

பிளாஸ்டிக் கழிவால் இந்தோனேசியாவில் ஆறுகளும், கடல்களும் நிரம்பிவழிவது அந்நாட்டு சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறைகளை பெரிதும் பாதித்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க இந்தோனேஷிய அரசாங்கம் தற்போது முயற்சிக்கிறது.
இனிமேல் அங்கு பிளாஸ்டிக் பைகள் வாங்குவதற்கு இருபத்து மூன்று நகரங்களில் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த புதிய திட்டம் பின்னர் நாடெங்கும் அமல்படுத்தப்படவிருக்கிறது.
இதன் மூலம் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவைக் குறைக்க முடியும் என்று அரசு அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

4 வயது குழந்தையின் தலையை வெட்டி ஊர்வலமாக சென்றது ஏன்? பெண் அதிரடி வாக்குமூலம்

ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவின் ஒரு தெருவில் இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுடன் பெண் ஒருவர் நடந்து வந்துள்ளார். பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த பெண்ணை மடக்கி நிறுத்தியுள்ளனர். அப்போது, திடீரென தனது பையில் கை விட்டு ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்காட்டியுள்ளார்.

‘உடனே என்னை விட்டுவிட்டு ஓடுங்கள். நான் ஒரு தீவிரவாதி. என் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்க செய்வேன்’ என மிரட்டியதால் போலீசார் பயந்து விலகி ஓடியுள்ளனர்.

சில நிமிடங்களுக்கு பிறகு, கையில் குழந்தையின் தலையை பிடித்தப்படி  அங்கும் இங்கும் நடந்துச்சென்றுள்ளார். மறைந்திருந்த போலீசார் உடனடியாக அந்த பெண்ணை கைது செய்தனர்.

பின்னர், பெண்ணின் இருப்பிடத்திற்கு சென்றபோது அவரது வீடு தீப்பற்றி எரிந்துக்கொண்டு இருந்துள்ளது. தீயை அணைத்துவிட்டு உள்ளே சோதனை செய்தபோது, தலையில்லாத அந்த குழந்தையின் உடலை போலீசார் கண்டு பிடித்து உள்ளனர்.

அந்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எப்ண்ணின் பெயர்  ஜியுல்சிஹிரா போபாகுலோவா (வயது 38)  அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

‘மத்திய ஆசியாவில் உள்ள உஸ்பெகிஸ்தான் நாட்டில் எனது கணவருடன் வசித்து வந்தேன். சில மாதங்களுக்கு முன்னாள் இங்கு மாஸ்கோவில் பணிப்பெண்ணாக வேலை கிடைக்க கணவரை விட்டுவிட்டு மாஸ்கோவில் குடியேறினேன்.

இங்கு நாஸ்டியா மெச்செரியகோவா  என்ற 4 வயது குழந்தையை பராமரிக்க என்னை பணிப்பெண்ணாக பெற்றோர்கள் நியமித்தனர். 4 வயது குழந்தைக்கு மனநலம் சிறிது பாதிக்கப்பட்டிருந்தது.

எனது  தாய்நாட்டில் உள்ள எனது கணவர் மற்றொரு பெண்ணை மறுமணம் செய்துக்கொண்டதாக எனக்கு தகவல் வந்தது. இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மேலும், ‘என்னை இரண்டாவது மனைவியாக இருக்குமாறு எனது கணவர் கூறியதும் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதே கோபத்துடன் வேலை செய்யும் வீட்டிற்கு சென்றபோது, என் மூளைக்குள் வினோதமான ஒலிகள் எழுந்தது. என கூறி உள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோக விவகாரத்தில் திருச்சபை பாரிய தவறிழைப்பு

