உயிருள்ள மனிதர்கள் சில வேளைகளில் எந்தவொரு தீ மூட்டியும் இல்லாமல் தானாக தீ பற்றி எரிந்து சாம்பலாகி விடுவதாக நம்பப்படும் நிகழ்வு Spontaneous Human Combustion என்று அழைக்கப்படுகிறது.
இந்த வினோத நிகழ்வு வரலாற்றில் கடந்த 300 ஆண்டுகளில் சுமார் 200 முறை நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலானவை செவிவழிச் செய்திகளாகவே இருந்துள்ளன.
வியட்னாம் போரில் பணிபுரிந்த போர் வீரர் Frank Baker என்பவர் வாழ்விலும் அத்தகைய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.








