Wednesday, March 2, 2016

படையினர் வசமுள்ள காணிகள் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் : அமெரிக்கா

வடக்கில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் விரைவாக விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களினடம் வழங்கப்பட வேண்டுமென, அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

வொஷிங்டனில் கடந்த சில தினங்களாக இடம்பெற்ற இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பங்குடைமை கலந்துரையாடலின் பின்னர் விடுக்கப்பட்ட கூட்டறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி அதற்கு பதிலாக சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு அமைவாக இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றீடுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமென்றும் தெரவித்துள்ளது.
எதிர்காலத்தில் இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ளவுள்ளதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த ஆதரவு வழங்குமென்றும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் ஜனநாயகத்தை பலப்படுத்தி நல்லிணக்கத்தை எற்படுத்துதல், நீதி மற்றும் நாடாளுமன்ற செயற்பாடுகளை வலுப்படுத்தல் போன்றவற்றில் இலங்கை முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.