Saturday, November 19, 2011

கல்லீரல் பற்றி அறிந்திருப்பது அவசியம்.

நமது உடம்பில் குறிப்பிடத்தக்க உறுப்புகளில் ஒன்று, கல்லீரல். இது கருஞ்சிவப்பு நிறமுடையது. கல்லீரல், உடம்பில் பெரிய இரத்த வடிகட்டியாகவும், இரண்டாவது பெரிய நோய் எதிர்ப்பு அமைப்பாகவும் இயங்குகிறது.

வயிற்றின் இடதுபக்கத்தில் உதரவிதானத்துக்குக் கீழே இடம்பிடித்திருக்கிறது. இது, சுழற்சியில் இருக்கும் இரத்த செல்களின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.
 நோய்த்தொற்றுகளில் இருந்து உடம்பைக் காக்கிறது.குடல்வாலைப் போல கல்லீரலும் தேவையற்ற ஓர் உறுப்பு என்று பல நூற்றாண்டுகளாகக் கருதப்பட்டு வந்தது.
சோகஉணர்வுக்குக்காரணமான கறுப்பு திரவத்தை கல்லீரல் சுரப்பதாக ஹ்ப்போகிராட்டஸ் என்ற மருத்துவர் ஆய்வாளர் கருதினார். கல்லீரல் முற்றிலும் புதிர்கள் நிறைந்த உறுப்பு என கேலன் என்ற அறிஞர் கூறினார். சீனப் பாரம்பரிய மருத்துவத்தில், அதீதமான கவலைக்குக் காரணமானதாக கல்லீரல் குறிப்பிடப்படுகிறது. ஆங்கில இலக்கியத்தில், கோபம், சோகம் ஆகியவற்றைக் குறிப்பிடப் பயன்படும் சொல்லாக ‘ஸ்பிலீன் (Spleen)’ (கல்லீரல்) உள்ளது.

சாலை விபத்துகள், தடகள விளையாட்டுக்களின் விபத்து அல்லது தாக்குதல்களில் வயிற்றுப் பகுதி காயமடையும்போது கல்லீரல் சேதம் அடைவது பொதுவான அபாயமாக உள்ளது. அந்நிலையில் உடனடியாக அறுவைச்சிகிச்சை செய்யப்படாவிட்டால், கல்லீரலானது அதிர்ச்சிக்கும், மரணத்துக்கும் இட்டுச் செல்லும்.செரிமானத்தின்போதும், அதன்பின்பும் கல்லீரலின் அளவு அதிகரிக்கிறது. மலேரியா காய்ச்சல் ஏற்பட்டால் கல்லீரல் 9 கிலோ வரை பெரிதாகக் கூடும். கல்லீரலின் ஒரு பகுதி மட்டும் நீக்கப்பட்டால் அது மீண்டும் வளர்ச்சி அடையக்கூடும். 1549ல் ஆண்டிரானோ ஸாக்கரெல்லோ என்பவர் முதல்முறையாக கல்லீரலை அகற்றினார். கல்லீரல் அகற்றப்பட்ட நோயாளி, அதன்பின்பும் ஆறாண்டுகள்வாழ்ந்தார்.

கல்லீரல் நீக்கம் (ஸ்பிலீனக்டமி) செய்யப்பட்டால், எதிர்உயிரிகளை உருவாக்கும், இரத்தத்தில் மாசுகளை அகற்றும் உடம்பின் திறன் குறைகிறது. நோய் எதிர்ப்புத்திறன் தாழ்கிறது. ஆனால் விரைவிலேயே ஈரலும், மற்ற உறுப்புகளும் அந்தப் பொறுப்பை ஏற்கின்றன. நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் தங்கள் திறனை அதிகரித்துக்கொள்கின்றன. எனினும், கல்லீரல் குறித்து அதிக கவனம் தேவை.