Thursday, June 4, 2015

பிரபஞ்சத்தின் ரகசியத்தை அறியும் முயற்சியில் விஞ்ஞானிகள்

 விஞ்ஞான கண்டுபிடிப்பின் புதிய யுகத்துக்குள் தாம் இன்று நுழைந்ததாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
கடந்த 27 மாதங்களில் முதல் தடவையாக லார்ஜ் ஹட்ரன் கொலைடர் (Large Hadron Collider) ஆய்வுகூடம் தனது முழுச்சக்தியுடன் இயங்கத்தொடங்கியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர ஹிக்ஸ் போஸன் (Higgs Bosun) என்ற நுண்ணிய துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சுவிஸ்- பிரான்ஸ் எல்லையில் நிலத்தின் கீழாக உள்ள இந்த ஆய்வு நிலையத்தின் வல்லமையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அதன் செயற்பாடு நிறுத்தப்பட்டது.
இப்போது புதிதாகத் தொடங்கியுள்ள ஆய்வுகூடத்தில் அணுவின் நுண்ணிய துகள்களை மோதவிட்டு அவற்றின் சக்தியை இரட்டிப்பாக்குகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பின் மூலம், இனிமேல் அணுவுலகின் உள்ளே இன்னும் என்ன புதைந்திருக்கிறது என்பதை கண்டறியமுடியும்.
அதாவது கண்ணுக்குத் தெரியாத துகளை மேலும் பெரிதுபடுத்தி காட்டக்கூடிய நுண்ணோக்கியை கண்டுபிடித்ததற்கு சமம் இது.
அதாவது இந்தப் பிரபஞ்சத்தின் வெறும் 5 சதவீதம் எப்படி வேலைசெய்கிறது என்பதை இந்தக் கண்டுபிடிப்பு விளக்குகிறது.
இதன்மூலம் கண்ணுக்குத் தெரியாத கறுப்பு வஸ்து என்று விஞ்ஞானிகள் அழைக்கும் ஒரே நேர்த்தியான நுண்துகள்கள் எதனால் ஆனவை என்பது பற்றிய நுட்பமான பல விளக்கங்களுக்கு விரைவில் ஆதாரம் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
நன்றி : பிபிசி