கத்தோலிக்கத் திருச்சபையில் கட்டமைப்பு ரீதியாகக் காணப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக விடயத்தில், கத்தோலிக்கத் திருச்சபை பாரிய தவறுகளை இழைத்துள்ளதாகவும் பொதுமக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கர்தினாலான ஜோர்ஜ் பெல் தெரிவித்துள்ளார். நிறுவனரீதியாக இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக ஆராய்வதற்காக, அவுஸ்திரேலியாவின் அரச ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு, இத்தாலியின் றோமிலிருந்து, கர்தினால் பெல், வாக்குமூலமளித்தார். அவர் தங்கியிருந்த அறையில், சிறுவர் மீதான பாலியல் துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்களும் அமர்ந்திருந்தனர். சிறுவர் பாலியல் வன்முறையில் சிக்கிய சிறுவர்கள், திருச்சபை அதிகாரிகளால் நம்பப்பட்டிருக்கவில்லையெனத் தெரிவித்த அவர், இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்ட பாதிரியார்கள், ஒரு பிரிவிலிருந்தும் மற்றைய பிரிவுக்கு மாற்றப்பட்டனர் எனத் தெரிவித்தார். 'பாரிய தவறுகளை திருச்சபை இழைத்தது. அவற்றுக்குப் பரிகாரம் தேடுவதற்கு அது முயல்கிறது. கத்தோலிக்கத் திருச்சபையானது பல இடங்களில் -  நிச்சயமாக அவுஸ்திரேலியாவில் - பாரிய தவறுகளை இழைத்துள்ளதோடு, மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது" என்றார். 74 வயதான கர்தினால் பெல், சிறுவர் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கப்படாததோடு, இவ்விடயத்தில் மெதுவான செயற்பாட்டுக்காக, திருச்சபை சார்பாக இரண்டு முறை மன்னிப்பும் கோரியிருந்தார். அவர் தற்போது, வத்திக்கானில் நிதியமைச்சராகப் பணியாற்றுகிறார். தனது வாக்குமூலத்தில் அவர், 1970களில், பாதிரியார் ஒருவர், சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதாகத் தகவல்கள் இருந்ததாதகவும், ஆனால் மேலதிகாரிகள், அவர் குற்றமற்றவர் எனக் கருதி, அவர் மீது நம்பிக்கை வைத்ததாகவும் ஏற்றுக் கொண்டார். இதன்போது, ஏனைய சம்பவங்கள் குறித்துத் தனியாக விவரிக்குமாறு கோரப்பட்ட போது, அவை குறித்துத் தனக்கு ஞாபகம் இல்லை எனத் தெரிவித்தார். இது, றோமிலும் சிட்னியிலும் இருந்த பாதிக்கப்பட்டவர்களைக் கோபப்படுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது. இதன்போது, சிட்னியிலுள்ள விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் ஒன்றுகூடிய, பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவாளர்கள், கர்தினால் பெல்லுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 'பாப்பரசரே, பெல்லை உடனடியாகப் பதவி விலக்குங்கள்", 'பெல், நரகத்துக்குப் போங்கள்" எனக் கோஷமிட்டனர். இந்த விசாரணை நிறைவடைந்து சிறிது நேரத்தில், பாதிரியார்களின் பாலியல் வன்முறைக்கு உள்ளான சிறுவர்கள் பற்றிய திரைப்படமான ஸ்பொட்லைட், சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார் விருதை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Monday, February 29, 2016

இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 31ஆவது கூட்டத்தொடர், இன்று (திங்கட்கிழமை) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இன்றையை முதலாவது அமர்வில் ஐ.நா மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் மற்றும் பேரவையின் தலைவர் சொய் கியோம்லிங் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர். இதன்போது ஐ.நா ஆணையாளர், இலங்கை தொடர்பான விரிவான விளக்கமொன்றை அவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐ.நா ஆணையாளர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில், இங்கு தாம் அறிந்த விடயங்கள், இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து சபையில் விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன், இதற்கு ஐ.நாவின் உறுப்பு நாடுகள் தமது கருத்துக்களையும் முன்வைக்கவுள்ளன.
ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கை சார்பில் அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழுவினர் அங்கு சென்றுள்ளனர்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமை பேரவையின் 30ஆவது கூட்டத்தொடரில், இலங்கையில் சர்வதேசத்தின் பங்களிப்புடனான விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேண்டுமென பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னரான அமர்வுகளில், இலங்கைக்கு எதிராக செயற்பட்டு பிரேரணைகளை முன்வைத்த அமெரிக்கா, கடந்த கூட்டத்தொடரில் இலங்கைக்கு சார்பான வகையில் பிரேரணை முன்வைத்ததோடு, அதற்கு இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் இணை அனுசரணையும் வழங்கியிருந்தன.
இதேவேளை, இலங்கையின் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை, 31ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டுமென கடந்த அமர்வில் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் போர் நிறுத்தம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

