என்ன ஒரு ஆச்சரியமான படங்கள் இவை... தானும் ஒரு தேர்ந்த பேஸ்போல் விளையாட்டுக்காரன் தான் என்பதை நிரூபிக்கின்றது இந்தப் பூனை.
தன்னிடம் மாட்டுப் பட்ட எலியை வளைந்து நெளிந்து மேலே போடுவதும் விடுவதுமாக சேட்டை செய்கிறது இந்தக் குறும்புக்காரப் பூனை.
2 வயதான இந்தப் பூனையின் உரிமையாளரான Angelo DeSantis என்பவர் தான் மேற்படி படங்களை எடுத்துள்ளார்.
பூனையின் உரிமையாளரான Angelo DeSantis கருத்துத் தெரிவிக்கையில்,
இது ஒரு அரிதான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். எனக்கே வியப்பாக இருக்கின்றது.
"பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகின்றது" என்ற நமது முன்னோர்களின் பழமொழி இந்தப் படங்களுக்குத் தான் நன்றாகப் பொருந்திப் போகின்றது.


