Tuesday, March 1, 2016

ஆர்.ஓ வாட்டருக்கு (R.O Water) மாற்றாக இயற்கை வாட்டர் ஃபில்டரை பயன்படுத்தலாம்!

தங்கம் விற்கக் கூட லோக்கல் நடிகைதான் வருகிறார்... ஆனால் தண்ணீர் விற்க டெண்டுல்கரும் ஹேமமாலினியும் வருகிறார்கள். நீர் அத்தனை பெரிய வணிகமாகிவிட்டது. எளிய மக்களுக்குக்கூட ஆர்.ஓ என்றால் என்னவென்று தெரிகிறதோ இல்லையோ... அதன் மூலம் சுத்திகரிக்கப்பட்டால்தான் அது நல்ல தண்ணீர் என நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஹோட்டலில் கூட ‘ஆர்.ஓ வாட்டரில் சமைத்தது’ என அறிவித்தால்தான் கூட்டம் வருகிறது. ஆனால், ‘‘ஆர்.ஓ., யு.வி என எல்லா சுத்திகரிப்பு முறையும் நம் ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொண்டுதான் இருக்கிறது’’ என்கிறார் சந்திரசேகரன்.
நவீன நானோ டெக்னாலஜியையும் நமது பாரம்பரிய மண்பாண்டக்கலையையும் இணைத்து இயற்கையான குடிநீர் சுத்திகரிப்பு கருவி ஒன்றை உருவாக்கியிருப்பவர் இவர்.