சிரியாவில் கொண்டுவரப்பட்ட மோதல் தவிர்ப்பு, இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. கடந்த 5 வருடங்களில், அமைதியான நாளாக, இன்றைய தினம் அமைந்தது. மோதல் தவிர்ப்பின் முதல் நாளான சனிக்கிழமை, சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ்ஸில் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதோடு, அரசாங்கத் தரப்பும் சிரியப் போராளிகளும், மற்றைய தரப்பைக் குற்றஞ்சாட்டியிருந்தன. இதுகுறித்து, டமாஸ்கஸ்ஸிலுள்ள மருத்துவபீட மாணவனொருவன் கருத்துத் தெரிவிக்கையில், 'குண்டுகளின் சத்தமின்றி நாங்கள் துயிலெழுந்தது, இது தான் (அண்மைக்காலத்தில்) முதற்தடவையென்று நான் நினைக்கிறேன்" என்றார். இந்த மோதல் தவிர்ப்பைக் கண்காணிப்பதற்காக, ஐக்கிய அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ள குழு, சனிக்கிழமையன்று மோதல் தவிர்ப்பு, பெருமளவில் வெற்றிகரமானதாக அமைந்ததாகத் தெரிவித்தது. மோதல் தவிர்ப்பை மீறிய சில சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபை, எனினும் அவை, விரைவிலேயே இல்லாது போனதாகத் தெரிவித்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமையை விட அமைதியான சூழலே காணப்பட்டதாக, அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, மோதல் தவிர்ப்பு பின்பற்றப்படுகின்ற போதிலும், ஐ.எஸ்.ஐ.எஸ் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. றக்கா மாகாணத்திலுள்ள தல் அபியட் நகரில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டதோடு, குர்திஷ்கள் தரப்பில் 20 பேரும் பொதுமக்களில் இருவரும் கொல்லப்பட்டனர். அதேபோன்று, சனிக்கிழமை மாத்திரம், ஐ.எஸ்.ஐ.எஸ் குழு மீது, அமெரிக்க விமானங்களால் 10 வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இதேவேளை, மோதல் தவிர்ப்புக்கு அமைவாக, ஐ.எஸ்.ஐ.எஸ், அல்-நுஸ்ரா தவிர்ந்த ஏனைய குழுக்கள் உள்ள பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களை நிறுத்துவதாக, ரஷ்யா அறிவித்துள்ளது.

Sunday, February 28, 2016

ஹிலாரி கிளிண்டன் வெற்றி

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் வெட்பாளர் தேர்தலில் சவுத் கரோலினாவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவு மந்திரியுமான ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் போட்டியிட்டார். இதுவரை லோவா, நிவேடா, நியூஹாம்சியர் மற்றும் சவுத் கரோலினா ஆகிய 3 மாகாணங்களில் வேட்பாளருக்கான தேர்தல் நடந்துள்ளது. அவற்றில் லோவா, நிவேடாவில் ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றார். இந்த நிலையில் நேற்று சவுத் கரோலினாவில் பிரசாரமும், அதை தொடர்ந்து தேர்தலும் நடந்தது. இதிலும் ஹிலாரி வெற்றி பெற்றார். இதன் மூலம் 4 மாகாணாங்களில் நடந்த தேர்தலில் 3 மாகாணங்களில் அவர் வென்றுள்ளார்.

ஜப்பான் மக்களின் பிறப்பு விகிதம்.

ஜப்பானில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 லட்சம் அளவுக்கு மக்கள் தொகை குறைந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்பில் எப்போது சீனாவைப் பின்னுக்குத் தள்ளப்போகிறோமோ என்று இந்தியா கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜப்பானோ, மக்கள் தொகை சரிவை நினைத்துக் கலங்கியுள்ளது.
மக்கள் தொகை குறைந்திருப்பதற்கு, ஜப்பான் மக்களின் பிறப்பு விகிதம் குறைந்ததும், பல்வேறு காரணங்களால் அந்நாட்டுக்கு குடிபெயர்வோரின் எண்ணிக்கைக் குறைந்ததுமே என்று கருதப்படுகிறது.
அதோடு, இன்னும் 30 ஆண்டுகளில் ஜப்பானில் வயதானவர்கள்தான் அதிகமாக இருப்பார்கள் என்றும், இன்னும் மக்கள் தொகை குறைய வாய்ப்பிருப்பதாகவும் அந்நாட்டின் மக்கள் தொ கணக்கெடுப்பு ஆய்வாளர்கள் கவலையை அதிகரிக்க வைத்துள்ளனர்.

