Showing posts with label Research. Show all posts
Showing posts with label Research. Show all posts

Monday, August 10, 2015

இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் மேற்கே உள்ள பகுதியில் பெரிய பூகம்பம் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தின்போது, பூமிக்கடியில் உருவாகியிருந்த அழுத்தம் முழுமையாக வெளியேறவில்லையென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், கண்டத் தட்டு நகர்வினால் பூமிக்கடியில் ஏற்பட்டிருந்த அழுத்தம் முழுமையாக வெளியாகவில்லையென்றும், அந்த அழுத்தத்தின் ஒரு பகுதி மேற்கு நோக்கித் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது நேபாளத்தின் பொகாராவுக்கு மேற்கேயும் தில்லிக்கு வடக்கேயும் அமைந்துள்ள பகுதியில் இந்த அழுத்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.
இது குறித்த தகவல்கள் நேச்சர் ஜியோ சயின்ஸ் மற்றும் சயின்ஸ் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கு நேபாளத்திலும் வட இந்தியாவிலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வசிப்பதால், இங்கு பூகம்பம் வந்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது எனக் கூறுகிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷான் ஃபிலிப்.
இந்தியக் கண்டத் தகடானது, யூரேசிய கண்டத் தகடோடு மோதுவதால் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இப்போதும் அந்தப் பகுதியில் நிலமானது வருடத்திற்கு 2 சென்டிமீட்டர் என்ற அளவில் நகர்ந்துகொண்டேயிருக்கிறது.
இந்த நகர்வின் காரணமாக பிரதான இமாலய கண்டப் பிளவில் பெரும் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த கண்டப் பிளவானது நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.
இந்தியக் கண்டத் தகடும் யூரேசியக் கண்டத்தகடும் தற்போது மிக நெருக்கமாக, நகரமுடியாதவகையில் இருக்கின்றன. இதனால், இந்தத் தகடுகளின் அடியில் ஏற்பட்டிருக்கும் அழுத்தம் வெளியேற ஒரு நிலநடுக்கம் தேவைப்படுகிறது.
ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இம்மாதிரி உருவான அழுத்ததில் ஒருபகுதியே வெளியேறியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். முழு அழுத்தமும் வெளியேறியிருந்தால், அது மிகப்பெரிய நிலநடுக்கமாக இருந்திருக்கும்.
ஆகவே இந்தப் பகுதியில் ஒரு பெரும் நிலநடுக்கம் எதிர்காலத்தில் நிச்சயம் ஏற்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
1505ல் இதே போல ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்போது மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்படுமானால், அந்த நிலநடுக்கம் 8.5 ரிக்டார் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதை இப்போது சொல்ல முடியாது.
அதனால், பெரும் நிலநடுக்கங்களைத் தாக்குப்பிடிக்கக்கூடிய வகையில் சிறிய கட்டடங்களை கட்டுவது பள்ளிக் குழந்தைகளுக்கு நிலநடுக்கம் குறித்து பயிற்சியளிப்பது ஆகியவற்றின் மூலம் சேதத்தை குறைக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஏப்ரல் மாதத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிக்டார் அளவிலான பூகம்பத்தால் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் பேர் காயமடைந்ததோடு, இருப்பிடங்களையும் இழந்தனர்.

Friday, July 10, 2015

கடலுக்கடியில் மிக அதிக வெப்பம் - நாசா விஞ்ஞானிகள்

கடலுக்கடியில் 300 முதல் 1000 அடி ஆழத்தில் மிக அதிக வெப்பம் மறைந்திருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெப்பத்தின் அளவு எதிர்பார்த்ததை விட அதிகம் என அவர்கள் கருதுகின்றனர்.

கடலின் வெப்ப நிலை தற்போதுள்ளதை விட மிக அதிக அளவில் உயர்ந்திருக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

உண்மையில், இந்த வெப்பத்தையும், பூமி வெப்பமயமாதலையும், பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வீசும் சக்தி வாய்ந்த காற்று தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அளவிடப்பட்டுள்ள உலக வெப்பமயமாதலின் வேகமும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர்கள் நம்புகின்றனர்.

கடந்த 15 ஆண்டுகளில் பூமியின் தரைப்பரப்பு வெப்பநிலையானது 0.05 டிகிரி சென்டிகிரேட் ஆக உயர்ந்துள்ளது.

கடலுக்கும், பூமிக்கும் இடையிலான வெப்பநிலை மாற்றத்திற்கான காரணம் குறித்த ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

Sunday, June 7, 2015

தானாக பற்றி எரியும் மனித உடல்கள்.

உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் தானாக தீ பற்றி எரிந்து சாம்பலாகி விடுவதாக நம்பப்படும் நிகழ்வு Spontaneous Human Combustion என்று அழைக்கப்படுகிறது.
இந்த வினோத நிகழ்வு வரலாற்றில் கடந்த 300 ஆண்டுகளில் சுமார் 200 முறை நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை செவிவழிச் செய்திகளாகவே இருந்துள்ளன.
வியட்னாம் போரில் பணிபுரிந்த போர் வீரர் Frank Baker என்பவர் வாழ்விலும் அத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

Saturday, June 6, 2015

ஆய்வுத் தகவல் : ஐந்து வருடங்களுக்குள் நாம் இறந்துவிடுவோமா


ஐந்து வருடங்களுக்குள் நாம் இறந்துவிடுவோமா என்பதை கணித்துக்கூறும் சுவீடன் இணையத்தளம்.
நாங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை இணையத்தளம் ஒன்றில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைத்தளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

Thursday, June 4, 2015

பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள்

 விஞ்ஞான கண்டுபிடிப்பின் புதிய யுகத்துக்குள் தாம் இன்று நுழைந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
கடந்த 27 மாதங்களில் முதல் தடவையாக லார்ஜ் ஹட்ரன் கொலைடர் (Large Hadron Collider) ஆய்வுகூடம் தனது முழுச்சக்தியுடன் இயங்கத்தொடங்கியுள்ளது.

Tuesday, June 2, 2015

வண்ணத்துப்பூச்சியின் வானவில் ரகசியம்

விதவிதமான வண்ணத்துப் பூச்சிகளின் சிறகுகள் மிளிர்வதை நாம் கண்டு  வியந்திருக் கின்றோம். அதனை துரத்தி பிடித்திருக்கின்றோம். ஆனால், அதன் சிறகுகளின் நிறம் பற்றிய ரகசியம் அறிய சிந்தனையை செலுத் தியதில்லை. அமெரிக்காவின் யேல் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் வினோத் குமார், சாரநாதன் தலைமையில் மேற் கொண்ட ஆராய்ச்சியில் அத்தகைய மிளிர்வுக்கு காரணம் நிறமிகள் அல்ல, செல்களின் அமைப்புதான் என்று கண்டறிந்துள்ளனர்.

Monday, June 1, 2015

விண்வெளி மாபெரும் வெடிப்பு பற்றிய ஆய்வு

நாம் வாழ்கின்ற விண்வெளி, ஆயிரத்து 400 கோடி ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு மாபெரும் வெடிப்பால் உருவானது. இப்போது மிகவும் புகழ்பெற்று பரவி வரும் The Bid Bang Theory எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரின் பாடலில் இதை தெரிவிக்கின்றது. இந்த மாபெரும் வெடிப்பு நிகழ்வதற்கு முன், விண் வெளி ஒரு தனித்தன்மையான வடிவத்தில் நிலவியது. அந்த மாபெரும் வெடிப்பு பின்பு, விண்வெளி மிக விரைவாகநம்ப முடியாத வேகத்தில் அதிகரித்த வளர்ந்து, தற்போதைய வடிவமாக மாறியது.

ஒரு லிட்டர் நீரில் தயாரிக்கப்படும் விளக்குகள்

8வது உலகின் எதிர்கால எரியாற்றல் உச்சி மாநாடு( World Future Energy Summit)ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. ஒன்று லிட்டர் (liter) ஒளி எனும் அறிவியல் தொழில் நுட்பச் சாதனை காரணமாக, பிலிப்பைன்ஸ் சேர்ந்த டியாஸ் என்பவர், இந்த உச்சி மாநாட்டில் அபுதாபி எதிர்கால எரியாற்றல் விருதைப் பெற்றுள்ளார். 

5ஜி தொழில் நுட்பத்தின் எதிர்காலம்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலகச் செல்லிட செய்தித்தொடர்பு மாநாட்டில் பல கண்காட்சி திடல்களில் 5ஜி என்ற மிகப் பெரிய வாசகம் காணப்பட்டது. 5ஆவது தலைமுறை இணையக் காலம் இன்னும் வரவில்லை என்றபோதிலும், இது தொடர்பாக தொழில் நுட்பத்தின் ஆராய்ச்சியும் வரையறையின் உருவாக்கமும், வரலாற்றில் தவிர்க்க முடியாத போக்காக மாறியுள்ளது. 
தற்போது, 4ஜி என அழைக்கப்படும் 4ஆவது தலைமுறை இணையம், உலகில் முழுமையாக பரவல் செய்யப்படாமல் உள்ளது.

