Monday, June 8, 2015

றேடியோ கதிர்களிலிருந்து குறிப்பிட்ட அளவு மின்சக்தியை தாமாகவே பெற்றுக்கொள்வற்கான புதிய தொழில்நுட்பம்

ஸ்மார்ட் கைப்பேசிகளிலிருந்து வெளியேறும் றேடியோ கதிர்களிலிருந்து (Radio Waves) அவை குறிப்பிட்ட அளவு மின்சக்தியை தாமாகவே பெற்றுக்கொள்வற்கான புதிய தொழில்நுட்பமொன்றை அமெரிக்காவின் ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தினை சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

வழமைக்கு மாறாக இவ்வாறு பெறப்படும் மின்சக்தி மூலம் கைப்பேசியின் மின்கலங்களில் 30 சதவீத மின்சக்தி அதிகரிப்பை ஏற்படுத்த முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் வயர்லெஸ் தொழில்நுட்பமாகிய WiFi இணைப்பின்போதோ அல்லது செல்பேசி கோபுரங்களுடன் தொடர்பை ஏற்படுத்தும்போதோ பல திசைகளிலும் சமிக்ஞைகள் பரவுவதனால் சக்தி வீண் விரயமாக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர்கள் இப்புதிய முறையமையானது அனைத்து கதிர்களையும் ஒருங்கிணைத்து ஆடலோட்ட மின்னோட்டத்தை (AC) நேரோட்ட மின்னோட்டமாக (DC) மாற்றக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.