Monday, June 1, 2015

5ஜி தொழில் நுட்பத்தின் எதிர்காலம்

ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்ற உலகச் செல்லிட செய்தித்தொடர்பு மாநாட்டில் பல கண்காட்சி திடல்களில் 5ஜி என்ற மிகப் பெரிய வாசகம் காணப்பட்டது. 5ஆவது தலைமுறை இணையக் காலம் இன்னும் வரவில்லை என்றபோதிலும், இது தொடர்பாக தொழில் நுட்பத்தின் ஆராய்ச்சியும் வரையறையின் உருவாக்கமும், வரலாற்றில் தவிர்க்க முடியாத போக்காக மாறியுள்ளது. 
தற்போது, 4ஜி என அழைக்கப்படும் 4ஆவது தலைமுறை இணையம், உலகில் முழுமையாக பரவல் செய்யப்படாமல் உள்ளது.
எனினும், சீனா, தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் மற்றும் பிரதேசங்களின் தொழில் நிறுவனங்கள், 5ஆவது தலைமுறை இணையத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளன. தொடங்கியுள்ளன. நடப்பு உலக செல்லிட செய்தித்தொடர்பு மாநாட்டில் பங்கெடுத்துள்ள ஹூவா வெய், சோங் சிங், சீன செல்லிடப் பேசி மற்றும் தொலைத்தொடர்புக் குழுமம் முதலிய சீனத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் செய்தியாளர்களிடம் பேசுகையில், செய்தித்தொடர்புத் துறையின் எதிர்கால வளர்ச்சி திசையாக, 5ஜி தொழில் நுட்பம் விளங்கும். இந்த 5ஜி தொழில் நுட்பம், தொடர்பான ராயாச்சிகள் தற்போது தீவிப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்புடைய ஒத்த வரையறை உருவாக்கப்படவில்லை. இந்த நிலைமையில், சீனத் தொழில் நிறுவனங்களுக்கு மாபெரும் வளர்ச்சி வாய்ப்புண்டு. 
5ஜி க்கு முன், செய்தித் தொடர்புத்துறையில் 4 தலைமுறைகள் இணையத்தொழில் நுட்பங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் காலத்தில், மாதிரி தொழில் நுட்பம், கணினி தொழில்நுட்பம், உயர் வேக பல்லூடக செய்தித்தொடர்பு தொழில் நுட்பம் ஆகியவை முறையே பயன்பாட்டுக்கு வந்துள்ளன. 5ஜி தொழில் நுட்பம் பற்றிய உகந்த கருத்தாக்கம் தற்போது தெளிவாக உறுதிப்படுத்தப்படவில்லை என்ற போதிலும, பல தொழில் நிறுவனங்கள் 5ஜி பற்றிய சோதனையை முன்வைத்துள்ளன. 
எடுத்துக்காடாக, இணைக்கப்படக்கூடும் சாதனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சாதனங்களுக்குமிடையே தரவுகளை அனுப்பும் தடையைக் குறைப்பது, ஆங்கில மொழியில் Internet of things என அழைக்கப்படும் புதிய தொழில் நுட்பத்தின் வளர்ச்சி முதலியவை, 5ஜி மூலம் நனவாக்கப்படலாம். 
இதனிடையில், சர்வதேச சமூகத்தில் பொதுவாக உருவாக்கப்பட்டுள்ள இலக்கிற்கு இணங்க, 5ஜி தொழில் நுட்பமானது, 2020 ஆண்டில் வணிக பயன்பாட்டுக்கு வரக் கூடும்.