Saturday, June 6, 2015

ஆய்வுத் தகவல் : ஐந்து வருடங்களுக்குள் நாம் இறந்துவிடுவோமா


ஐந்து வருடங்களுக்குள் நாம் இறந்துவிடுவோமா என்பதை கணித்துக்கூறும் சுவீடன் இணையத்தளம்.
நாங்கள் ஐந்து வருடங்களுக்குள் இறந்து விடுவீர்களா என்பதை இணையத்தளம் ஒன்றில் கேட்கப்படும் கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இதற்காக சுவீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய வலைத்தளத்தில் ஆண்களுக்கு 11 கேள்விகளும், பெண்களுக்கு 13 கேள்விகளும் கேட்கப்படுகின்றன.

இந்த கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்தால் நீங்கள் 5 வருடங்களில் இறப்பதற்கான வாய்ப்புகள் எத்தனை சதவீதம் உள்ளது என்பது தெரிந்துவிடும்.
புகை பிடிக்கும் பழக்கம், உடல்நலக்கோளாறு குறித்த வரலாறு, நீங்கள் நடக்கும் வேகம், நீங்கள் எத்தனை கார்களை வைத்துள்ளீர்கள் போன்ற கேள்விகள் அதில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இதில் பதிலளிக்க உங்களுக்கு 40 வயது நிரம்பியிருக்கவேண்டும்.
ஸ்கொட்லாந்து நாட்டில் இரு மருத்துவமனைகளில் அனுதிக்கப்பட்ட 35,000 நோயாளிகளிடம் இந்த வலைத்தள விஞ்ஞானிகள் முதலில் சோதனை நடத்தினர், அதில் கிடைத்த முடிவுகள் 80 சதவீதம் மருத்துவர்களின் கணிப்புகளுடன் துல்லியமாக பொருந்தின.
இந்த வலைத்தளத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் மூலம் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை கூடங்களுக்கு செல்லாமலேயே தங்கள் வாழ்க்கையில் ஏற்பட உள்ள அபாயங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் உறுதிபட கூறியுள்ளனர்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்ற வகையில் இந்த வலைத்தளத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
அந்த இணையத்தள முகவரி இதோ
www.ubble.co.uk