Monday, June 1, 2015

ஒரு லிட்டர் நீரில் தயாரிக்கப்படும் விளக்குகள்

8வது உலகின் எதிர்கால எரியாற்றல் உச்சி மாநாடு( World Future Energy Summit)ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. ஒன்று லிட்டர் (liter) ஒளி எனும் அறிவியல் தொழில் நுட்பச் சாதனை காரணமாக, பிலிப்பைன்ஸ் சேர்ந்த டியாஸ் என்பவர், இந்த உச்சி மாநாட்டில் அபுதாபி எதிர்கால எரியாற்றல் விருதைப் பெற்றுள்ளார். 

ஒரு லிட்டர் நீர், பிளான்ஸ்டிக் புட்டி, உலோகத்தகடு ஆகிய பொருட்கள் மட்டும், இந்த சாதனையில் பயன்படுத்தப்படும். நீர் மூலம் சூரிய ஒளியை விலக்குவதனால் உற்பத்தி செய்யப்படும் ஒளியானது, 50 வாட்ஸ் பல்ப் ஏற்படும்த்தும் ஒளிக்கு சமமாகும். இதனைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் விளக்குகள், வறுமையான பிரதேசத்திலும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் பிரதேசத்திலும் வாழும் மக்களுக்கு ஒளியை வழங்க முடியும். 
ஒன்று லிட்டர் ஒளி எனும் சாதனையின் பரவலுடன், உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள குடியிருப்புப் பகுதிகளிலும் பொருத்தப்பட்டுள்ள இத்தகைய விளக்குகளின் எண்ணிக்கை, 2இலட்சத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.