Wednesday, July 4, 2012

கடவுளின் அணுத் துகள் “ஹிக்ஸ் போஸான்” கண்டுபிடிப்பு: 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளது

கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது.

Tuesday, July 3, 2012

கணணி தொழினுட்பத்தின் எதிர்காலம்!

அடுத்த 10 ஆண்டுகளில் கணணியில் என்ன என்ன மாற்றங்கள் வரும் என்பதை கணித்து நிபுணர்கள் வெளியிட்டுள்ளனர்.அதிக இடத்தை எடுத்துக் கொண்டு மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கணணியின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கணணிகள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

Saturday, May 5, 2012

புற்றுநோயை தடுக்கும் ஸ்ட்ராபெர்ரி

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் உயர்ந்த பழங்களில் ஒன்று ஸ்ட்ராபெர்ரி.
ஸ்ட்ராபெர்ரி என்றால் நம் நினைவுக்கு வருவது நம் கண்களை கவரும் அழகும், சுகந்த மணமும், கருஞ்சிவப்பு நிறமும் ஆகும். இவை கோடைகாலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோ கோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்கள் உள்ளன.

Friday, January 13, 2012

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிசய மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மருந்து இன்னும் சில கொடிய வியாதிகளைக் குணப்படுத்த வல்லதாம்.

Friday, December 2, 2011

செயற்கையான எலும்பினை உருவாக்கி வைத்தியர்கள் சாதனை

எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த எலும்பினால் காயங்களைக் குணப்படுத்த முடியுமென்கின்றனர் ஆய்வாளர்கள்.

Monday, November 21, 2011

முட்டையும் மூளையும் - ஒரு சிறந்த தகவல் .

மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பகல் நேரங்களில் குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து

Tuesday, November 15, 2011

'டெங்குவை ஒழிக்க நுளம்புகள்': புதிய கண்டுபிடிப்பு

டெங்கு மற்றும் ஏனைய கொசுக்கடி நோய்களை எதிர்கொள்வதற்கு மரபணுமாற்றம் செய்யப்பட்ட நுளம்புகளைப் பயன்படுத்த முடியும் என்று பிரிட்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆண் நுளம்புகளை மரபணுமாற்றம் செய்வதன் மூலம், நுளம்பு பெருக்கத்தை தடுக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி முடிவு.

Wednesday, November 9, 2011

2250 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய புற்றுநோய்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்

எகிப்தில் 2,250 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தது தற்பொழுது தெரியவந்துள்ளது.
பதப்படுத்தப்பட்ட மம்மி உடலை சிடி ஸ்கேன் செய்து பார்த்ததில் இது தெரியவந்துள்ளது. எகிப்து மம்மிகள் தொடர்பான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

பூமியை நோக்கி வரும் ராட்சத எரி கல்-ஒரு பெரிய விமானம் போன்றது.

அமெரிக்காவின் “நாசா-NASA” மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொண்டு வரு கிறது. இந்நிலையில் விண் வெளியில் இருந்து ராட்சத எரிகல் ஒன்று பூமியை நோக்கி வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த எரி கல் 400 மீட்டர் அதாவது 1,300 அடி அகலமானது. ஒரு பெரிய விமானம் போன்றது.

இந்திய பெருங்கடலில் புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு.

உலகில் உள்ள கடல்களின் ஆழ்பகுதியில் அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. அவை குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். அதற்காக ஆழ்கடலில் அதி நவீன கருவிகள் மற்றும் கேமிராக்கள் மூலம் ஆராய்ச்சிகள் நடத்துகின்றனர்.
தற்போது முதன் முறையாக இந்திய பெருங்கடலில் ஆழமான பகுதிகளில் அத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Tuesday, November 8, 2011

செவ்வாய் கிரகத்தில் சுடுநீர் இருப்பதாக விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாய் கிரகத்தின் கீழ் பகுதியில் சுடுநீர் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து விஞ்ஞானிகள் திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றனர்.
விஞ்ஞானிகளின் கருத்துப்படி 100 மில்லியனை விட அதிகமான காலத்தில் செவ்வாய் கிரகத்தின் அடிப்பகுதியில் நிலத்தில் வெப்பம் இருக்கின்றதாக கூறுகின்றனர்.