அனைவருக்கும் தூக்கு தண்டனை.

தெஹ்ரான் : ஈரான் நாட்டின் சிஸ்டான் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் போதைப் பொருள் கடத்தியதாக, அவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாததால், வருவாய் ஈட்டுவதற்கு வேறு இல்லாததால் அவர்கள் போதை கடத்தியதாக சமூக ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.

சிரியாவில் போர் ஓய்வு - அமேரிக்கா , ரஷ்யா முயற்சி



அமெரிக்கா, ரஷ்யாவின் முயற்சி யால் சிரியாவில் நேற்றுமுதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. அங்கு தற்காலிகமாக குண்டு சத்தம் ஓய்ந்திருப்பதாக சர்வதேச கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் ஷியா, சன்னி முஸ்லிம்களுக்கு இடையே பகைமை நீடிக்கிறது. அந்த நாட்டு சர்வாதிகார அதிபர் ஆசாத், ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் போரிட்டு வருகின்றன.
இதில் சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்., அல்-காய்தாவுக்கு ஆதர வளிக்கும் அல் நஸ்ரா ஆகியவை ஐ.நா. சபையால் தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப் பட்டுள்ளன. சிரியாவின் பெரும் பகுதி தற்போது ஐ.எஸ். கட்டுப் பாட்டில் உள்ளது.
இவை தவிர சன்னி பிரிவைச் சேர்ந்த மிதவாத எதிர்க்கட்சிகள், குர்து இனத்தைச் சேர்ந்த குழுக்கள் என 160-க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய போராட்டக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவற் றில்குர்து இன குழுக்கள் சில இடங் களில் மட்டும் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
அமெரிக்கா, ரஷ்யா முயற்சி
மிதவாத எதிர்க்கட்சிகளுக்கும் குர்து குழுக்களுக்கும் ஆரம்பம் முதலே அமெரிக்கா ஆதரவளித்து ஆயுதங்களை வழங்கி வருகிறது.
அதேநேரம் ரஷ்ய விமானப் படை சிரியாவில் முகாமிட்டு அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. ரஷ்யாவின் உதவியால் அண்மைக்காலமாக அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி யுள்ளது. மிதவாத எதிர்க்கட்சிகளின் தலைமையிடமாகக் கருதப்படும் அலெப்போ நகரை ஆசாத் படைகள் சுற்றிவளைத்தன.
இதனால் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் ஜான் கெர்ரி ரஷ்யாவுடன் சமரசத்தில் ஈடுபட் டார். அதன்பயனாக சிரியாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இரு வல்லரசுகளும் ஒப்புக் கொண்டன.
அதன்படி சிரியாவில் நேற்று முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. மிதவாத எதிர்க்கட்சி களைச் சேர்ந்த 97 போராட்டக் குழுக்களும் அதிபர் ஆசாத் படைகளும் சண்டை நிறுத்தத்தை கடைப்பிடிக்க உறுதியளித் துள்ளன. இதனால் சிரியாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் நேற்று தற்காலிகமாக குண்டு சத்தம் ஓய்ந்தது.
எனினும் ஐ.எஸ். தீவிரவாதிகள், அல்-நஸ்ரா தீவிரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்காவும் ரஷ்யாவும் அறிவித்துள்ளன. அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பதற்றத்துடனேயே வாழ்கின்றனர் என்று சர்வதேச போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Sunday, February 1, 2015

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜெப் புஷ் போட்டியிட வாய்ப்பு அதிகரிப்பு

அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இளைய மகனும், ஜார்ஜ் டபிள்யு புஷ்ஷின் தம்பியுமான ஜெப் புஷ் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
குடியரசுக் கட்சி சார்பில் மிட் ராம்னி போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அவர் போட்டியிடப் போவதில்லை என வியாழக்கிழமை அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, ஜெப் புஷ் (61) வேட்பாளராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.