Saturday, March 5, 2016

ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் மனைவியான ராணி வெங்கட ரெங்கம்மாள் தேவி வசித்து வந்த இல்லம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


கண்டி ராஜ்ஜியத்தை ஆண்ட இலங்கையின் இறுதி மன்னனான ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் மனைவியான ராணி வெங்கட ரெங்கம்மாள் தேவி வசித்து வந்த கண்டி மெதவாசல இல்லம் வெளிநாட்டவர்களின் புகைப்பட கண்காட்சிக்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகியோர் இதனை திறந்து வைத்தனர்.
மத்திய கலாசார நிதியம் ராணி ரெங்கம்மாள் தேவி வசித்த இல்லத்தை புனரமைப்புச் செய்திருந்தது.
இல்லத்தை பார்வையிட வரும் வெளிநாட்டவர்களிடம் ஒரு டொலர் கட்டணமாக அறவிடப்படவுள்ளதுடன் தேசிய சுற்றுலாப் பயணிகளிடம் 20 ரூபா கட்டணமாக அறவிடப்படவுள்ளது.
அத்துடன் 12 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கு 10 ரூபாவும் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாகவும் இல்லத்தை பார்வையிட முடியும் என மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.
மதுரை நாயக்கர் வம்சத்தை சேர்ந்த ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் (1798 ஆம் ஆண்டு முதல் 1815 ஆம் ஆண்டு வரை கண்டி ராஜ்ஜியத்தை ஆட்சி செய்தார்.
இலங்கையின் கண்டி அரசை ஆண்ட கடைசி மன்னன், முன்னைய அரசன் ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன் பிள்ளைகள் இன்றி இறந்தபோது இவர் சிம்மாசனம் ஏறினான்.
இறுதியாகக் கண்டிப் போரில் 1815ல் பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்ட மன்னர் சிறை பிடிக்கப்பட்டு, தமிழ் நாட்டின் வேலூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஸ்ரீ விக்ரம ராஜசிங்கன் மன்னனின் இயற்பெயர் கண்ணுசாமி என்பது குறிப்பிடத்தக்கது.