Sunday, November 13, 2011

சோமாலியாவில் பசியால் வாடும் பச்சிளம் குழந்தைகள் - வறுமையின் கொடுமை.

சோமாலியாவில் அண்மைக் காலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம் காரணமாக பல இலட்சம் மக்கள் அகதிகளாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட வறட்சி காரணமாக உணவு உற்பத்தி வீழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது.
இதனால் அகதிகள் உட்பட நாட்டின் வறுமையான பல மக்கள் உணவுப் பற்றாக் குறையால் உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தடுப்பதற்கு உலக சுகாதார அமைப்பு உரிய நடவடிக்கை எடுத்த போதிலும் போஷாக்குக் குறைபாட்டினால் சிறு பிள்ளைகள் இறந்து போவதை முற்றாக தடை செய்ய முடியவில்லை.
இரண்டு மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக் குறைவால் கஷ்டப்படுகின்றனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் போஷாக்குக் குறைவால் உயிர் பிழைப்பது அசாத்தியம் எனப் பெற்றோரினால் கைவிடப்பட்ட ஏழுமாதக் குழந்தையை சுகாதார நிறுவனத்தினால் சிகிச்சை செய்து ஆரோக்கியம் பெற்ற சம்பவம் சோமாலியாவில் இடம்பெற்றதென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்று பலரும் சுகாதார நிறுவனத்தினால் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சோமாலியாவுக்கு மக்கள் நலன்புரி சேவைகளுக்காகப் பெறும் நிதி பற்றாக் குறையாக இருக்கிறதென தெரிவிக்கப்படுகின்றன.
சோமாலியாவின் பஞ்சம் கூடியவரை குறைக்கப்பட்டாலும், மக்கள் இன்னும் உணவுப் பற்றாக் குறைவால் நாள்தோறும் இறப்பை எதிர்நோக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
மின்ஹாஜ் கெடி பாராஹ் என்ற குழந்தை மூன்று மாதங்களுக்கு முன்னர் தங்களது பெற்றோர்களால் குழந்தை உயிர் பிழைப்பது சாத்தியம் இல்லை என நம்பிக்கை இழந்தனர்.
குழந்தையைப் பொறுப்பேற்றவர்கள் உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரனையோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குழந்தை ஆரோக்கியமான குழந்தையாக சுகம் பெற்று பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாய் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகிச்சைக்கு முன்னர் 3 கிலோ கிராம் நிறை இருந்த மின்ஹாஜ் ஆரோக்கியம் பெற்ற பின்னர் 8 கிலோவுக்கும் அதிகமான பாரம் கொண்டவராகவும் அவரது தோற்றத்தில் பொழிவும் அழகும் பிரதிபலித்தன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.