எழுந்து நிற்க தடுமாறும் வயதில் சொந்தக் காலில் நின்ற சிறுமி!
நியூசிலாந்து வெலிங்ரன் நகரில் வசித்துவரும் சைலா சில்பெரி எனும் மூன்று வயது சிறுமி தனது தாயார் இறந்த பின் இரண்டு நாட்களாக தனக்கு தேவையான உணவை சீஸ், வீட்டில் எஞ்சியிருந்த மாவடை என்பவற்றின் மூலம் பூர்த்தி செய்துள்ளார். உறவினர்கள் அதிகாரிகளிடம் தெரியப்படுத்தியதும் அங்கு விரைந்த அவர்களை மூடிய வீட்டிலிருந்த அக் குழந்தை மேசை ஒன்றை எடுத்து வந்து அதன் மீது ஏறி தாழ்ப்பாழை திறந்துள்ளது.