Monday, June 8, 2015

பேட்டரி வாழ்நாளை 800% அதிகமாக்கும் புதிய கருவி

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று கழற்ற கூடிய மின்கல வகைகளின் வாழ் நாளை 800% அதிகரிக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.
0.1 எம்எம் தட்டையாக இருக்கும் இந்த கருவிக்கு பேட்டிரைஸர் என பெயர் வைத்துள்ளனர்.

இந்த கருவி கழற்ற கூடிய அனைத்து வித மின்கலங்களின் வாழ் நாளை அதிகரிக்க அவைகளின் வோல்டேஜ் அளவினை அதிகரிக்கின்றனவையாகவும், இந்த கருவி அனைத்து வித பேட்டரிகளிலும் பொருந்த கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கருவி தொலைகாட்சி பெட்டி, ரிமோட், டார்ச், ப்ளூடூத் கீபோர்டு என பல்வித கருவிகளுடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0.6 முதல் 1.5 வோல்ட் வரை சக்தியூட்ட கூடிய வகையில் பேட்டிரைஸர் திறன் கொண்டுள்ளமை குறிப்பிடதக்கது.